மோடியின் 2வது ஆட்டம் ஆரம்பம்.. கருப்புப் பண ஊழல்வாதிகளுக்கு சுவிஸ் வங்கி திடீர் நோட்டீஸ்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கருப்பு பண விவகாரத்தில் சுவிஸ் பேங்க் 25 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாம். அதிலும் கடந்த வாரத்தில் மட்டும் 11 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதம் சுவிஸ் பேங்க்.

 

இதுவரை இந்தியா ஊழல்வாதிகளின் கருப்பு பணம் சுவிஸ் வங்கியில் குவிக்கப்பட்டு இருப்பதை கடந்த முறை மோடி ஆட்சிக்கு வந்த பின்னரே களையத் தொடங்கினார். அதற்காக பல வெளி நாடுகளின் ஆதரவை நாடியும் இருந்தார். இந்த நிலையில் சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருப்போர் பட்டியலை அனுப்பு சுவிஸ் வங்கிக்கும் இந்திய அரசுக்கும் ஏற்கனவே பேச்சு வார்த்தை நடந்து வந்தது.

எனினும் சுவிஸ் வங்கி கருப்பு பணவிவகாரத்தில், இந்தியர்களின் பணம் வைத்திருப்போர் பட்டியியலை அரசுக்கு கொடுத்ததாக கருதப்பட்டு வந்த நிலையில் ஏதும் மாற்றம் இருந்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சுவிஸ் வங்கி 25 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், அதிலும் கடந்த ஏப்ரல் 21 தேதியில் மட்டும் 11 நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளதாகவும் சுவிஸ் வங்கி அறிவித்துள்ளது.

சீக்ரெட் கோடு வோர்டு மட்டுமே வெளியீடு

சீக்ரெட் கோடு வோர்டு மட்டுமே வெளியீடு

எனினும் சுவிஸ் வங்கி வெளியிட்ட இந்த அறிக்கையில், பணம் வைத்திருப்போர் பெயரின் சில எழுத்துகளையும், அவர்களின் பிறந்த வருடத்தையும் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சற்று வருத்தத்தை கொடுத்தாலும் கூடிய விரைவில் அனைத்து விவரங்களும் தெரிய வரும் என்பதில் சந்தேகமில்லை.

30 நாட்கள் மட்டுமே கெடு

30 நாட்கள் மட்டுமே கெடு

சிலரின் பெயர்கள் மட்டுமே முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளதுடன், நோட்டீஸும் அனுப்பட்டுள்ளது. இந்த நிலையில் நோட்டீஸ் கிடைக்கப்பட்டவர்கள் உரிய ஆதரங்களுடன் அடுத்த 30 நாட்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும், அப்படி பதில் அளிக்காத பட்சத்தில் அந்த விவரங்கள் இந்திய அரசுடன் பகிந்து கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளதாம் சுவிஸ் வங்கி.

என்ன தான் இருக்கு சுவிஸ் வங்கியில்
 

என்ன தான் இருக்கு சுவிஸ் வங்கியில்

சரி அப்படி என்னதான் சுவிஸ் வங்கியில் இருக்கிறது? ஏன் அனைவரும் சுவிஸ் வங்கியில் தேடி சென்று முதலீடு செய்கிறார்கள் என்பது குறித்த ஒரு அலசலை பார்க்கலாம். இந்தியாவில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள், பெரும்பாலும் அந்த பணத்தை தங்களது சுவிஸ் வங்கி கணக்கில் தான் வைத்திருக்கிறார்கள். எனவே கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பட்டியலை வெளியிட வேண்டுமென எதிர்க்கட்சிகளும், அவ்வப்போது ஆளும் கட்சியை கேட்டுக் கொண்டே தான் வருகிறது. எனினும் அதை மறுத்து வந்த நிலையில் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்த நிலையில் இந்த விவகாரம் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.

இந்தியா மட்டும் முதலீடு செய்யவில்லை

இந்தியா மட்டும் முதலீடு செய்யவில்லை

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்தியர்கள் மட்டுமின்றி, உலக நாடுகளில் அனைத்திலிருந்தும் சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யப்படுகிறதாம். அதிலும் பெரும் பணக்காரர்கள் விரும்பி முதலீடு செய்யும் சுவிஸ் வங்கியில், அப்படி என்னதான் இருக்கிறது?

யார் வேண்டுமானாலும் கணக்கு துவங்கிக் கொள்ளலாம்

யார் வேண்டுமானாலும் கணக்கு துவங்கிக் கொள்ளலாம்

சுவிஸ் வங்கியில் யார் வேண்டுமானாலும் கணக்கு துவங்க முடியுமாம். மேலும் அந்த வங்கியில் முதலீடு செய்யப்படும் பணம் குறித்து, எந்தவிதமான கேள்வியும் கேட்கமாட்டார்களாம். சுவிஸ் வங்கியில் வட்டி என்பது மிகக் குறைவு தானாம். ஆனால் வங்கியில் கணக்கு துவங்குவதற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லையாம். மேலும் பண பரிவர்த்தனைகள் அனைத்தையும் ஆன்லைனிலேயே செய்துவிட முடியுமாம். அதோடு அங்கு முதலீடு செய்யப்படும் பணத்துக்கு வரி கிடையாதாம். அதனால் பண முதலைகள் பணத்தை குவிக்கிறார்களோ.

எந்த விதமான நிபந்தனையும் இல்லை

எந்த விதமான நிபந்தனையும் இல்லை

வங்கி கணக்கு எண் மட்டும் இருந்தாலே போதுமாம், பணத்தை ஈஸியாக வெளியே எடுத்துவிட முடியுமாம். அதை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாமாம். அதற்கு எந்தவிதமான நிபந்தனையும் கிடையாதாம். மேலும் சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யப்படும் தொகை யாருடையது என்ற தகவலை, எந்த காரணத்தை முன்னிட்டும் வெளியிடமாட்டார்களாம். அதோடு அந்த வங்கியின் ஊழியர்களும் அதுகுறித்து வெளியே பேசக் கூடாது. ஏதாவது பேசினால் அது சட்டப்படி தவறாம். சுமார் 300 ஆண்டுகளாக இந்த தகவல்களை சுவிஸ் வங்கி பாதுகாத்து வருகிறதாம்.

விலைவாசி உயர்வே இருக்காதாம்

விலைவாசி உயர்வே இருக்காதாம்

இதற்கு காரணம் அங்கு டேக்ஸ் கிடையாதாம்? ஏன் டெக்ஸ் இல்லை என்று பார்க்கையில் சுவிட்சர்லாந்துக்கு, அதிக அளவில் வெளிநாட்டு பயணிகள் வந்து செல்வார்களாம். இதனால் பணப்புழக்கம் தாராளமாக இருக்குமாம். அதோடு அங்கு விலைவாசி உயர்வு என்பதே அதிகம் இருக்காதாம். இதன் காரணமாக அந்த நாட்டு பணத்தின் மதிப்பு எப்போதுமே வலிமையானதாக இருந்தும் வருகிறதாம். இதனால் பணத்தின் மதிப்பு குறைய வாய்ப்பு இல்லையாம்.

வெளினாடுகளில் $2.5 லட்சம் மட்டுமே அனுமதி

வெளினாடுகளில் $2.5 லட்சம் மட்டுமே அனுமதி

இப்படி பல காரணங்கள் இருப்பதால், உலக நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள் சுவிஸ் வங்கியில் தங்களது பணத்தை முதலீடு செய்ய ஆர்வம் காட்டு வருகின்றனர். அதிலும் இந்திய அரசின் அனுமதியோடு ஒவ்வொரு வருடமும் 2.5 லட்சம் டாலர் அளவுக்கு வெளிநாடுகளில் முதலீடு செய்ய முடியும். முதலீட்டு விவரத்தை வருமான வரி தாக்கலின் போது குறிப்பிட வேண்டும்.

வரையறைக்கும் அதிகமாக முதலீடு

வரையறைக்கும் அதிகமாக முதலீடு

ஆனால் அதிக அளவு பணம் வைத்திருப்பவர்கள் சிலர், இந்த வரையறைக்கும் அதிகமாக முதலீடு செய்கிறார்கள். அந்த முதலீடு குறித்து எந்தவிதமான தகவலும் தெரிவிப்பதில்லை. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பின்னரே, கடந்த சில வருடங்களாக, இந்திய அரசு கறுப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வந்த நிலையில் தற்போது அந்த முயற்சிக்கு பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

பணம் விவரங்களை தரேன்

பணம் விவரங்களை தரேன்

கறுப்பு பணத்தை மீட்பதற்காக, சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைக்க கடந்த 2011 ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் வரி ஏய்ப்பு செய்த கறுப்பு பணம் என ஆதாரத்துடன் தெரிவித்தால், அந்த வாடிக்கையாளரின் விவரத்தை சுவிஸ் வங்கி இந்தியாவுக்கு வழங்கும் எனவும் கூறிவந்தது. இந்த நிலையில் இப்படி ஒரு நடவடிக்கையை யாரும் எதிர்பாரதது என்றாலும் மக்களின் பணம் ஒரே இடத்தில் குவிந்து கிடப்பது தவிர்க்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Swiss bank notice 11 Indians get notices in a day

Since March, at least 25 notices have been issued by the Swiss bank to Indian clients. Also within 30 days with necessary documentary proof to support their case against providing 'administrative assistance' to India. If not providing means sharing of their banking and other financial details to india.
Story first published: Monday, May 27, 2019, 9:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X