ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி எத்தனை பேருக்கு தெரியும், ஹாலிவுட்டில் The Voyeurs, Eden, Anyone but you, Euphoria போன்ற பல படங்கள், டிவி ஷோக்களில் நடத்து பிரபலமானவர். சமீபத்தில் அமெரிக்கன் ஈகிள் அவுட்ஃபிட்டர்ஸ் என்னும் அமெரிக்க ஆடை விற்பனை நிறுவனத்திற்காக சிட்னி ஸ்வீனி ஒரு விளம்பரத்தில் நடித்து இருந்தார். இந்த விளம்பரம் மக்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பையும், விமர்சனத்தையும் சந்தித்த காரணத்தால் இந்நிறுவனத்தின் வணிகமும், பங்கு விலையையும் தடாலடியாக உயர்த்தியுள்ளது.
சிட்னி ஸ்வீனி-யின் இந்த விளம்பரம் இன்றைய இளம் வாடிக்கையாளர்களை அமெரிக்கன் ஈகிள் பிராண்ட் ஈர்த்துள்ளது பெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது. இப்படி என்ன நடந்தது..? பங்கு விலை தடாலடியாக உயரும் அளவுக்கு இந்த விளம்பரத்தில் என்ன இருந்தது..?

விளம்பரத்தின் தாக்கம்
ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்ட "சிட்னி ஸ்வீனி ஹாஸ் கிரேட் ஜீன்ஸ்" என்ற விளம்பர பிரச்சாரம், அமெரிக்கன் ஈகிள் அவுட்ஃபிட்டர்ஸ் நிறுவனத்துக்கு பெரும் வெற்றியைத் தந்துள்ளது. இந்த விளம்பர் ஆன்லைனில் 40 பில்லியன் இம்ப்ரெஷன்களை உருவாக்கியது, இது நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பையும், பிரபலத்தையும் உலகளவில் விரிவாக்கியது.
இதோடு சிட்னி ஸ்வீனியுடன் இணைந்து வெளியிடப்பட்ட ஆடை கலெக்ஷன், எப்போதும் இல்லாமல் ஒரு வாரத்துக்குள் முழுமையாக விற்றுத் தீர்ந்தது, சில பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்ட ஒரே நாளில் காலியானது கூத்தும் நடந்துள்ளது. இது அனைத்தும் இந்த விளம்பரத்தின் மூலம் நடந்துள்ளது.
இதன் விளைவாக, ஆறு வாரங்களுக்குள் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய வாடிக்கையாளர்களை அமெரிக்கன் ஈகிள் நிறுவனம் பெற்றதுள்ளது. இந்த விளம்பரம் மூலம் சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் இருந்த போதிலும், நிபுணர்கள் இந்த விளம்பரம் நிறுவனத்தின் பிராண்டை புத்துயிர் பெறச் செய்ததாகவும், இளம் வாடிக்கையாளர்களை ஈர்த்ததாகவும் பாராட்டுகின்றனர்.
விமர்சனம்
இந்த விளம்பரம் வெள்ளையின மக்களை ஆதரவாக கொண்டும், Make America Great Again கொள்கைக்கு ஆதாரவு அளிக்கும் வகையில் இருப்பதாக நார்த்வெஸ்டர்ன் பல்கலைகழக பேராசிரியர் ஷாலின் ஷங்கர் தெரிவத்துள்ளார். சர்ச்சைக்குரிய வீடியோ கீழே உள்ளது.
அமெரிக்கன் ஈகிள் நிதியியல் முடிவுகள்
அமெரிக்கன் ஈகிள் அவுட்ஃபிட்டர்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய நிதி அறிக்கையில், சிட்னி ஸ்வீனி-யின் விளம்பரம் மற்றும் சிட்னி ஸ்வீனியின் கலெக்ஷன் ஆகியவற்றின் மூலம் வலுவான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் வருவாய் 1.28 பில்லியன் டாலர்களாக இருந்தது, இது முந்தைய ஆண்டை விட 1 சதவீதம் குறைவு என்றாலும், ஆய்வாளர்களின் சராசரி எதிர்பார்ப்பான 1.24 பில்லியன் டாலர்களை விட அதிகம். ஒரே கடையின் விற்பனை 1 சதவீதம் குறைந்தது, ஆனால் இது எதிர்பார்க்கப்பட்ட 2.2 சதவீத வீழ்ச்சியை விட சிறப்பானது. இந்நிறுவனத்தின் உள்ளாடை மற்றும் கேஷவல் பிராண்டான Aerie brand சிறப்பான வர்த்தகத்தை இக்காலக்கட்டத்தில் பதிவு செய்துள்ளது.
பங்கு செயல்திறன்
சிட்னி ஸ்வீனி விளம்பரத்தின் தாக்கத்தால், அமெரிக்கன் ஈகிள் அவுட்ஃபிட்டர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் செப்டம்பர் மாத தொடக்கத்தில் 30 சதவீதம் வரை உயர்ந்தது, இது 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய ஒரு நாள் உயர்வு.
புதன்கிழமை நிதியியல் முடிவுகள் வெளியிட்ட பிறகு, பங்கு விலை 25 சதவீதம் உயர்ந்தது, அமெரிக்க நேரத்தின் படி வியாழக்கிழமை காலையில் 16.75 டாலர்களுக்கு மேல் வர்த்தகமானது.
அமெரிக்கன் ஈகிள் அவுட்ஃபிட்டர்ஸ் நிறுவனம், சிட்னி ஸ்வீனி விளம்பர வெற்றியை தொடர்ந்து என்எஃப்எல் நட்சத்திர வீரர் டிராவிஸ் கெல்சே உடன் மற்றொரு ஆடை கலெக்ஷனை அறிமுகப்படுத்த உள்ளது.


Click it and Unblock the Notifications