வாஷிங்டன்: கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது. உக்ரைனுக்கு சொந்தமான குறிப்பிட்ட சில பகுதிகள் தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி ரஷ்யா தாக்குதல் நடத்த உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தியது.
இந்த பதில் தாக்குதலுக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு பெருமளவில் ராணுவ உதவிகளையும் நிதி உதவிகளையும் வழங்கின. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரக்கூடிய இந்த போரில் லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய வீடுகளையும் உடைமைகளையும் இழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றிருக்கும் டிரம்ப் எப்படியாவது போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டுவேன் என தெரிவித்துள்ளார்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா பெரிய அளவிலான தொகையை செலவு செய்திருப்பதாகவும் இனி அதற்கு தான் அனுமதிக்க போவதில்லை என்றும் டிரம்ப் கூறியிருக்கிறார். ஏற்கனவே இந்த போர் தொடர்பாக ரஷ்யா நாட்டு பிரதிநிதிகளுடன் அமெரிக்க தரப்பில் ஒரு பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாக உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா வருகை தந்து வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொடக்கத்தில் பேச்சுவார்த்தை சமூகமாகவே சென்றது ஆனால் சில நிமிடங்களிலேயே இந்த பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியது. முன்னதாக ஜெலன்ஸ்கியின் அமெரிக்க வருகையின் போது உக்ரைன் நாட்டில் இருக்கும் கனிம வளங்களை தோண்டி எடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிக்க வழிவகை செய்யும் பொருளாதார ஒப்பந்தத்தில் ஜெலன்ஸ்கி கையெழுத்திடுவார் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வரைவு ஒப்பந்தம் ஏற்கனவே தயாராகி விட்டதாக அமெரிக்க அரசு தெரிவித்தது.
அதாவது ரஷ்யா உடனான போரில் இதுவரை அமெரிக்கா உக்ரைனுக்கு அளித்த நிதி உதவி மற்றும் எதிர்வரும் காலங்களில் பாதுகாப்பு அளிப்பதற்கு ஈடாக உக்ரைனில் இருக்கும் சில குறிப்பிட்ட கனிம வளங்களை தோண்டி எடுக்கும் உரிமையை அமெரிக்காவிற்கு வழங்க வேண்டும் என்பதுதான் அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள முக்கியமான அம்சம் . ஆனால் அதில் தங்கள் நாட்டுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பதற்கான முக்கியமான விஷயங்கள் இடம்பெறவில்லை என ஜெலன்ஸ்கி கூறியிருந்தார். அத்தகைய உத்திரவாதம் அளிக்கப்பட்டால் மட்டுமே இந்த பொருளாதார ஒப்பந்தத்தில் தான் கையெழுத்து இடுவேன் என அவர் தெரிவித்திருந்தார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த அமைதி பேச்சு வார்த்தையின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் கையொப்பமிடப்படும் என்றும் இது கையெழுத்திடப்பட்டால் அமெரிக்கா மிகப்பெரிய அளவில் லாபம் பார்க்கும் என்றும் சொல்லப்பட்டது .ஆனால் இந்த பேச்சு வார்த்தை மிகப் பெரிய வாக்குவாதத்தில் முடிந்து இந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.
சந்திப்பு ஆரம்பித்த முதல் முப்பது நிமிடங்கள் இரு தரப்பினரிடமும் மரியாதை நிமித்தமான பேச்சுகளே தொடங்கின பின்னர் தான் வார்த்தை மோதல்கள் தொடங்கின. அமெரிக்காவின் உதவி இல்லை என்றால் ரஷ்யாவை தீவிரமாக எதிர்கொள்ள முடியாது நாங்கள் ஆதரவை திரும்ப பெற்றுக் கொண்டால நீங்கள் இந்த போரில் நிலைத்து நிற்க முடியாது என்றும் டிரம்ப் அப்போது எச்சரிக்கை விடுத்தார்.
இதுவரை அமெரிக்கா செய்த உதவிக்கும் தற்போது மேற்கொண்டிருக்கும் அமைதி பேச்சு வார்த்தைக்கும் நீங்கள் எந்த ஒரு நன்றியும் கூறவில்லை என துணை அதிபர் ஜே டி வான்ஸ் கூறினார். இது வார்த்தை மோதல்களுக்கு வித்திட்டது. இதனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாமல். இதனிடையே பேச்சு வார்த்தையில் டிரம்ப் மற்றும் ஜே டி வான்ஸ் நடந்து கொண்ட விதம் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. ரஷ்யாவை கையாளுவதிலும் ஜெலன்ஸ்கியை கையாளுவதிலும் டிரம்ப் தவறிவிட்டார் என பலரும் சாடுகின்றனர். டிரம்ப் இந்த விவகாரத்தை ஒரு பிஸ்னஸ் டீலாக மட்டுமே பார்க்காமல் அணுகுமுறையை மாற்றினால் தான் நல்ல முடிவு கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications