துபாய் : துபாய் சென்று வேலை கிடைக்காத விரக்தியில் இந்தியா திரும்பிய இந்தியர் ஒருவருக்கு, அந்த நாட்டில் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 28 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.
ஆமாங்கா.. தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த விலாஸ் ரிக்கலா என்பவர், அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் தற்போது ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.

சமீபத்தில் வேலை தேடுவதற்காக துபாய் சென்ற இவர், அங்கு வேலை ஏதும் கிடைக்காததால் விரக்தியில் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பும் முடிவில் இருந்துள்ளார்.
அப்போது திடீரென லாட்டரி சீட்டு ஒன்றை வாங்க நினைத்ததாகவும், ஆனால் அதனை வாங்குவதற்கான பணம் அவரிடம் இல்லாததால், அவரது மனைவிக்கு போன் செய்து பணம் கேட்டதாகவும் கூறுகிறார். பின்னர் தனது மனைவி அனுப்பி வைத்த பணத்தை கொண்டு, அவரது நண்பர் மூலம் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார் ரிக்காலா.
ஆனால் அதன் பின்னர், துபாயில் வேலை கிடைக்காததால் இந்தியா திரும்பிய அவர், ஹைதராபாத்தில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் லாட்டரியில் 4 மில்லியன் டாலர் பரிசு விழுந்திருப்பதாக அவருக்கு தகவல் வந்துள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 28 கோடி ரூபாயாகும்.
இந்த நிலையில், தன்னிடம் பணமில்லாததால், மனைவி பத்மாவிடம் பணம் கேட்டேன். அதன் பின்னர் அவர் பணம் அனுப்பிய பணத்தில் தான், அபுதாபியில் வேலை பார்க்கும் என நண்பன் ரவியிடம் கொடுத்து, லாட்டரி சீட்டு வாங்கச் சொன்னேன். அந்த சீட்டுக்கு தான் தற்போது பரிசு விழுந்திருக்கிறது என்றும் பூரிப்பில் கூறியுள்ளார்.
இது குறித்து ரிக்காலா கூறுகையில், நான் ஏற்கனவே துபாயில் ஓட்டுனராக பணிபுரிந்துள்ளேன். அந்த நேரத்தில் அடிக்கடி லாட்டரி டிக்கெட்கள் வாங்குவேன். சமீபத்தில் நான் மீண்டும் வேலை தேடிக் கொண்டு துபாய் சென்றிருந்தேன். அப்போது லாட்ரி வாங்க நினைத்த போது என்னிடம் காசு இல்லை. பின்னர் என் மனைவி தான் எனக்கு அனுப்பி வைத்தார். அவர் கொடுத்த பணத்தில் தான் இந்த லாட்டரியை வாங்கினேன்.
மேலும் இதற்கு முழுக்க முழுக்க காரணமும் என் மனைவி பத்மாதான் என கூறி மனுசன் மகிழ்ச்சியில் திக்கு முக்காடியுள்ளாராம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications