ஐடி ஊழியர்களே உங்களுக்கு ஒர் 'நற்செய்தி'.. எச்1பி விசா கட்டுபாடுப்பாடுகள் இப்போதைக்கு இல்லை..!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு, அந்நாட்டு குடிமக்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கும் வண்ணம் எச்1பி விசா மீது அதிரடியான கட்டுப்பாடுகளை விதித்தார்.
இதன் மூலம் அதிகம் பாதிக்கப்படும் ஐடி ஊழியர்கள், ஐடி நிறுவனங்கள் இந்த அறிவிப்புகளால் வருத்தத்தில் மூழ்கிக்கிடந்த நிலையில் தற்போது இதுகுறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.
சியான் ஸ்பைசர்...
வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவில் அதிகளவில் பயன் ஊழியர்களின் வேலைவாய்ப்பு விசா கட்டுப்பாடுகளை அமலாக்கம் செய்ய நினைத்ததை விட அதிகக் காலம் தேவைப்படுகிறது என்று வெள்ளை மாளிகை செய்தி பிரிவின் செயலாளர் சியான் ஸ்பைசர் தெரிவித்தார்.
உண்மையான பொருள்..
சியான் ஸ்பைசரின் கருத்தின் உண்மையான பொருள், புதிய கட்டுப்பாடுகள் அமலாக்கம் அதிகப்படியான காலம் தேவைப்படும் என்பதால் தற்போது இருக்கும் விசா சட்டங்கள் குறைந்தபட்சம் 2018ஆம் ஆண்டு முழுமையாகச் செயல்பாட்டில் இருக்கும் என்பதே ஆகும்.
விரிவான பார்வை
மேலும் சியான் ஸ்பைசர் கூறுகையில் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு விசா விதிமுறைகள், திட்டங்களை விரிவான முறையில் ஆய்வு செய்ய உள்ளதாகக் கூறினார்.
இந்த அறிவிப்பு இந்திய மற்றும் அமெரிக்க வர்த்தகச் செயலாளர்களின் சந்திப்பிற்குப் பின் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி
மேலும் அமெரிக்க அரசு வெளியிட்ட இந்தப் புதிய கட்டுப்பாடுகள் குறித்து டெல்லியில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் டெல்லி பயணத்தில் போது பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எச்-1பி விசாவில் மட்டும் தானா...
மேலும் இந்த விரிவான பார்வை எச்-1பி விசாவில் மட்டும் தான் என்றால்.. இல்லை எச்-1பி விசா, எல்1 விசா, எச்1பி விசா உடையோரின் கணவன் மற்றும் மனைவிக்கும் அளிக்கப்படும் விசா, மாணவர்களுக்கு அளிக்கப்படும் விசா என அனைத்தும் இதில் அடங்கும் என்பது கவனிக்க வேண்டியது.
புதிய சட்டம்
எச்-1பி விசாவின் கீழ் அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டவர்கள் அமெரிக்க ஊழியர்களின் சம்பளத்திற்கு இணையாகச் சம்பள அளிக்கப்பட வேண்டும் என்று தற்போது இருக்கும் அளவை விட 40 சதவீதம் அதிகமான தொகையான வருடத்திற்கு 1,00,000 அமெரிக்க டாலர் என்ற தொகையை நிர்ணயம் செய்து இதற்கான சட்டத்தை உருவாக்கப்பட்டுள்ளது.
குறைந்த சம்பள ஊழியர்கள்
இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் எச்-1பி மூலம் மிகவும் குறைந்த சம்பளத்துடன் ஊழியர்ளை பணியில் அமர்த்தும் வழக்கம் அதிகளவில் குறையும் என்றும் ஸ்பைசர் கூறினார்.
ஏப்ரல் 1
இதன் மூலம் எச்1-பி விசாவிற்கான விண்ணப்பங்கள் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி மூலம் பெற முடியும். இதற்கான விசா விநியோகத்தை அக்டோபர் மாதத்தில் வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications