ஹெர்ட்ஸ் - டெஸ்லா: உண்மையை உடைத்த எலான் மஸ்க்..!

உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா கார்களுக்கு உலகமும் முழுவதும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்களோ இல்லையோ, ஆனால் உலகமும் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. இதனாலேயே டெஸ்லா குறித்தும், எலான் மஸ்க் குறித்தும் எந்தச் செய்தி வந்தாலும் உலகம் முழுவதும் விழித்துக்கொள்கிறது.

இதன் படி கடந்த வாரம் டெஸ்லா நிறுவனத்திடம் Hertz சுமார் 1 லட்சம் கார்களை ஆர்டர் செய்தது ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையையும் புரட்டிப்போட்டது. இதில் இருக்கும் உண்மையைத் தற்போது எலான் மஸ்க் புட்டுப்புட்டு வைத்துள்ளார்.

Hertz - டெஸ்லா

Hertz - டெஸ்லா

அமெரிக்காவின் மிகப்பெரிய வாடகை கார் சேவை நிறுவனமான Hertz கடந்த வாரம் 1 லட்சம் டெஸ்லா கார்களை ஆர்டர் செய்துள்ளதாகவும், இதில் 50000 கார்களை உபர் நிறுவனம் ஒப்பந்த முறையில் வாடகைக்கு எடுத்துக்கொள்வதாகவும் அறிவித்தது. இது டெஸ்லா நிறுவனத்திற்கு மட்டும் அல்லாமல் ஹெர்ட்ஸ் மற்றும் உபர் நிறுவனத்திற்கும் முக்கியமானதாக இருந்தது.

 டெஸ்லா பங்குகள்

டெஸ்லா பங்குகள்

இந்நிலையில் நேற்றைய வர்த்தகத்தில் டெஸ்லா பங்குகள் சுமார் 8.49 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு பங்கு விலை 1,208.59 ரூபாயாக உயர்ந்தது. இதன் மூலம் புதிய உச்சத்தை டெஸ்லா நிறுவனம் அடைந்துள்ளது. இது முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் டெஸ்லா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

எலான் மஸ்க் விளக்கம்

எலான் மஸ்க் விளக்கம்

டெஸ்லா பங்குகள் தடாலடியாக வளர்ச்சி அடைந்தது குறித்து டிவிட்டரில் எலான் மஸ்க் நன்றி தெரிவித்த போது, எலான் மஸ்க் ஹெர்ட்ஸ் நிறுவனம் குறித்தும், பங்கு வளர்ச்சி குறித்தும் முக்கியமான உண்மையை வெளியிட்டுள்ளார்.

 1 லட்சம் கார் ஆர்டர்

1 லட்சம் கார் ஆர்டர்

இந்தப் பங்கு உயர்வு ஹெர்ட்ஸ் நிறுவனத்தின் 1 லட்சம் கார்கள் ஆர்டர் சார்ந்து இருந்தால், நான் விளக்கம் அளிக்கக் கடமைப்பட்டு உள்ளேன். டெஸ்லா - ஹெர்ட்ஸ் மத்தியில் இதுவரையில் எவ்விதமான ஒப்பந்தமும் செய்யப்படவில்லை.

முக்கியத்துவம்

முக்கியத்துவம்

டெஸ்லா கார்களுக்கு ஏற்கனவே சந்தையில் அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் நிலையில் உற்பத்தி அளவுகள் குறைவாகவே உள்ளது, இதன் ஹெர்ட்ஸ் நிறுவனத்திற்கும் பிற வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் அதே முக்கியத்துவம் தான் அளிக்கப்படும்.

விலையில் சலுகை இல்லை

விலையில் சலுகை இல்லை

அதாவது கார் டெலிவரியிலும் சரி விலையிலும் சரி எவ்விதமான மாறுபாடும் இருக்காது என மறைமுகமாக விளக்கம் அளித்துள்ளார். இதனால் டெஸ்லா கார்களை ஆர்டர் செய்துள்ளோர் எவ்விதமான தாமதமும் இல்லாமல் கார்களை டெலிவரி பெறுவார்கள்.

எவ்விதமான தாக்கமும் இல்லை

எவ்விதமான தாக்கமும் இல்லை

மேலும் ஹெர்ட்ஸ் நிறுவனத்தின் 1 லட்சம் டெஸ்லா கார் ஆர்டர் மூலம் டெஸ்லா நிறுவனத்தின் மதிப்பீட்டில் எவ்விதமான தாக்கமும் இல்லை, தற்போது ஏற்படும் பங்கு விலை உயர்வு முழுக்க முழுக்கச் சந்தையின் டிமாண்ட் மதிப்பீட்டின் படி உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

டெஸ்லா, எலான் மஸ்க் மதிப்பு

டெஸ்லா, எலான் மஸ்க் மதிப்பு

திங்கட்கிழமை வர்த்தகத்தில் டெஸ்லா பங்குகள் 1,209.75 ரூபாய் என்ற 52 வார உயர்வைத் தொட்ட நிலையில் இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 1.20 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் எலான் மஸ்க்-ன் மொத்த சொத்து மதிப்பு நேற்றைய வர்த்தக முடிவில் 335 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+