உலகின் 20% எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கு முக்கியமான ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடுவதாக அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டத்தில் முடிவு செய்து ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், இது மட்டும் நடந்துவிட்டால் உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் என கணிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், முதல் எச்சரிக்கை மணியை ஆஸ்திரேலியா அடித்துள்ளது.
ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை திட்டமிட்டபடி மூடினால் ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 2.50 ஆஸ்திரேலிய டாலராக உயரலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டாலும் அதற்கு சர்வதேச சந்தையில் நிர்ணயம் செய்யப்படும் விலையில் தான் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இது மட்டும் அல்லாமல் அந்நாட்டில் மின்சாரம் மற்றும் எரிவாயு விலைகளும் கடுமையாக உயரும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. காரணம் அந்நாட்டில் மொத்த மின்சார உற்பத்தியில் 10 சதவீதத்தை எரிவாயு மூலமாக தயாரிக்கப்படுகிறது.
இந்த அச்சுறுத்தல் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உலக நாடுகளின் பணவீக்கத்தை அதிகரிக்க செய்யும். இது மட்டும் அல்லாமல் இதனால் பொருளாதார வளர்ச்சியும் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வது போல் இந்தியாவிலும் இதன் விலை உயருமா..?
ஹோர்முஸ் ஜலசந்தி: உலக எரிசக்தியின் ஹப்
ஹோர்முஸ் ஜலசந்தி, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து உலக நாடுகளுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பாதையாக விளங்குகிறது. இது உலகளவில் வர்த்தகம் செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவில் சுமார் 20% இந்த வழித்தடத்தில் தான் அனுப்பப்படுகிறது.
இத்தகைய முக்கியமான வழித்தடத்தை தான் ஈரான் நாடாளுமன்றம்மூட முடிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஈரான் இராணுவம் இதை செயல்படுத்துமா என்பது தெளிவாக இதுவரையில் தெரியவில்லை. ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால், உலகளவில் எரிசக்தி விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டு விலை உயரும்.
இதுவே இந்தியாவை எடுத்துக்கொண்டால், ஜூன் மாத துவகத்திலேயே இந்தியா தனது கச்சா எண்ணெய் கொள்முதலை அமெரிக்காவிடமும், ரஷ்யாவிடமும் அதிகரித்துள்ளது. இதேபோல் கூடுதல் தேவைக்கு வளைகுடா நாடுகளும், சவுதி அரேபியாவும் உள்ளது. இதனால் இந்தியாவில் விலை உயர்வுக்கான அபாயம் குறைவு. இதோடு மத்திய அரசு, பெட்ரோல், டீசல் மீது அதிகப்படியான வரியை விதித்திருக்கும் காரணத்தால் இந்த விலை உயர்வு பெரிய அளவில் பாதிக்காது எனவும் கணிப்புகள் நிலவுகிறது.
இதேபோன்ற நிலைமை, 2022-ல் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தபோது நடந்தது. ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான மேற்கத்திய நாடுகளின் தடைகள் உலகளவில் எரிசக்தி பற்றாக்குறையை ஏற்படுத்தியது. இதனால் எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்து மொத்த ஐரோப்பிய நாடுகளையும் ஸ்பிக்க வைத்தது. தற்போது, ஈரானின் முடிவு சர்வதேச எரிசக்தி விலைகளை உயர்த்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
More From GoodReturns

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

பக்ரைனில் ஈரானின் சைபர் போர்! அமேசான் கிளவுட் முடக்கம்? அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலா?

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

சிலிண்டர் விலை: 3 மாதங்களில் இல்லாத விலை உயர்வு..!! எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!

Germany: கிளீன் எனர்ஜி எல்லாம் இனி வேலைக்கு ஆகாது.. பழையப்படி நிலக்கரிக்கு போக வேண்டியது தான்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?



Click it and Unblock the Notifications