இந்தியாவில் எப்படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறாரோ அதேபோல் தான் சீனாவில் ஜாக் மா. வெறும் 20 வருடத்தில் இருவருடைய வளர்ச்சி உலக நாடுகளை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
20 வருடமாக தான் கட்டிய கோட்டை அலி பாபா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அதாவது சிஇஓ பதவியில் இருந்து ஜாக் மா விலகியுள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன்..
ஜாக் மா ஒரு வருடத்திற்கு முன்பே ஜாக் மா தனது ராஜினாமா குறித்து நிறுவனத்திற்கும், ஊழியர்களுக்கும் அறிவித்துவிட்டார். தனது ராஜினாமா குறித்து ஜாக் மா பேசுகையில், அலிபாபா நிறுவனம் எப்போது என்னுடையது இல்லை. ஆனால் நான் எப்போது அலிபாபா-வை சேர்ந்தவன் தான். நிறுவனத்தை விட்டு படிப்படியாகவே வெளியேற போகிறேன் இதனால் வர்த்தகத்திற்கு எவ்விதமான பாதிப்பும் இருக்காது என தெரிவித்தார்.
பதவி கைமாறியது
ஜாக் மா ஒரு வருடத்திற்கு முன்பே தனது முடிவை அறிவித்து விட்ட நிலையில், இணை தலைமை நிர்வாக அதிகாரியாக டேனியல் ஜாங் நியமிக்கப்பட்டார். தற்போது ஜாக் மா வெளியேறிய நிலையில் மொத்த நிர்வாக பொறுப்பும் டேனியல் கையில் செல்கிறது.
அடுத்த வருடம் அலிபாபா நிறுவனத்தின் வருடாந்திர பங்குதாரர்கள் கூட்டம் வரையில் ஜாக் மா அலிபாபா நிர்வாக குழுவில் இருக்க போகிறார். அதேபோல் அலிபாபா பார்ட்னர்ஷிப்-இல் லைப்டைம் பார்ட்னர்ஷிப் ஆக மட்டுநமே ஜாக் மா இருக்க போகிறார்.
மாபெரும் நிகழ்ச்சி
அலிபாபா சாம்ராஜ்ஜியத்தை விட்டு வெளியேறும் ஜாக் மா ஒரு மாபெரும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். சுமார் 4 மணி நேரம் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சி 80000 பேர் அமரும் ஒரு விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இந்த விழாவில் பொறுப்புகளை ஊழியர்கள், நிர்வாக உறுப்பினர்கள் மத்தியில் டேனியல்-யிடம் ஒப்படைத்தார் ஜாக் மா.
இதன் பின் பாட்டு, டான்ஸ் என அரங்கமே அசந்துபோகும் அளவிற்கு கொண்டாடப்பட்டது.
ராக்ஸ்டார் ஜாக் மா
55வது பிறந்த நாளில் ஜாக் மா தனது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஜாக் மா யாரும் எதிர்பார்க்காத வகையில் ராக் ஸ்டார் கெட்அப்-இல் கிட்டார், பெரிய கூலர்ஸ், லெதர் ஜாக்கெட் ஆகியவற்றை அணிந்து சீன பாப் பாடல்களை பாடி அசத்தினார் ஜாக் மா.
ஜாக் மா உடன் உயர் மட்ட அதிகாரிகள் அனைவரும் ராக்ஸ்டார் போல் உடை அணிந்து அவரை வழி அனுப்பினர். எல்லாவற்றுக்கும் மேலாக மேடையில் ஜாக் மா ஊழியர்கள் முன் கண்ணீர் விட்டு விடைபெற்றார். இது பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
ஆங்கில ஆசிரியர்
ஒரு ஆங்கில ஆசிரியராக இருந்து பல தோல்விகளுக்கு பின் 1999இல் அலிபாபா-வை துவங்கினார் ஜாக் மா. இந்த நிறுவனம் சீனாவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் இயங்கி வருகிறது, இந்நிறுவனத்தின் சப்ளை செயின் தளம் இன்றும் முன்னணி நிறுவனங்களுக்கு கனவாகவே உள்ளது.
இந்த 20 வருட வளர்ச்சியில் இவர் உலகின் பணக்கார பட்டியலில் 41.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 20வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் அலிபாபா நிறுவனம் கிட்டத்தட்ட 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications