ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் நடப்பதைப் போல் இந்தக் காலாண்டிலும் அமெரிக்காவின் முன்னணி டெக் நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளது.
அமெரிக்காவின் இண்டர்நெட் ஜம்பாவானான கூகிள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் தங்களது காலாண்டு முடிவுகளை வெளியிடும் முன்பு, இத்துறையில் இருக்கும் பிற முன்னணி டெக் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்புப் பங்குச்சந்தையில் குறையும்.

அதேபோல் இந்தக் காலாண்டில் FANG குரூப், நெட்பிலிக்ஸ், பேஸ்புக் நிறுவனப் பங்குகள் திங்கட்கிழமை வர்த்தகத்தில் 1.7 சதவீதம் வரை சரிந்து காணப்பட்டது. அதுமட்டுமல்லால் கடந்த 5 வர்த்தக நாட்களாக அமெரிக்கப் பங்குச்சந்தையில் இருக்கும் டெக் நிறுவனங்கள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.
இது கடந்த நவம்பர் தேர்தலுக்குப் பின் டெக் நிறுவனங்கள் மத்தியில் ஏற்படும் பெரிய அளவிலான மாற்றமாகும்.
அமெரிக்கப் பங்குச்சந்தையில் டெக் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் கடந்த 6 நாட்களாக எஸ்அண்ட்பி500 குறியீட்டு உயர்வுடன் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வருகிற வியாழக்கிழமை அமேசான், கூகிள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான அல்பபெட் ஆகிய நிறுவனங்கள் தங்களது காலாண்டு முடிவுகளை வெளியிடுகிறது.


Click it and Unblock the Notifications