துபாய்: சமூக வலைத்தளத்தில் பிரபலமான செயலிகளில் ஒன்றான டெலிகிராம்-ன் நிறுவனர் மற்றும் சிஇஓ பாவெல் டூரவ் தனது பர்சனல் வாழ்க்கையைப் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார். பொதுவாக டெக் உலகில் எலான் மஸ்க்-ன் திருமணம், குழந்தைகள், முறையற்ற உறவு குறித்துத் தான் எப்போதும் சர்ச்சையாகும். ஆனால் தற்போது பாவெல் டூரவ்-ன் டெலிகிராம் பதிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, எவ்வளோ பெரிய மனுஷன் இப்படியிருக்காரே என்று தான் சொல்ல தோன்றுகிறது.
பாவெல் டூரவ் டெலிகிராம் பதிவு வாயிலாக, தனக்கு 12 நாடுகளில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். துபாயில் வாழும் 39 வயதான பாவெல் டூரவ், 22 வயதில் ரஷ்யாவின் மிகப்பெரிய சமூகவலைத்தளமான Vkontakte உருவாக்கி, பின்னாளில் இது டெலிகிராம் ஆக உருவெடுத்து உலகின் முன்னணி சமுக வலைத்தளமாக மாறியது.

சரி விஷயத்திற்கு வருவோம், பாவெல் டூரவ் கூறுவது படி 12 நாடுகளில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் என அவர் குறிப்பிடுவது தனது குழந்தைகள் அல்லது தன் மூலமாகப் பிறந்த biological குழந்தைகளை. பாவெல் டூரவ்-க்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாவெல் டூரவ் தனது நீண்ட பதிவில் கூறுவது என்னவென்றால், விந்தணு தானம் அதாவது sperm Donation மூலமாகத் தான் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் பயோலாஜிக்கல் தந்தையானார் என்பதை கூறியுள்ளார், இது எப்படி நடந்தது என்றும் தனது பதிவில் விளக்கியுள்ளார். மேலும், தனது டிஎன்ஏவை ஓப்பன் சோர்ஸ் ஆக மாற்றவும் முடிவு செய்துள்ளாராம் பாவெல் டூரவ்.
பாவெல் டூரவ் விந்துணு தானம் செய்ய துவங்கிய சம்பவம்:
பாவெல் டூரவ் தனது, "15 ஆண்டுகளுக்கு முன்பு, என் நண்பர் ஒருவர் என்னிடம் விச்சித்திரமான வேண்டுகோள் வைத்தார். தனக்கும் அவரது மனைவிக்கும் குழந்தை பிறக்காததால், ஒரு கிளினிக்கில் விந்துணு தானம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். நான் முதலில் கேலி செய்தேன். ஆனால் பின்னர் அவர் உண்மையாகவே கேட்பதை உணர்ந்தேன்" என்று கூறினார்.
விந்துணு தானம் செய்ய கிளினிக் சென்றபோது, தனது விந்து உயர்தரமானது என்றும், உலகெங்கிலும் உள்ள தம்பதிகளுக்கு உதவ முடியும் என்றும் பாவெல் டூரவ்-க்கு தெரிவிக்கப்பட்டது. இதனாலேயே தான் விந்துணு தானம் செய்ய முடிவு செய்ததாக கூறியுள்ளார்.

தற்போது விந்து தானம் செய்வதை நிறுத்தியிருந்தாலும், அவர் தானம் செய்த கருத்தரிப்பு மையத்தில் தனது விந்துணு பாதுகாக்கப்பட்டு உறைந்த நிலையில் இருப்பதாகவும், அதை விரும்பும் குடும்பங்கள் அடையாளம் தெரியாமல் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். இப்படி தான் பாவெல் டூரவ் 12 நாடுகளில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பயோலாஜிக்கல் தந்தையாகியுள்ளார்.
டூரவ்வின் இந்த தகவல் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இது குறித்து தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, விந்துணு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மேலும், குழந்தை பெற முடியாத தம்பதிகளுக்கு இது ஒரு வரமாக அமைந்துள்ளது என்பதையும் இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.


Click it and Unblock the Notifications