பாங்காக், தாய்லாந்து: உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களைக் கொண்ட ஒரு நாடாக தாய்லாந்து திகழ்ந்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களின் விருப்பமான ஒரு சுற்றுலாத்தலமாக தாய்லாந்து மாறி இருக்கிறது. இந்த நிலையில் தாய்லாந்து திடீரென தன்னுடைய எல்லைகளை மூடி இருக்கிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்து நாட்டிற்கும் கம்போடியா நாட்டிற்கும் இடையே எல்லையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கம்போடியா உடனான தன்னுடைய எல்லையை தாய்லாந்து அரசு மூடியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் எல்லையை கடந்து செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு இடையே எல்லையை பகிர்வதில் நீண்ட காலமாக பிரச்சினை இருக்கிறது.

எமரால்டு ட்ரையாங்கில் என்ற பகுதியில் இருக்கும் எல்லை தங்களுக்கே சொந்தம் என இரு நாடுகளுன் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதன் காரணமாக கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து இந்த பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நிகழ்ந்து வருகிறது. இதுவரை சுமார் 28 பேர் இந்த மோதல் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த சூழலில் மே 28ஆம் தேதி தாய்லாந்து ராணுவம் நடத்தியது துப்பாக்கி சூட்டில் கம்போடியாவை சேர்ந்த ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார். இதனை அடுத்து எல்லையில் மீண்டும் பதற்றம் உண்டாகியுள்ளது. இந்த பதற்றம் காரணமாக பாதுகாப்பு கருது தாய்லாந்து அரசு கம்போடியா உடனான தன்னுடைய இரண்டு எல்லைகளை மூடி இருப்பதாக அறிவித்துள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் எல்லையை கடக்க முடியாமல் தவிக்கின்றனர்.
முன்னதாக பிரச்சினையை தீர்ப்பதற்காக தாய்லாந்து மற்றும் கம்போடிய பிரதமர்கள் ஞாயிற்றுகிழமை அன்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து எல்லையில் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வருவது என அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏட்டப்பட்டது. ஜூன் 14ஆம் தேதி மீண்டும் இருநாட்டு பிரதமர்கள் மத்தியிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட இருக்கிறது. தற்போது இருநாட்டு படைகளும் எல்லையில் தங்கள் பகுதிக்கான கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கின்றன.
தற்போதைக்கு எல்லையில் பதற்றம் தணிந்து இருப்பதாக இருநாட்டு அரசுகளும் தெரிவித்து இருக்கின்றன. தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து சர்வதேச நீதிமன்றம் குறிப்பிட்ட அந்த எல்லை பகுதி கம்போடியாவுக்கு தான் சொந்தமானது என தெரிவித்தது . ஆனால் தாய்லாந்து அதனை ஏற்க மறுத்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications