வாஷிங்டன்: இந்தியாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தகவல் தொழில்நுட்பம் நிறுவனம் டிசிஎஸ். அமெரிக்காவில் உள்ள மிசிசிப்பி, ரோட் தீவு மற்றும் மைனே (MRM) கூட்டமைப்புகளில் உள்ள பணியில் இருந்து நீக்கப்பட்டோருக்கு புதிய இன்சூரன்ஸ் முறையை அறிமுகப்படுத்துகிறது.
வேலையை இழந்துள்ளவர்கள்
வலுக்கட்டாயமாக தங்கள் வேலையை இழந்துள்ளவர்கள் புதிய வேலை தேடி வரும் போது அவர்களுக்கு உதவுவதற்காகவும், பண ஆதாயம் அளிக்கவும் இந்த மிசிசிப்பி இன்சூரன்ஸ் திட்டம் உதவும் என்று டிசிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
டிசிஎஸ்
அமெரிக்காவில் உள்ள மாநிலங்களைப் புதுமை படுத்துதல், பயனர் இடைமுக திட்டங்கள் போன்றவற்றிற்கு உதவுதல் போன்ற பல பணிகளை டிசிஎஸ் நிறுவனம் செய்து வருகிறது.
அமெரிக்காவிலேயே முதல்முறையாக
மிசிசிப்பி வேலைப் பாதுகாப்புத் துறை நிர்வாக இயக்குநர் மார்க் ஹென்றி இது பற்றி கூறுகையில் அமெரிக்காவிலேயே முதலாவதாக வலுக்கட்டாயமாக தங்கள் வேலையை இழந்துள்ளவர்களுக்கு இந்த புதிய இன்சூரன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம்.
அடுத்த ஆண்டு
மேலும் ரோட் தீவு மற்றும் மைனேவில் அடுத்த ஆண்டிற்குள் இத்திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் இந்த வெற்றியின் மூலம் விரிவான ஒருங்கிணைக்கப்பட்ட பணி குழு தேவைப்படுகிறது மற்றும் எங்களது கூட்டாளர்கள் அனைவருக்கும் நன்றி இது நாங்கள் பெற்ற வெற்றிக்கான ஒரு எடுத்துக்காட்டு என்றும் தெரிவித்தார்.
டிசிஎஸ் தயாராக உள்ளது
எம்ஆர்எம் கூட்டமைப்புடன் இணைந்து இந்த வலுவான பல மாநில வேலையின்மை காப்பீட்டு நவீனமயமாக்கல் திட்டத்தை அறிமுகப்படுத்த தயாராக உள்ளதாக டிசிஎஸ், அரசு தொழில் தீர்வுகள் பிரிவின் உலக தலைவர் டான்மொய் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மாநிலங்கள் தங்கள் பங்குதாரர்கள் மற்றும் தங்கள் அமைப்புகளுடனான சேவையை விரிவுபடுத்த இது மிகப்பெரிய முன்னறிவிப்பாக இருக்கும் என்று நம்புவதாக டான்மொய் சக்கரவர்த்தி கூறினார்.
யுபிஐ செயலி-ஐ பயன்படுத்துவது எப்படி..?
யுபிஐ செயலி-ஐ பயன்படுத்துவது எப்படி..?
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications