இயற்கையை நம்பினால் 22 டிரில்லியன் டாலர் சேமிக்கலாம்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: உலகில் உள்ள பெரு மற்றும் சிறு நகரங்களில் இயற்கை வளங்களை மேம்படுத்தினால், உலக நாடுகள் சுமார் 22 டிரில்லியன் டாலர் வரை சேமிக்கலாம்.

 

இத்தகவல்களைப் பொருளாதாரம் மற்றும் பருவநிலைக்கான உலகக் கூட்டமைப்புப் பிரட்டனில் நடத்த முக்கிய நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளது.

22 டிரில்லியன் டாலர்..

22 டிரில்லியன் டாலர்..

ஒரு நாட்டின் பருவநிலைக்கு ஏற்றார்போல் போக்குவரத்து, கட்டிடங்களில் மின்சாரம் மற்றும் எனர்ஜி சேமிப்புத் திட்டங்கள் மற்றும் கழிவுகளைத் திறன்படப் பயன்படுத்தும் மேலாண்மை திட்டங்கள் ஆகியவற்றை அமல்படுத்துவதன் மூலம் 2050ஆம் ஆண்டில் உலக நாடுகள் தங்களது செலவீனத்தில் 22 டிரில்லியன் டாலர் வரை சேமிக்க முடியும்.

22 டிரில்லியன் டாலர் என்றால் இன்றைய நாணய மதிப்பில் 146,30,000 கோடி ரூபாய்.

 

இதைச் சொல்வது யார்??

இதைச் சொல்வது யார்??

பிரட்டன் மற்றும் 6 முக்கியப் பொருளாதார நாடுகளின் நிதியமைச்சகர்கள் மற்றும் ஆய்வு அமைப்புகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பொருளாதாரம் மற்றும் பருவநிலைக்கான உலகக் கூட்டமைப்பு (GCEC) இந்தத் தகவல்களை வெளியிட்டது.

 

 

பொருளாதார வளர்ச்சி
 

பொருளாதார வளர்ச்சி

தற்போதைய சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரச் சூழ்நிலையில் பருவநிலை ஏற்ப வடிவமைக்கப்பட்ட நகரங்களில் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்வியல் மிகவும் சிறப்பாக உள்ளது.

எப்படி என்றால் கார்பன் வாயு வெளிப்படுவதைக் கட்டுப்படுத்தினால் சுற்றுச்சூழல் மிகவும் சிற்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இதனால் பொருளாதார வளர்ச்சி நேரடியாக உயரும்.

 

இலக்குகள்

இலக்குகள்

இன்றைய நிலையில் உலக நாடுகள் கார்பன் வாயு வெளியேற்றத்தை 2030ஆம் ஆண்டுக்குள் வருடத்திற்கு 3.7 ஜிகாடன்னாக உயர்த்த இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.

முதல் படி..

முதல் படி..

இலக்கை அடையப் பொருளாதார நாடுகளின் முதல் படி பொதுப் போக்குவரத்து முறையை மேம்படுத்துவது தான் இதன் மூலம் அதிகளவிலான கார்பன் வாயு வெளியேற்றத்தைத் தடுக்க முடியும். இதன் பின் பருவநிலைக்கு ஏற்றக் கட்டிடங்களை வடிவமைத்தல் மற்றும் எனர்ஜி சேமிப்புத் திட்டங்களை நிறுவுதல் ஆகியவையே என GCEC அமைப்பு தெரிவித்துள்ளது.

காற்று மாசுபாடு

காற்று மாசுபாடு

காற்று மாசுபாட்டின் காரணமாகச் சீனாவில் தினமும் 4,000க்கும் அதிகமானோர் இறந்து வருகின்றனர். இந்தியாவில் டெல்லியில் மட்டும் காற்று மாசுபாட்டின் காரணமாக மட்டும் 80 பேர் இந்திய மக்கள் தங்களது உயிரை இழந்து வருகின்றனர்.

மக்களும் அரசு...

மக்களும் அரசு...

இத்தகைய முறையை நடைமுறைப்படுத்த அரசு மட்டும் அல்லாமல் மக்களும் இணைந்து செயல்பட்டால் 2050ஆம் ஆண்டு வரை காத்துக்கொண்டு இருக்கத் தேவையில்லை... 2040ஆம் ஆண்டிலேயே வெற்றியடையலாம்.

சிந்திக்கவும்.. செயல்படவும்..

 

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The $22 trillion opportunity

That’s how much governments across the globe could save if they tweaked their cities and towns to the demands of nature.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X