சீனா - தைவான் மத்தியிலான போர் பதற்றம் தொடர்ந்து அதிகமாகி வரும் வேளையில், அந்நாட்டிற்கு ஆதரவாக நிற்கும் அமெரிக்காவில், விரைவில் நடக்க இருக்கும் பொதுத் தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் சீனா, தைவான் மீது படையெடுக்கும் அச்சம் உள்ளது. இதேவேளையில் அமெரிக்கத் தேர்தலுக்கு முன்பு சீனா மீது பெரும் தடை விதிக்க அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் சீனா-வுக்கு செக் வைக்கும் வகையில் தைவான் நிறுவனங்கள் முக்கிய ஏற்பாடுகள் செய்துள்ளது. மேலும் சீனா தைவான் மீது போர் தொடுத்தால் ஒன்னும் கிடைக்காது என்ற கையில் அமெரிக்கா துணையுடன் பெரும் தொழிற்சாலைகள் ரகசிய முன்னேற்பாடுகள் செய்து வருகிறது.

புதிய அதிபர்: தைவானின் புதிய அதிபராக William Lai திங்கட்கிழமை பதவியேற்றியதை தொடர்ந்து, சீனாவை மிரட்டலை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், தைவானின் ஜனநாயகத்தை மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சீனா பதிலடி: லை அவர்களின் இந்த பேச்சுக்குச் சீனா உடனடியாக பதிலளித்தது. "தைவான் தனிநாடு என்பது ஒரு முட்டுச்சந்து" என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இரு நாடுகள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து நீடிக்கிறது.
முக்கிய துறை: இந்த நிலையில் தைவான் மீது சீனா படையெடுக்க முயற்சி நடந்தால், அங்குள்ள மிகவும் சிக்கலான மற்றும் உலகில் வேறு எங்கும் இல்லாத சிப் தயாரிப்பு இயந்திரங்களைத் தொலைவிலிருந்தே செயலிழக்கச் செய்யும் திறன் அந்நாட்டில் இயங்கி வரும் நெதர்லாந்தைச் சேர்ந்த ASML Holding NV மற்றும் தைவான் நிறுவனமான Taiwan Semiconductor Manufacturing Company (TSMC) ஆகிய நிறுவனங்களுக்கு உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
செமிகண்டக்டர் சப்ளை செயின்: தைவான் உலகளாவிய அளவில் செமிகண்டக்டர் (Semiconductor) விநியோக சங்கிலியில் மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தும் காரணத்தால், தைவான் மீது சீனாவின் படையெடுப்பு பெரிதும் பாதிக்கும் என்ற அச்சம் உலகளவில் எழுந்துள்ளது.

நெதர்லாந்து நிறுவனம்: உலகின் மிகவும் மேம்பட்ட சிப் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் முன்னோடியாகத் திகழும் ASML நிறுவனத்தின் EUV (Extreme Ultraviolet Lithography) இயந்திரங்கள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த இயந்திரங்களை வாங்கும் முதன்மை வாடிக்கையாளர்களில் ஒன்றாக TSMC நிறுவனம் இருக்கிறது.
தைவான் நிறுவனம்: TSMC நிறுவனம் உலகின் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட மிகவும் மேம்பட்ட சிப்களை உற்பத்தி செய்கிறது. எனவே, தைவான் மீது படையெடுப்பு நடந்தால், உலகளாவிய அளவில் தொழில்நுட்ப சந்தை பெரும் பாதிப்பைச் சந்திக்க நேரிடும்.
அமெரிக்கா அச்சம்: அமெரிக்க அரசாங்கம் இந்த சூழலைத் தீவிரமாகக் கவனித்து வருகிறது, தைவான் மீதான படையெடுப்பு நடந்தால், அது உலகளாவிய செமிகண்டக்டர் விநியோக சங்கிலியை முற்றிலுமாக சீர்குலைத்துவிடும் என்று அமெரிக்க அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

உலக பொருளாதாரம்: திறன்பேசிகள், கம்ப்யூட்டர்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப கருவிகளின் தயாரிப்பில் சிப்கள் மூளையாக இயங்குகிறது. எனவே, தைவான் மீதான தாக்குதல் உலகளாவிய பொருளாதாரத்தையே பாதிக்கும் அபாயம் உள்ளது.
தைவான் ஆதிக்கம்: தைவான் உலகின் மேம்பட்ட செமிகண்டக்டர் சிப் தயாரிப்பில் பெரும்பான்மையானவற்றை உற்பத்தி செய்யும் தளமாக இருப்பதால், சீனாவின் பகைமை நடவடிக்கைகள் தீவிரமடைந்து தாக்குதலாக மாறினால் என்ன நடக்கும் என்பது குறித்து அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் நெதர்லாந்து மற்றும் தைவான் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளிடம் கவலை தெரிவித்துள்ளனர் என்று இரு நபர்கள் பெயர் வெளியிடாமல் தெரிவித்தனர்.
ரிமோட் ஆக்சஸ்: நெதர்லாந்து அரசாங்கம் இந்த அச்சுறுத்தல் குறித்து ASML நிறுவனத்திடம் கேட்டபோது, இந்த இயந்திரங்களைத் தொலைவிலிருந்தே செயலிழக்கச் செய்யும் திறன் தங்கள் நிறுவனத்திற்கு இருப்பதாக ASML நிறுவன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர் என்று மற்ற இருவர் தெரிவித்தனர். மேலும், சீனா-வின் படையெடுப்பு குறித்து நெதர்லாந்து அரசாங்கம் ஏற்கனவே சோதனை முறையில் இயக்கி பரிசோதனை செய்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
TSMC அதிரடி பதில்: இதை தொடர்ந்து TSMC தலைவர் மார்க் லியு செப்டம்பர் மாதம் CNN செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தைவான் மீது படையெடுப்பு நடந்தால், அவர்களது நிறுவனத்தின் சிப் தயாரிப்பு இயந்திரங்கள் செயல்படாதபடி இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
"யாராலும் TSMC ஐ கைப்பற்றிக் கட்டுப்படுத்த முடியாது," என்று லியு கூறினார். " மேலும் ராணுவ தாக்குதல் நடந்தால், TSMC தொழிற்சாலை இயங்க முடியாதபடி ஆக்குவோம்." என்றும் உறுதி அளித்துள்ளார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இரு நிறுவனங்களும் தொலைவிலிருந்தே இயந்திரங்களைச் செயலிழக்கச் செய்யும் தொழில்நுட்பம் இருப்பதை உறுதிப்படுத்தினாலும், அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தெளிவாக இல்லை. மேலும் ASML மற்றும் TSMC நிறுவனங்கள் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இலக்கு ஒன்னு தான்: என்ன நடந்தாலும் TSMC மற்றும் ASML நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்பம் சீனா கைகளுக்கு சென்றுவிடக் கூடாது என்பதில் இரு நிறுவனங்களும் உறுதியாக உள்ளது. இதேபோல் அமெரிக்காவும் இதை ஒரு முறைக்கு இரு முறை உறுதி செய்துள்ளது.
தைவானின் புதிய அதிபர் மிரட்டல்: இதற்கிடையில் தைவானின் புதிய அதிபரான William Lai, "சீனா தனது படைகளைத் திரும்பப் பெற்று, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்" என்று சீன அரசாங்கத்தை வலியுறுத்தினார். தைவான் தனது சொந்த ஜனநாயக ஆட்சியைக் கொண்டிருப்பதைச் சீனா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சீனாவின் டார்கெட்: சீனா நீண்ட காலமாகத் தைவான் நாட்டை தனது சொந்தமானது என கருதி வருகிறது. ஆனால், தைவான் தனிநாடாகவே இருக்க விரும்புகிறது. இந்த பிரச்சினை காரணமாக, இரு தரப்பினரும் பதற்றமான நிலையில் இருந்து வருகின்றனர்.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications