பட்டையைக் கிளப்பும் டெஸ்லா.. இனிமே ஆட்டமே வேற..!

டெஸ்லா, இன்று பல லட்ச இந்தியர்களின் கனவு கார் என்றால் மிகையில்லை. பெட்ரோல், டீசல் செலவு இல்லை, சந்தையில் இருக்கும் விலை உயர்ந்த கார்களின் இருக்கும் அனைத்து சேவைகளும் இருக்கிறது, அனைத்திற்கும் மேலாக ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு இணையான வேகத்தில் இயங்கும் ஒரு கார் என்றால் அது டெஸ்லா கார் மட்டுமே.

டெஸ்லா உடன் இன்று பல நிறுவனங்கள் போட்டிப்போட்டாலும் யாராலும் அந்த இடத்தைப் பிடிக்க முடியாது என்பது கார் மற்றும் ஆட்டோமொபைல் ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. இப்படி இருக்கையில் கடந்த 7 மாதத்தில் டெஸ்லா செய்த மாஸ் ஆனா வேலையைப் பாருங்க.

வால் ஸ்ட்ரீட்

வால் ஸ்ட்ரீட்

உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாக இருக்கும் டெஸ்லா இந்த வருடம் வால் ஸ்ட்ரீட் வெளியிட்ட அளவை விடும், தான் நிர்ணயம் செய்த அளவை விடச் சற்று குறைவான அளவில் வாகனங்களைத் தயாரித்து டெலிவரி செய்துள்ள காரணத்தால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் சக ஆட்டோமொபைல் நிறுவனத் தலைவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் விளைவு என்ன தெரியுமா..?

விளைவு

விளைவு

கடந்த 7 மாதத்தில் டெஸ்லா நிறுவனங்களின் பங்குகள் சுமாப் 150 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது, இதன் மூலம் டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பு இக்காலகட்டத்தில் சுமார் 48 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

இதன் மூலம் வெள்ளிக்கிழமை டெஸ்லா நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 80 பில்லியன் டாலரை தாண்டி சாதனை படைத்துள்ளது.

 

பங்கு மதிப்பு

பங்கு மதிப்பு

இதேபோல் டெஸ்லா நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு கடந்த 7 மாதத்தில் தாறுமாறாக உயர்ந்துள்ளது. 2019ஆம் ஆண்டின் ஜூலை 5ஆம் தேதி வெறும் 233 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட டெஸ்லா பங்குகள் தற்போது 443.01 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

கடந்த வருடம் முழுவதும் தொடர்ந்து நிர்வாகப் பிரச்சனைகளைச் சந்தித்து வந்த டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் வருடத்தின் முடிவிலும், புத்தாண்டு துவக்கத்திலும் தொடர்ந்து மகிழ்ச்சியான செய்திகளைக் கேட்டு வருகிறார்.

சீனா

சீனா

அமெரிக்கா தொழிற்சாலையில் இருந்து மட்டுமே வாகனங்களைத் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து வந்த டெஸ்லா 2019ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இருந்து சீனாவில் அமைக்கப்பட்ட புதிய தொழிற்சாலையில் இருந்தும் டெலிவரி பணிகளைத் துவங்கியுள்ளது. இதனால் அடுத்தச் சில வருடங்களில் டெஸ்லாவின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2019இல் மட்டும் சுமார் 3,67,500 கார்களை டெஸ்லா தனது வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்துள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+