சைரஸ் மிஸ்திர்-ரத்தன் டாடா மத்தியிலான பிரச்சனையில் கடைசியாக பிரிட்டன் நாட்டில் இருக்கும் டாடா ஸ்டீல் வர்த்தகம் 100 மில்லியன் பவுண்டுக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. யாருக்கு தெரியுமா.?
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழும நிறுவனமான டாடா குரூப் பிரிட்டன் சந்தையில் இருக்கும் டாடா ஸ்டீல் நிறுவனத்தை முழுமையாக லிபெர்ட்ரி ஹவுஸ் குரூப் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டன் சந்தையில் இருக்கும் டாடா நிறுவனத்தின் ஸ்டீல் தயாரிப்பு தொழிற்சாலை மற்றும் அதன் வர்த்தகத்தைக் கைப்பற்ற பல நிறுவனங்கள் போட்டிப்போட்ட நிலையில் டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் இதனை லிபெர்ட்ரி ஹவுஸ் குரூப் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
டாடா ஸ்டீல் மற்றும் லிபெர்ட்ரி ஹவுஸ் குரூப் மத்தியில் செய்யப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் படி 100 மில்லியன் பவுண்டு மதிப்பிலான தொகைக்கு இந்நிறுவனத்தை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மேற்படியான பேச்சுவார்த்தைகளில் இரு நிறுவனங்களும் ஈட்டுப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் முழுமை அடைய இரு நிறுவனங்களின் நிர்வாகக் கூட்டமும் சில ஒப்புதல்களை வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி வெளியேறிய நிலையில் இடைக்காலத் தலைவர் பதவியில் ரத்தன் டாடா நியமிக்கப்பட்டார். ரத்தன் டாடா இடைக்காலத் தலைவர் பதவியில் அமர்ந்த பின் பிரிட்டன் டாடா ஸ்டீல் விற்பனை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதாகவும், அடுத்த 4 வாரத்தின் இதன் விற்பனை குறித்து முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார். இதனால் சந்தையில் பிரிட்டன் டாடா ஸ்டீல் வர்த்தக விற்பனை தடைப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது விற்பனைக்கான பேச்சுவார்த்தை துவங்கப்பட்டுள்ளது. 100 மில்லியன் பவுண்டு மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் தென் யோர்க்ஷைர் பகுதியில் இருக்கும், ரோத்தர்ஹோம் எலக்ட்ரிக் ஆர்க் ஸ்டீல்வொர்க்ஸ், ஸ்டாக்ஸபிரிட்ஜ் பகுதியில் இருக்கும் ஸ்டீல் சுத்திகரிப்பு ஆலை, பிரன்ஸ்வொர்த் பகுதியில் இருக்கும் மில், போல்டன் மற்றும் வெட்நஸ்பரி பகுதியில் இருக்கும் சேவை மையங்கள், மற்றும் சீனாவில் சூசோ, ஜியான் பகுதியில் இருக்கும் சேவை மையங்கள் ஆகியவை இதில் அடங்கும். பிரிட்டன் டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு இருக்கும் ஏரோஸ்பேஸ், ஆட்டோமோடிவ் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு துறை சார்ந்த வர்த்தகம் மற்றும் 1700 ஊழியர்களும் இந்த விற்பனை ஒப்பந்தத்தின் வாயிலாக லிபெர்ட்ரி ஹவுஸ் குரூப் பெறுகிறது. இந்தத் தொழிற்சாலை விற்பனை செய்யப்பட்டாலும் பிரிட்டன் சந்தையில் இருந்து முழுமையாக டாடா ஸ்டீல் வெளியேற விரும்பவில்லை. இந்நிலையில் ஜெர்மன் நிறுவனமான ThyssenKrupp உடன் இணையப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
100 மில்லியன் பவுண்டு
ரத்தன் டாடா - சைரஸ் மிஸ்திரி
சொத்துக்கள்
ஊழியர்கள் மற்றும் வர்த்தகம்
டாடா ஸ்டீலின் மற்றொரு திட்டம்..
தங்கம் / வெள்ளி
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications