வாங்கோ ஜி, வாங்கோ ஜி.. 1 டிரில்லியன் டாலர் ஆசை காட்டி அமெரிக்காவை இழுக்கும் தாலிபான்கள்!

ஆப்கானிஸ்தான் நாட்டை ஆளும் தாலிபான் அரசு அமெரிக்காவிடம் மிக முக்கியமான ஆஃப்ரை முன்வைத்துள்ளது. சுமார் 20 ஆண்டுகள் ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் அல்லாத அரசு ஆண்டது மட்டும் அல்லாமல் வர்த்தகம், முதலீடு, உள்கட்டமைப்பு என படிப்படியாக முன்னேறி வந்தது.

இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் 2021ல் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறியதை தொடர்ந்து தாலிபான்கள் அந்நாட்டை கைப்பற்றியது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் கடந்த 20 வருடத்தில் அடைந்த முன்னேற்றத்தை இழந்தது மட்டும் அல்லாமல் தாலிபான்களின் கடுமையான கட்டுப்பாடு காரணமாக அந்நாட்டு மக்கள் பல நெருக்கடிகளை எதிர்கொண்டு பின்தங்கிய நிலையில் உள்ளனர்.

வாங்கோ ஜி, வாங்கோ ஜி.. 1 டிரில்லியன் டாலர் ஆசை காட்டி அமெரிக்காவை இழுக்கும் தாலிபான்கள்!

இத்தகைய ஆப்கானிஸ்தான் பொருளாதாரத்திலும், வர்த்தகத்திலும் முன்னேறி உலகளாவிய வர்த்தகத்தில் பங்கேற்க வேண்டும் என்ற திட்டத்துடன் மிக முக்கியான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

ஆமெரிக்கா உடனான நட்புறவை மீண்டும் பெறவும், ஆப்கானிஸ்தான் மீதான தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளை நீக்கவும், முடக்கி வைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் சொத்துக்களை விடுவிக்கவும் தன் நாட்டில் இருக்கும் 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான கனிவளத்தை பயன்படுத்திக்கொள்ள அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது தாலிபான் அரசு.

தாலிபான்கள், ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றி 5 ஆண்டுகள் ஆன நிலையில் தாலிபானின் வெளியுறவு துறை அமைச்சரான அமீர்கான் முத்தாகி சமீபத்தில் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், ஆப்கானிஸ்தான் நாட்டின் சுரங்கம், உள்கட்டமைப்பு, விவசாயம், வர்த்தக துறைகளில் அமெரிக்க முதலீட்டாளர்களுக்கான கதவுகள் திறக்கப்பட்டு உள்ளது. மேலும் அமெரிக்கா - ஆப்கானிஸ்தான் மத்தியிலான உளவை 20 ஆண்டுகால போர் காலத்தை அடிப்படையாக கொண்டு கணக்கிடாமல் எதிர்காலக்தை அடிப்படையாக கொண்டு பார்க்க வேண்டும் என அமீர்கான் முத்தாகி தெரிவித்துள்ளார்.

மேலும் ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான கனிமவளங்கள் இருப்பதாக அநெரிக்கா அரசு நடத்திய புவியியல் ஆய்வு தரவுகள் காட்டுகிறது, இதை முன்னாள் ஆப்கான் அரசும் உறுதி செய்துள்ளது.

அந்நாட்டில் முக்கியமாக காப்பர், இரும்பு, நியோரியம், கோபால்ட், தங்கம், லித்தியம் ஆகியவை அதிகமாக உள்ளது. 2021 முதல் அதாவது தாலிபான்கள் ஆப்கான் நாட்டை கைப்பற்றிய பின்பு அந்நாட்டின் சுரங்க துறையில் முக்கியமாக தங்கம், ரத்தின கற்கள், க்ரோமைட் போன்றவற்றை எடுக்க சீனா, ஈரான் இணைந்து சுமார் 7 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்துள்ளது.

இதன் வாயிலாக தற்போது அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீட்டை ஈர்க்க அந்நாட்டின் பொருளாதார கொள்கையும் திருத்தப்பட்டு உள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்றளவும் சுமார் 14 மில்லியன் மக்கள் பசியில் தவித்து வருகின்றனர், உலகில் மிகவும் ஏழ்மையான நாடாகவே உள்ளது.

இதேவேளையில் தாலிபான் அரசு பெண்கள், பெண் குழந்தைகள் மீதான கட்டுப்பாடுகள் சர்வதேச அளவில் பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+