ஆமாண்டா அப்படிதான்.. அமெரிக்காவாது ஒன்னாவது கச்சா எண்ணெய் வேணுமா.. ரகசியமா அனுப்பி வைக்கிறேன்,ஈரான்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தெஹ்ரான் : அமெரிக்கா - ஈரான் பிரச்சனையால், அமெரிக்கா ஈரானிடம் யாரும் கச்சா எண்ணெய் வாங்க கூடாது, அதையும் மீறி வாங்கினால் அந்த நாடுகளின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று கூறி வந்தது. இந்த நிலையில் இந்திய உள்ளிட்ட பல நாடுகள் ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை தவிர்த்தன.

 

பல நாடுகளுக்கு இதனால் பெருத்த நஷ்டமே என்றாலும், அமெரிக்காவுக்கு பயந்து ஈரானை எதிர்த்துக் கொண்டும் உள்ளன. எப்படியேனும் ஈரானின் பொருளாதாரத்தை சீர் குலைக்க வேண்டும் என்றும் அலையும் அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில் ஈரானிய எண்ணெய் அமைச்சர் பிஜான் நம்தார் ஜாங்கனே, அமெரிக்காவின் தடை மீறி நாங்கள் ரகசிமாக எண்ணெய் சப்ளை செய்ய போகிறோம் என்று அறிவித்துள்ளார்.

நாங்கள் யாருக்கெல்லாம் எண்ணெய் சப்ளை செய்கிறோம் என்றால் தானே பிரச்சனை, அதை நாங்கள் ஒரு போதும் வெளியிட மாட்டோம். அதை ரகசியமாகவே வைத்திருப்போம். விருப்பமுள்ளவர்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளாராம்.

கச்சா எண்ணெய் ரகசிய விற்பனை

கச்சா எண்ணெய் ரகசிய விற்பனை

ஆமாங்க.. அமெரிக்காவின் தடையை மீறி கச்சா எண்ணெய் ரகசியமாக விற்பனை செய்யப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்தது. இந்த தடை கடந்த நவம்பரில் அமலுக்கு வந்தது. எனினும் இந்தியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு நிபந்தனை அடிப்படையில் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய 6 மாதம் சலுகை அளித்தது. இந்த சலுகையும் முடிவடைந்த நிலையில் ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை மற்ற நாடுகள் தவிர்த்து விட்டன.

ஈரானின் பொருளாதாரம் பின்னடைவு

ஈரானின் பொருளாதாரம் பின்னடைவு

அமெரிக்கா விதித்த தடையால், ஈரானின் பொருளாதாரம் தற்போது மிக மோசமாக ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில், ரகசியமாக கச்சா எண்ணெய் விற்க துவங்கியுள்ளது ஈரான்.

எண்ணெய் வாங்கும் நாடுகளின் விவரங்களை தர மாட்டோம்?
 

எண்ணெய் வாங்கும் நாடுகளின் விவரங்களை தர மாட்டோம்?

இதுகுறித்து ஈரான் எண்ணெய் அமைச்சர் பிஜான் நம்தார் ஜான்கனே கூறுகையில், ஈரானில் இருந்து அதிகாரப்பூர்வமாக அல்லாமல் ரகசியமாக கச்சா எண்ணெயை விற்பனை செய்கிறோம். வெளிப்படையாக தெரிந்தால் தானே எண்ணெய் வாங்குபவர்களை அமெரிக்கா தடுத்து விடும், பொருளாதார தடை விதிக்கும். ஆனால் எந்த நாடுகள் வாங்குகின்றன என்ற விவரத்தை வெளியிட முடியாது. அமெரிக்கா இந்த தடையை நீக்கும் வரை இந்த ரகசிய விற்பனை தொடரும் என்றும் அதிரடியாய் அறிவித்துள்ளார்.

ஏற்றுமதியும் மிக குறைந்தது?

ஏற்றுமதியும் மிக குறைந்தது?

ஈரானிலிருந்து ஒரு நாளைக்கு கப்பலில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வது மிக வீழ்ச்சியடைந்துள்ளதாம். கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 7,50,000 பேரல்கள் மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளதாம். இது கடந்த அக்டோபர் மாதத்தில் 1.5 மில்லியன் பேரல்களாக இருந்ததாம்.

அமெரிக்க தொடர்ந்து அழுத்தத்தையே கொடுத்து வருகிறது?

அமெரிக்க தொடர்ந்து அழுத்தத்தையே கொடுத்து வருகிறது?

அமெரிக்கா தொடர்ந்து அமெரிக்கா தொடர்ந்து பிரச்சனையே கொடுத்து வருகிறது. அண்டைய நாடுகளில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு ஈரான் பொரூளாதார உதவி புரிவதாகவும் கூறி வருகிறது. ஈரானில் பொரூளாதாரத்தை குலைக்க பல வழிகளிலும் முயற்சி எடுத்து வருகிறது. அதோடு ஈரான் மீத தடையை விதித்து விட்டு அந்த லாபத்தை அமெரிக்க அடைய நினைக்கிறது.

இலக்குகளை எட்ட முடியாமல் விட்டு விட்டனர்?

இலக்குகளை எட்ட முடியாமல் விட்டு விட்டனர்?

மேலும் இதே ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் மௌசவி, ஏற்கனவே ஈரானுக்கு ஏற்படுத்திய பிரச்சனைகள் போதாது என்று, தற்போது அமெரிக்க, ஈரானை பொரூளாதார தீவிர வாதி என்றும், தொடர்ந்து ஈரானுடன் பகைமை பாராட்டி வருகிறது. அதோடு அமெரிக்கா என்னதான் முயன்றாலும் அதன் அழுத்தம் இங்கு வேலையாகாது. ஏற்கனவே அமெரிக்காவின் முந்தைய அதிபர்கள் முயன்று விட்டு இலக்குகளை எட்ட முடியாமல் தோற்று போய்விட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா பேச்சு வார்த்தைக்கு தயார்?

அமெரிக்கா பேச்சு வார்த்தைக்கு தயார்?

கடந்த வாரம் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறினார். ஆனால் ஈரான் தான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதோடு தற்போதும் கூட அமெரிக்கா பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளது. ஆனால் அமெரிக்கா இயல்பு நிலைக்கு திரும்பாமல் பேச்சு வார்த்தை, சாதகமாக இருக்காது என்றும் தெஹ்ரான் நிராகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tehran secretly defying US sanctions with ‘unofficial’ oil sales

Iran have unofficial or unconventional sales, all of which are secret, because if they are made known America would immediately stop them. so Iran is keeping up oil sales through unconventional.
Story first published: Monday, June 10, 2019, 10:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X