கலிபோர்னியா: இந்தியாவின் மிகப்பெரியன் மென்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மீது அமெரிக்காவின் ஆரஞ்சு மாகாணம் தொடுத்த வழக்கில், டிசிஎஸ் நிறுவனத்திற்கு 26 மில்லியன் டாலர் நஷ்டஈடு அளிக்கத் தீர்ப்பு அளித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம்.
இதனால் 3 வருடமாக நடத்தப்பட்டு வந்த இவ்வழக்குத் தற்போது முடிவிற்கு வந்துள்ளது.
மென்பொருள் சேவை
அமெரிக்காவின் ஆரஞ்சு என்னும் மாகாணத்திற்குச் செத்து வரி மேலாண்மை வடிவத்தை (மென்பொருள் சேவை) நிறுவ இரு தரப்பு ஒப்புக்கொண்டது.
இதன் பணிகளைச் செய்து வந்த டிசிஎஸ் நிறுவனம் ஒப்பந்தத்தின் படி 2010ஆம் ஆண்டு அளிக்காமல் காலம் கடத்தியது இதனால் ஆனால் ஆரஞ்சு மாகாணம் 2013ஆம் ஆண்டு இந்நிறுவனம் வழக்குத் தொடுத்தது.
டிசிஎஸ்
செத்து வரி மேலாண்மை வடிவத்தை நிறுவும் திட்டம் தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் நடத்து வழக்கில் இரு தரப்புத் தாங்கள் சந்தித்த பிரச்சனைகள் மற்றும் விளக்கங்களையும் அளித்துள்ளோம். ஆனால் எவ்விதமான நஷ்டஈடுக்கும் ஒப்புக்கொள்ளவில்லை எனச் சில வாரங்களுக்கு முன் டிசிஎஸ் செய்தியாளர்களுக்குத் தெரிவித்துள்ளது.
26 மில்லியன் டாலர்
இதைத் தொடர்ந்து வழக்கு முடிந்த பின் ஆரஞ்சு மாகாண நிர்வாகத் தலைவர் இவ்வழக்கு குறித்து, இவ்வழக்கின் நஷ்ட ஈடு தொகை 26 மில்லியன் டாலர் எனத் தெரிவித்தார்.
5 மடங்கு அதிகத் தொகை
இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பே 6.4 மில்லியன் டாலர் தான்,(4 மடங்கு அதிகம்) அதிலும் டிசிஎஸ் நிறுவனத்திற்கு ஆரஞ்சு மாகாணம் செலுத்தி தொகையை ஒப்பிடுகையில் 26 மில்லியன் டாலர் என்பது 5 மடங்கு அதிகமாகும்.
திருட்டு வழக்கு
சில மாதங்களுக்கு முன் டிசிஎஸ் நிறுவனம் அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தின் ரகசியங்களை திருடியதிற்கு 1 பில்லியன் டாலர் வரையிலான அபராதம் பெற்றது.
அமெரிக்கச் சந்தையில் ஹெல்த்கேர் பிரிவில் மிகப்பெரிய அளவில் சாப்ட்வேர் சேவையை வழங்கி வரும் எபிக் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் வர்த்தக ரகசியங்களைத் திருடி விட்டதாக டிசிஎஸ் நிறுவனத்தின் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
விசாரணையும்.. அபராதமும்..
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், டிசிஎஸ் நிறுவனத்தின் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் எபிக் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பீட்டுக்கு சுமார் 1 பில்லியன் டாலர் தொகையை டிசிஎஸ் நிறுவனத்தின் மீது அபராதம் விதித்துள்ளது.
அமெரிக்கச் சந்தை..
இந்திய ஐடி நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக இந்திய சந்தையிலும் சரி, சர்வதேச சந்தையிலும் சரி, ஹெல்த்கேர் பிரிவில் புதிய வர்த்தகத்தைப் பெறவும், உலக நாடுகள் மத்தியில் இந்திய ஹெல்த்கேர் சேவைக்கு நல்ல மதிப்பை உருவாக்கவும் போராடி வருகிறது.
இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள 1 பில்லியன் டாலர் அபராதம், இத்துறையைச் சார்ந்த இந்திய நிறுவனங்களுக்குச் சரி, பிற முக்கிய ஐடி நிறுவனங்களுக்கும் சரி மிகப்பெரிய பின்னடைவாக உருவாகியுள்ளது.
டிசிஎஸ் மறுப்பு
இந்நிலையில் அமெரிக்க நீதிமன்ற அறிவிப்பிற்கு எதிராக வழக்கு தொடர உள்ளோம் என்றும், எபிக் சிஸ்டம்ஸ் நிறுவனம் அளிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஏற்புடையதல்ல என டிசிஎஸ் தெரிவித்துள்ளது.
எபிக் சிஸ்டம்ஸ்
இன்றைய நிலையில் பெரிய மற்றும் சிறிய மருத்துவமனைக்கு ஐடி சேவை அளிக்கும் வர்த்தகம் வேகமாகவும், மிகப்பெரிய அளவிலும், வளர்ந்துள்ளது. அமெரிக்கச் சந்தையில் இத்துறையில் மிகப்பெரிய நிறுவனமாகத் திகழ்வது எபிக் சிஸ்டம்ஸ்.
இத்துறையில் தனது வர்த்தகத்தை மேம்படுத்தவும், வர்த்தக விரிவாக்கத்திற்குப் புதிய நிறுவனங்களைக் கைப்பற்றவும் தயாராக உள்ள இந்திய நிறுவனங்கள் தயாராக உள்ளது. இதில் டிசிஎஸ் நிறுவனமும் ஒன்று.
வர்த்தகம் மற்றும் வருவாய்
3வது காலாண்டு முடிவில் டிசிஎஸ் நிறுவனத்தின் லைப்சையின்ஸ் பிரிவு மட்டும் மொத்த வருவாயில் சுமார் 7.3 சதவீத வருவாயைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
எபிக் சிஸ்டம்ஸ் வருடத்திற்கு 2 பில்லியன் டாலர் வருவாயைப் பெறுகிறது.
அபராதம்
இந்நிலையில் அமெரிக்க நீதிமன்றம் அறிவித்துள்ள படி வர்த்தக ரகசியங்கள் திருட்டிற்காக டிசிஎஸ் நிறுவனம் மற்றும் டாடா அமெரிக்கா இன்டர்நேஷ்னல் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து 240 மில்லியன் டாலர் இழப்பீடாகவும், 700 மில்லியன் டாலர் அபராதத் தொகையாகவும் செலுத்த வேண்டும் என இவ்வழக்கிற்கான விசாரணையில் தீர்ப்பு கிடைத்தது


Click it and Unblock the Notifications