சீனாவின் முன்னணி டெக் மற்றும் மொபைல் சேவை நிறுவனமான டென்சென்ட் மீது சீன அரசு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை மற்றும் கட்டுப்பாடு, அபராதம் மூலம் முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர்.
இதன் வாயிலாக உலகிலேயே மிகவும் மோசமான சரிவையும், அதிகப்படியான இழப்பைச் சந்தித்த நிறுவனமாகச் சீனாவின் டென்சென்ட் உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 170 பில்லியன் டாலர் அளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது.
சீன அரசு
சீன அரசு கடந்த சில மாதங்களாகவே சீன டெக் நிறுவனங்கள் செய்து வரும் மோசடிகள், மோனோபோலி நடவடிக்கைகளைக் கடுமையான கட்டுப்பாடுகள் உடன் தடுத்து வருகிறது. இதனால் சீன டெக் நிறுவனங்கள் இதுநாள் வரையில் மக்களையும், அரசையும் ஏமாற்றித் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில் தற்போது மாறியுள்ளது.
சீன நிறுவனப் பங்குகள்
இதனால் சீன நிறுவனப் பங்குகளின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. குறிப்பாக வெளிநாட்டில் பட்டியலிடப்பட்ட சீன நிறுவன பங்குகள் கடுமையாகப் பாதிக்கப்படுவது மட்டும் முதலீட்டாளர்களும் அதிகளவிலான இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.
டென்சென்ட் நிறுவனம்
சீன அரசு ஒரு மாதமாக டென்சென்ட் நிறுவனம் மீது எடுத்து வரும் நடவடிக்கை மற்றும் விதித்து வரும் அபராதம் மூலம் இந்நிறுவனப் பங்குகள் ஜூலை மாதம் மட்டும் சுமார் 23 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இந்தச் சரிவின் காரணமாகச் சுமார் டென்சென்ட் சந்தை மதிப்பு 170 பில்லியன் டாலர் வரையில் சரிந்துள்ளது.
டென்சென்ட் 170 பில்லியன் டாலர் இழப்பு
டென்சென்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு 170 பில்லியன் டாலர் குறைந்துள்ளது என்றால் முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு குறைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் ஜூலை மாதத்தில் உலகளவில் அதிகப்படியான சரிவை அடைந்த நிறுவனங்களின் டாப் 10 பட்டியலில் 9 நிறுவனங்கள் சீன நிறுவனங்கள்
ஜூலை மாதம்
ஜூலை மாதத்தில் சீன நிறுவனங்கள் எதிர்கொண்ட சரிவின் அளவு
டென்சென்ட் - 170 பில்லியன் டாலர் இழப்பு
அலிபாபா குரூப் - 103.9 பில்லியன் டாலர் இழப்பு
மெய்டுவான் - 87.9 பில்லியன் டாலர் இழப்பு
பின்டுவோடுவோ -59.5 பில்லியன் டாலர் இழப்பு
கெவிசாவ் மோவ்டாய் - 49 பில்லியன் டாலர் இழப்பு
கைசோவ் டெக்னாலஜி - 43 பில்லியன் டாலர் இழப்பு
Wuliangye yibin - 30.3 பில்லியன் டாலர் இழப்பு
பிங் என் இன்சூரன்ஸ் குரூப் - 29.2 பில்லியன் டாலர் இழப்பு
கே.ஈ ஹோல்டிங்க்ஸ் - 27.9 பில்லியன் டாலர் இழப்பு
More From GoodReturns

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications