ஈரான் - இஸ்ரேல் மோதல் தற்காலிகமாக முடிந்து உலகம் அமைதி நிலைக்கு வந்துவிட்டது என நினைப்பதற்குள் மற்றொரு போர் வெடித்துவிட்டது. தாய்லாந்து - கம்போடியா நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக எல்லையில் இருந்து வந்த ஒரு பிரச்சனை தற்போது பூதாகரமாக வெடித்து இருக்கிறது.
கம்போடியா மீது தாய்லாந்து போர் விமானங்கள் மூலமும் பீரங்கி பயன்படுத்தியும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 14 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தாய்லாந்தும் கம்போடியாவும் எல்லையை பகிரும் நாடுகள். இதில் சுரின் மாகாணத்தில் அமைந்திருக்கும் ஒரு கோயில் தங்களுக்கே சொந்தம் என இரு நாடுகளும் கூறி வருகின்றன.

அவ்வப்போது பிரச்சனை எழுந்தாலும் சில நாட்களில் அது முடிவுக்கு வந்துவிடும். ஆனால் இரு தினங்களுக்கு முன்னர் இந்த பகுதியில் கன்னி வெடி வெடித்து தாய்லாந்து ராணுவ வீரர்கள் ஐந்து பேர் காயமடைந்தனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வலுத்திருக்கிறது. இந்த மோதலில் ராணுவ ரீதியாக எந்த நாடு பலம் கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ராணுவ பலம்: கம்போடியா ஒரு ஆண்டுக்கு 1.3 பில்லியன் டாலர்களை பாதுகாப்பு துறைக்கு என பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்கிறது .மொத்தம் 1, 24, 300 வீரர்களை கொண்டிருக்கிறது இவர்களில் 75 ஆயிரம் பேர் ராணுவ வீரர்கள். இவர்களுக்கு 200க்கும் அதிகமான டேங்கிகளும் 480 ஆர்டைலரி யூனிட்டுகளும் இருக்கின்றன. தாய்லாந்து ஒரு ஆண்டுக்கு 5.73 பில்லியன் டாலர்களை பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கீடு செய்கிறது. 3,60,000 பேர் ராணுவத்தில் பணி புரிகின்றனர். இதில் ராணுவ வீரர்களாக மட்டும் 2,45,000 பேர் செயல்படுகின்றனர். கம்போடியாவை விட இது மூன்று மடங்கு அதிகம்.

விமானப்படை : கம்போடியா விமான படையிடம் 10 போக்குவரத்து விமானங்களும் 10 ஹெலிகாப்டர்களும் இருக்கின்றன 1500 பேர் விமானப்படையில் பணிபுரிகின்றனர். கம்போடியா வசம் எந்த ஒரு போர் விமானமும் கிடையாது. தாய்லாந்தில் 46,000 பேர் விமானப்படையில் பணிபுரிகின்றனர். 112 விமானங்கள் இருக்கின்றன, இதில் 28 f6 ஃபால்கன் ரக போர் விமானங்களும் இருக்கின்றன., குறிப்பாக அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட பிளாக் ஹாவ்க் ஹெலிகாப்டர்களை தாய்லாந்து ராணுவம் கொண்டிருக்கிறது.
கடற்படை: கம்போடியாவில் 2800 பேர் கடற்கரையில் வேலை செய்கின்றனர் இவர்களிடம் 13 ரோந்து கப்பல்கள் இருக்கின்றன. தாய்லாந்திடம் 70,000 பேர் கடற்படையில் வேலை செய்கின்றனர், ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல், 68 ரோந்து கப்பல்களை கொண்டிருக்கிறது.
ராணுவத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு, ராணுவ உபகரணங்கள் ,நவீன ஆயுதங்கள், போர் விமானங்கள் அனைத்தும் தாய்லாந்திடம் குவிந்து கிடக்கின்றன அமெரிக்காவுக்கு நெருக்கமான ஒரு நாடாக இருப்பதால் எந்த ஒரு உதவியை கேட்டாலும் அமெரிக்கா ராணுவம் முன்வந்து செய்யக்கூடிய ஒரு நிலையிலும் தாய்லாந்து இருக்கிறது. எனவே இந்த போரில் தாய்லாந்தின் கை தான் ஓங்கி இருக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications