சீன அரசு அந்நாட்டின் டெக் நிறுவனங்கள் மக்களின் தனிநபர் தரவுகளை அதிகளவில் சேகரிப்பதாகவும், சந்தையில் பிற நிறுவனங்களை வளர விடாத அளவிற்குக் கடுமையான வர்த்தக ஒப்பந்தம் கட்டுப்பாடுகள் மூலம் மோனோபோலியாகச் செயல்படுகிறது எனக் குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதற்காகச் சில மாதங்கள் முன்பு அலிபாபா நிறுவனத்தின் மொத்த நிர்வாகத்தையும் அரசு கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்து மொத்த நிர்வாகத்தையும் ஆய்வு செய்தது.
இதன் பின்பு சீன அரசு அலிபாபா நிறுவனத்தின் மீது 3.6 பில்லியன் டாலர் அளவிலான தொகையை அபராதமாக விதித்தது. இதனைத் தொடர்ந்து சீனாவின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் சீன அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுத் தற்போது ஆய்வு செய்து வருகிறது.
இந்த ஆய்வில் தற்போது சீன அரசின் கிடுக்குப்பிடியில் சிக்கியிருப்பது சீனாவின் மிகப்பெரிய டெக் மற்றும் மொபைல் சேவை நிறுவனமான டென்சென்ட் நிறுவனம்.
டென்சென்ட் நிறுவனம்
சீன அரசு தற்போது டென்சென்ட் நிறுவனத்தின் மீது எடுத்துள்ள நடவடிக்கையின் வாயிலாகப் பல துறையில் வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் டென்சென்ட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.
ஜாக் மா - போனி மா
இதன் மூலம் அலிபாபா மற்றும் ஜாக் மா கடந்த 9 மாதத்தில் எதிர்கொண்ட சரிவை விடவும் டென்சென்ட் நிறுவனத்தின் தலைவரான போனி மா கடந்த ஒரு மாதத்தில் அதிகளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டு உள்ளார்.
ஜாக் மா சரிவு
2020 நவம்பர் மாதம் அலிபாபா குழுமத்தின் முன்னாள் தலைவர் ஜாக் மாவின் சொத்து மதிப்பு 61.0 பில்லியன் டாலராக இருந்தது சீனா அரசின் நடவடிக்கைக்குப் பின்பு இதன் அளவு சுமார் 47.8 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் அலிபாபா குழுமத்தின் சந்தை மதிப்பும் பாதிப்பு அடைந்துள்ளது
போனி மா சரிவு
இதேபோல் டென்சென்ட் தலைவர் போனி மா-வின் சொத்து மதிப்பு 2020 நவம்பர் 2ஆம் தேதி 59.7 கோடி ரூபாயாகவும், ஆசியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியிலிலும் இருந்தார். ஆனால் தற்போது 45.8 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
14 பில்லியன் டாலர் சரிவு
சீன அரசு எடுத்த ஒரு மாத நடவடிக்கையில் போனி மாவின் சொத்து மதிப்பு சுமார் 14 பில்லியன் டாலர் குறைந்துள்ளது. இது போனி மா எதிர்கொண்ட மிகப்பெரிய சரிவாக உள்ளது. இந்தச் சரிவில் இருந்து டென்சென்ட் மீண்டு வருவது கடினம்.
அலிபாபா, டென்சென்ட்
அலிபாபா, டென்சென்ட் மட்டும் அல்லாமல் சீன அரசு பல முன்னணி நிறுவனங்களின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வரும் காரணமாகச் சீன பங்குச்சந்தை பெரிய அளவில் பாதித்துள்ளது. இதனால் பல முதலீட்டாளர்கள் அதிகளவிலான நஷ்டத்தை அடைந்துள்ளனர்.
ஜி ஜின்பிங்
ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு டென்சென்ட் நிறுவனம் மீது எடுத்த நடவடிக்கை, விதித்து வரும் அபராதம் மூலம் இந்நிறுவனப் பங்குகள் ஜூலை மாதம் மட்டும் சுமார் 23 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதன் மூலம் டென்சென்ட் சந்தை மதிப்பு 170 பில்லியன் டாலர் வரையில் சரிந்துள்ளது.
டென்சென்ட் இசை துறை
சமீபத்தில் செய்ய ஆய்வில் சீன அரசு டென்சென்ட் இசை துறையில் செய்த குளறுபடிகளைக் கண்டுபிடித்துள்ளது. டென்சென்ட் நிறுவனம் சீனா மியூசிக் கார்பரேஷன் நிறுவனத்தைக் கைப்பற்றிப் பின்பு ஆன்லைன் மியூசிங் சந்தை மற்றும் வர்த்தகத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது.
விதிமுறை மீறில்
ஆனால் இந்த வளர்ச்சியை அடையப் பல விதிமுறைகளை மீறியுள்ளதாகவும், மோனோபோலி ஆக இயங்கி வருவதாகச் சீன சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு வெளிப்படையாக அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து சில முக்கியமான உத்தரவுகளும் விதிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications