நியூயார்க்: புதன்கிழமை வர்த்தக நேரத்தில் நியூயார்க் பங்குச் சந்தை தொழில்நுட்ப கோளாறு காரணமாக 3 மணி நேரம் முடங்கியது.
கடந்த இரண்டு வருடத்தில் அமெரிக்க நிதித்துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பாக இது கருதப்படுகிறது.
பாதிப்பு
ஏற்கனவே அமெரிக்கச் சந்தை, கிரீஸ் மற்றும் சீன சந்தையின் வீழ்ச்சியில் தவித்து வரும் நிலையில், இத்தொழில்நுட்பக் கோளாறு நியூயார்க் சந்தை பதம் பார்த்துள்ளதாக முதலீட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
இண்டர்காண்டினென்டல் எக்ஸ்சேஞ்ச்
நியூயார்க் பங்குச் சந்தையின் இண்டர்காண்டினென்டல் எக்ஸ்சேஞ் வர்த்தகம், புதன்கிழமை 11.30 மணியளவில் முடங்கி 3.10 மணிக்கு இயல்பு நிலைக்குத் திரும்பியது. மேலும் இது இணையத் தாக்குதல் (cyber attack) இல்லை என்றும் நியூயார்க் பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
தாமஸ் ஃபர்லே
இதுகுறித்து நியூயார்க் பங்குச் சந்தையின் தலைவர் தாமஸ் ஃபர்லே கூறுகையில், "இன்றைய நாள் எங்களுக்குச் சிறந்த நாளாக அமையவில்லை, மேலும் இத்தகைய சூழ்நிலை முதலீட்டாளர்களுக்குக் கசப்பான அனுபவத்தை அளித்திருக்கும்" என அவர் தெரிவித்தார்.
வர்த்தக நிலை
புதன்கிழமை வர்த்தகத்தில் நியூயார்க் பங்குச் சந்தை சுமார் 1 சதவீதம் வரையிலான சரிவைச் சந்தித்தது. மேலும் முதலீட்டாளர்கள் சீனா மற்றும் கிரீஸ் தக்கத்தில் தப்பிக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications