அமெரிக்கா: எலான் மஸ்கிற்கு சொந்தமான மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவில் கிட்டத்தட்ட 17 ஆண்டு காலம் தலைமை பொறுப்பை ஏற்று நடத்தி வந்த இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட வினீத் மேத்தா திடீரென தன்னுடைய வேலையை ராஜினாமா செய்திருக்கிறார்.
டெஸ்லா நிறுவனத்தின் பேட்டரி கட்டமைப்பு துறைக்கு தலைவராக பதவி வகித்து வந்தவர் தான் வினீத் மேத்தா. 17 ஆண்டுகாலம் இந்த பொறுப்பினை ஏற்று நடத்தி வந்த அவர் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். 2007 ஆம் ஆண்டு டெஸ்லா நிறுவனத்தில் இவர் பணிக்கு சேர்ந்தார் . அப்போது டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்களுக்கான பேட்டரிகளை வடிவமைத்து தந்து எலான் மஸ்கின் கவனத்தை ஈர்த்தார். இதனை அடுத்து அவருக்கு பேட்டரி பிரிவுக்கான தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது.

17 ஆண்டு காலம் இந்த பொறுப்பை வகித்து வந்த அவர் டெஸ்லாவை விட்டு வெளியேறி இருக்கிறார். இதற்கு முன்பு பவர் ட்ரெயின் பிரிவின் தலைவராக இருந்த ட்ரியோ பேக்லினோவும் டெஸ்லா நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். அவர் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியேறின நிலையில் ஓராண்டு கழித்து வினீத் மேத்தா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்.
டெஸ்லா நிறுவனம் பல்வேறு சவால்களை சந்தித்திருக்கும் இந்த வேலையில் தான் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ராஜினாமா அரங்கேறி வருகிறது. உலகிலேயே நம்பர் ஒன் மின்சார கார் உற்பத்தி , விற்பனை நிறுவனமாக இருந்த டெஸ்லா தன்னுடைய இடத்தை இழந்துவிட்டது. டெஸ்லாவுக்கு போட்டியாக உருவான சீனாவின் பிஒய்டி நிறுவனம் தற்போது மின்சார கார்கள் விற்பனையில் முதலிடத்தை பிடித்து விட்டது.
சர்வதேச அளவில் டெஸ்லா நிறுவனம் விற்பனை சரிவை சந்தித்திருக்கும் நிலையில் அதன் தலைமை செயல் அதிகாரியாக இருக்கக்கூடிய எலான் மஸ்க் டிரம்ப் நிர்வாகத்தில் தனக்கு வழங்கப்படும் பொறுப்புகளை கவனித்து வருகிறார். இதன் காரணமாக டெஸ்லா நிறுவன முதலீட்டாளர்கள் பலரும் எலான் மஸ்க் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டும் அல்லது அரசின் பொறுப்புகளை கைவிட்டு விட்டு முழுவதுமாக டெஸ்லா நிறுவனத்தை கவனிக்க தொடங்க வேண்டும் என கூறுகின்றனர்.
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் டெஸ்லா நிறுவனத்தின் விற்பனை 13 சதவீதம் வரை சரிவடைந்து இருக்கிறது . நிறுவனத்தின் பங்கு மதிப்பும் இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து தற்போது வரை 30 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டிருக்கிறது . இந்த நிலையில் தான் தலைமை பொறுப்புகளில் இருப்பவர்கள் பலரும் ராஜினாமா செய்து வருகின்றனர்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications