டிரம்ப் 2வது முறையாக அதிபராக பதவியேற்ற நாளில் இருந்து கிரிப்டோகரன்சி மதிப்பு தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக டிரம்ப் அரசின் சொந்து இருப்பில் கிரிப்டோவை சேர்ப்பதாக அறிவித்ததும், அமெரிக்க ஊழியர்களின் 401(K) கணக்கில் இருக்கும் பணத்தை வைத்து கிரிப்டோ உள்ளிட்ட சொத்துக்களில் முதலீடு செய்ய அனுமதி அளிப்பது தொடர்பான பணிகள் துவங்கியுள்ளது. இது அனைத்தையும் பிட்காயின் உள்ளிட்ட முக்கியமான கிரிப்டோகரன்சிகளின் மதிப்பை வரலாற்று உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு உயர்ந்தாலும், அதன் பயன்பாடு பொருத்து தான் அதனுடைய சப்ளை, டிமாண்ட், அடுத்தக்கட்ட வளர்ச்சிகள் இருக்கும். இப்படியிருக்கையில் இதற்கான கதவுகளை திறக்கிறது தாய்லாந்து.

தாய்லாந்து அரசு, தனது சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கத்தில், வெளிநாட்டு பயணிகள் தங்கள் டிஜிட்டல் சொத்துக்களை வைத்து பாத் (Baht) நாணயமாக மாற்ற அனுமதி அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த பணத்தை வைத்து சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஹோட்டல் செலவுகளுக்கும் பயண செலவுகளுக்கும் பயன்படுத்துவதற்கு புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது.
சுற்றுலா சார்ந்த பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு தாய்லாந்து அரசு எடுத்த ஒரு முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது, இந்த மாற்றம் மூலம், வெளிநாட்டு பயணிகளுக்கு எளிமையான மற்றும் கூடுதல் பரிவர்த்தனை விருப்பங்களை வழங்கும்.
தாய்லாந்து நாட்டின் நிதி அமைச்சர் பிச்சை சுன்ஹவாஜிரா, திங்கட்கிழமை நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில், இந்த திட்டம் மூலம் டிஜிட்டல் சொத்துக்களை பயன்படுத்துவதற்கும் முயற்சி எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
TouristDigipay திட்டம்: வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கிரிப்டோகரன்சியை பயன்படுத்துவதற்கா புதிய "TouristDigipay" திட்டம், 2025ஆம் ஆண்டு நான்காம் காலாண்டில் ஒரு ரெகுலேட்டரி சேண்ட்பாக்ஸ் கட்டமைப்பில் 18 மாத பரிசோதனை காலத்தை தொடங்க உள்ளது. இதன் மூலம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கள் டிஜிட்டல் சொத்துக்களை பாட் நாணயமாக மாற்ற முடியும்.
இதேபோல் டிஜிட்டல் சொத்துக்கள் நேரடியாக பொருட்கள் அல்லது சேவைகளுக்காக பரிவர்த்தனை செய்ய முடியாது, அவை பாட் நாணயமாக மட்டுமே மாற்றப்பட வேண்டும். மேலும் வணிகர்கள் பாட் நாணயத்தில் மட்டுமே பரிவர்த்தனை செய்வார்கள், கிரிப்டோவில் வர்த்தகம் செய்ய கூடாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டம், தாய்லாந்து சுற்றுலா துறையை உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையில் இதுவரையில் பெரும் புரட்சி செய்தது இந்தியா தான், இதை தொடர்ந்து தற்போது கிரிப்டோ புரட்சியை தாய்லாந்து கையில் எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications