ஹார்முஸ் நீரிணை இன்று ஓப்பன்.. டிரம்ப் அறிவிப்புக்கு பின்பும் இப்படி நடக்குதே.. ஈரான் திட்டம் என்ன..?

அமெரிக்கா - ஈரான் மத்தியிலான பதற்றமான சூழ்நிலை நிலவினாலும் இரு தரப்பு மத்தியில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, கத்தார் மற்றும் பாகிஸ்தான் தொடர்ந்து இரு நாடுகள் மத்தியில் மத்தியஸ்தம் செய்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாகவும், இன்று அல்லது நாளை ஈரான் ஹார்முஸ் நீரிணையை முழுமையாக திறக்கும் என அறிவித்துள்ளார்.

ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டால் வளைகுடா நாடுகளில் இருந்து வெளியேற வர முடியாமல் இருக்கும் கோடிக்கணக்கான பேரல் கச்சா எண்ணெய், எரிவாயு அனைத்தும் வெளியே வரும், இதனால் சப்ளை டிமாண்ட் பிரச்சனை குறைந்து உலக நாடுகளில் எரிபொருள் விலையும், பணவீக்கமும் குறையும்.

 ஹார்முஸ் நீரிணை இன்று ஓப்பன்.. டிரம்ப் அறிவிப்புக்கு பின்பும் இப்படி நடக்குதே.. ஈரான் திட்டம் என்ன..?

ஆனால் தற்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அமெரிக்கா அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பில் ஹார்முஸ் திறக்கப்படும், ஈரானுக்கு ஒப்பந்தம் எட்ட இது கடைசி வாய்ப்பு என அறிவித்த பின்பு கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் சந்தையில் WTI கச்சா எண்ணெய் ஒரு பேரல் 1.13 சதவீதம் வரையில் உயர்ந்து 81.25 டாலராக உள்ளது. இதேபோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.52 சதவீதம் உயர்ந்து 85.04 டாலராக உள்ளது.

டிரம்ப் பேசியது என்ன?

டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் இருந்து செய்தியாளர்களிடம் ஈரான் உடனான பேச்சுவார்த்தை குறித்து பேசும் போது, ஈரான் உடனான பிரச்சனையை 2 கட்டங்களாக தீர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக ஹார்முஸ் நீரிணை முழுமையாக, எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல், அனைவரும் அனுகும் வகையில் நாளை அல்லது நாளை மறுநாள் திறக்கப்பட உள்ளது. இதுதான் எங்களுடைய முக்கியமான இலக்காவும் உள்ளது.

2வது கட்டத்தில் ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து பேச உள்ளோம், ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும், இதற்கான பேச்சுவார்த்தை 2வது கட்டத்தில் துவங்கும். முதல் கட்டத்தை காட்டிலும். 2வது கட்ட பணிகளை முடிக்க சில காலம் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார் டிரம்ப்.

இதேபோல் ஈரான் மீது திட்டமிட்டு இருந்த தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். இதன் மூலம் பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலையை நாங்கள் உருவாக்கியுள்ளோம். ஆனால் ஈரானுக்கு அமைதி ஒப்பந்தத்தை கையில் எடுக்க இதுதான் கடைசி வாய்ப்பு எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் 5 மாத போரை முடிக்க வேண்டுமா வேண்டாமா என்பதை ஈரான் தான் முடிவு செய்ய வேண்டும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் கொடுக்கும் நெருக்கடி

இதேவேளையில் ஈரான், அமெரிக்காவுடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் இறங்க தயாரில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஓமன் நாட்டின் வாயிலாக இப்பேச்சுவார்த்தையை கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது. இதனால் பாகிஸ்தான் கழற்றிவிடப்பட்டு உள்ளது.

அடுத்தாக ஈரான் நாட்டின் முக்கிய ராணுவ ஆலோசகரான Mohsen Rezaei கூறுகையில், அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை நீக்கவில்லை எனில் ஹார்முஸ் நீரிணையில் இருக்கும் ராணுவ கப்பல்கள், ராணுவ அதிகாரிகள் கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+