சுதா மூர்த்தி சமீபத்தில் ஹிந்தி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தி கபில் சர்மா ஷோவில் கலந்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தனது வாழ்வில் பல முக்கிய மற்றும் சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார்.
இன்போசிஸ் நாராணயமூர்த்தி மற்றும் அவருடைய மனைவி சுதா மூர்த்திக்கு ஒரு மகன், ஒரு மகள். மகளின் பெயர் அக்ஷதா மூர்த்தி இந்த பெயர் உங்களுக்கு எங்கோ கேட்டது போல் இருந்தால் நீங்கள் நினைத்தது சரி தான். பிரிட்டன் பிரதமரும் இந்திய வம்சாவளி-யை சேர்ந்தவருமான ரிஷி சுனக்-ன் மனைவி தான் அக்ஷதா மூர்த்தி.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரிட்டன் நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்றதில் இருந்து அக்ஷதா மூர்த்தி மற்றும் இன்போசிஸ் நாராணயமூர்த்தி குடும்பம் தொடர்ந்து செய்திகளில் இடம்பெற்று வருகிறது.
இதன் உச்சம் சுதா மூர்த்தி பிரபலமான தி கபில் சர்மா ஷோவில் கலந்துக் கொண்டது. இந்த நீகழ்ச்சியில் சுதா மூர்த்தி பேசுகையில், "ஒருமுறை நான் லண்டன் சென்றிருந்தபோது, இமிகிரேஷன் அதிகாரி லண்டனில் எனது குடியிருப்பு முகவரியைக் கேட்டு, இமிகிரேஷன் படிவத்தில் எழுத கூறினார்கள். என்னுடன் என் மூத்த சகோதரியும் இப்போது இருந்தார்.
நான் பிரதமரின் அதிகாரப்பூர்வ வீடான '10 டவுனிங் ஸ்ட்ரீட்' என்று எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என்னுடைய மகனும் லண்டனில் தான் வசிக்கிறார், ஆனால் மகன் வீட்டின் முழு முகவரி எனக்கு நினைவில் இல்லை. வேறு வழி இல்லாமல் நான் இறுதியாக 10 டவுனிங் ஸ்ட்ரீட் என எழுதினேன்..
இதை பார்த்த இமிகிரேஷன் அதிகாரி என்னை முழுவதுமாக நம்பாமல் என்ன ஜோக் பன்றீங்களா?! என்று கேட்ட நிலையில் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன் என கூறி விஷயத்தை விளக்கியுள்ளார். தான் அக்ஷதா மூர்த்தியின் தாய் என்றும், பிரிட்டன் நாட்டின் பிரதமர் ரிஷி சுனக்-ன் மாமியார் என்றும் தெரிவித்துள்ளார்.

சுதா மூர்த்தி பல ஆயிரம் கோடி ரூபாயக்கு அதிபதியாக இருந்தாலும் மிகவும் எளிமையான தோற்றத்துடன், எவ்விதமான ஆடம்பரமும் இல்லாமல் இருப்பதால், பெரும்பாலான மக்களுக்கு அவர் யார் என்பதை பல நேரம் தெரியாது. "72 வயதான, எளிமையான பெண்ணான நான், பிரதமரின் மாமியாராக முடியும் என்று யாரும் நம்பவில்லை," என்று தி கபில் சர்மா ஷோவில் சுதா மூர்த்தி கூறினார்.
சுதா மூர்த்திக்கு சமீபத்தில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூஷன் அவருடைய சமூக சேவை பணிகளை பாராட்டி வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அக்ஷதா மூர்த்தி நேரில் வந்து கலந்துக்கொண்டார்.


Click it and Unblock the Notifications