எலக்ட்ரிக் கார் தொழில்நுட்பம், தயாரிப்பு, விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வரும் எலான் மஸ்க்-ன் டெஸ்லா தனது ஆதிக்கத்தை இழந்து வருகிறது. இதனால் அடுத்த சில வருடத்தில் டெஸ்லா-வின் நிலை என்ன என்பது குறித்து இந்நிறுவன முதலீட்டாளர்களுக்கு அச்சம் ஏற்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் எலக்ட்ரிக் கார் பிரிவில் தனி ஆளாகக் கலக்கி வந்த நிலையில், தற்போது இந்நாட்டில் இருக்கும் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது.
இதனால் டெஸ்லா நிறுவனத்தின் வர்த்தக ஆதிக்கம் தடாலடியாகக் குறைந்து பங்குச்சந்தையில் பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்டு உள்ளது.
டெஸ்லாவின் வெற்றி
டெஸ்லாவின் வெற்றியை தொடர்ந்து எதிர்காலத்தில் பூமியின் சூற்றுசூழ்நிலையைப் பாதுகாக்கும் பொருட்டு அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலகில் பல நாடுகள், பல முன்னணி கார் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் கார் தயாரிப்பைக் குறைந்துவிட்டு எலக்ட்ரிக் தயாரிப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.
Mach-E அறிமுகம்
இதன் படி அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் போர்டு, டெஸ்லா நிறுவனத்திற்குப் போட்டியாக எலக்ட்ரிக் காரை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது. இதன் படி சமீபத்தில் போர்டு நிறுவனம் தனது வெற்றிகரமான பிராண்டாக விளங்கும் முஸ்டாங் பெயரில் புதிய Mach-E அறிமுகம் செய்தது.
போர்டு Mach-E கார்
இந்தக் கார் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்ற நிலையில் பிப்ரவரி மாதம் மட்டும் சுமார் 3,739 Mach-E எலக்ட்ரிக் எஸ்யூவி காரை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இது அமெரிக்க எலக்ட்ரிக் கார் விற்பனை சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெஸ்லா ஆதிக்கம் சரிவு
கடந்த வருடம் பிப்ரவரி மாதம் அமெரிக்க எலக்ட்ரிக் கார் சந்தையில் டெஸ்லாவின் மொத்த பங்கீடு 81 சதவீதமாக இருந்த நிலையில், போர்டு நிறுவனத்தின் Mach-E எலக்ட்ரிக் காரின் விற்பனை மற்றும் பிற நிறுவனங்களின் வருகை காரணமாக டெஸ்லா -வின் பங்கீடு 69 சதவீதமாக இந்த வருடம் குறைந்துள்ளது என மார்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.
எலக்ட்ரிக் கார் விற்பனையில் வளர்ச்சி
இதே நேரத்தில் அமெரிக்காவில் எலக்ட்ரிக் கார் விற்பனை அமெரிக்காவில் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் சுமார் 34 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது மட்டும் அல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் கார் விற்பனை 5.4 சதவீதம் இக்காலத்தில் குறைந்துள்ளது. இதேவேளையில் அடுத்தச் சில காலாண்டுகளில் 10க்கும் அதிகமாக நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்-ஐ அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
டெஸ்லா மாபியா
இன்னும் சொல்லப்போனால் டெஸ்லாவில் இருந்து வெளியேறிய பல உயர் அதிகாரிகள் தற்போது எலக்ட்ரிக் டிரக், எலக்ட்ரிக் பஸ் ஆகியவற்றைத் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளனர். இதன் மூலம் பேபால் மாபியா-வில் ஒரு பகுதியாக இருந்த எலான் மஸ்க் தற்போது டெஸ்லா மாபியா-வை உருவாக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications