'குடும்ப வணிகம்' சார்ந்த பெருநிறுவனங்களை இயக்குவது இருமுனை கத்தியை கையாள்வது போன்றதாகும். அந்த வணிகச்சூழல் வரமாகவும் சாபமாகவும் அமைய வாய்ப்புள்ளது.
குடும்ப வணிகம் இறுக்கமாக பின்னப்பட்ட மேலாண்மை அமைப்பை கொண்டதாகும். இது நிறுவனத்தின் வெற்றிக்கு உதவி செய்தாலும் அக்குடும்பத்தின் பெயரும் புகழும் நெருக்கடிக்கு ஆளாகாமல் அந்த நிறுவனம் இயங்க வேண்டும்.
மறுமுனையில் இதுவே 100 வருடங்கள் பழமையான நிறுவனத்தை உருவாக்க முதன்மை காரணமாக உள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுகிறதா.
குடும்ப வணிகம்
பொதுவாக குடும்பம் சார்ந்த வணிகத்தின் தலைமை நிர்வாக அதிகாரிகள் அந்த வணிக நிர்வாகத்தைத் தங்கள் குடும்ப நபர்களே இயக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
அதனால் சில தருணங்களில் சிறந்த நிர்வாகத் தகுதியை பெறாத குடும்ப உறுப்பினர் அந்த வணிகத்தைக் கவனிக்க நேரிடுகிறது.
வரலாறு
வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் வெற்றிகரமாக இயங்கிய சில நிறுவனங்கள் குடும்ப வணிகத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தலைமுறையினரின் நிர்வாகத் திறமையின்மையினால் சரிவைச் சந்தித்துள்ளது.
ஆனால் இதற்கு விதிவிலக்காக ஜப்பான் நாடு செயல்படுகிறது.
ஜப்பான்
குடும்ப வணிகத்தில் நீடித்த பெயரையும் நிறைந்த பழமையையும் பெற்றுச் சிறப்பாக அந்த நாடு செயல்படுகிறது. எட்டாவது நூற்றாண்டில் இயங்கிய உலகின் பழமையான இரு வணிக நிறுவனங்கள் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவையாகும்.
மற்றநாடுகள் இந்த விஷயத்தில் பின்தங்கினாலும் ஜப்பான் சிறந்த செயல்பாட்டைக் கொண்டுள்ளதற்கான காரணத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அது ஒரு பழமையான ஜப்பானிய வழக்கத்தை இன்றளவும் பின்பற்றுகிறது.
வயதானவர்களை தத்தெடுக்கும் ஜப்பானிய முறை
‘முக்கோயோஷி' என்று நூற்றாண்டு பழமை வாய்ந்த அந்த வழக்கத்தில் செல்வச் செழிப்பான குடும்பம் ஒரு ஆண்மகனைத் தத்தெடுத்துத் தங்கள் வீட்டு பெண் வாரிசுகளுக்கு திருமணம் செய்து விடுவார்கள்.
பின்னர் அந்த ஆண் அந்த குடும்பத்தின் வணிகத்தை கவனித்துக் கொள்ள வழி செய்யப்படுகிறது. உலகத்திலேயே அமெரிக்காவை அடுத்து ஜப்பானில் தான் அதிகமான தத்தெடுக்கும் முறை பின்பற்றப்படுகிறது.
தத்துப்பிள்ளை
2012 ஆம் ஆண்டில் எண்பதாயிரம் பேர் ஜப்பானில் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் தனிச் சிறப்பு என்னவென்றால் ஜப்பானில் பின்பற்றப்படும் தத்தெடுக்கும் முறையில் தொண்ணூறு விழுக்காடு ஆண்கள் இருபது முதல் முப்பது வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
குடும்பச் சொத்து
‘முக்கோயோஷி' முறையில் ஜப்பானில் சிவில் சட்டம் பின்பற்றப்படுகிறது. அந்த முறையில் குடும்பச் சொத்து ஆண் வர்க்கத்தைச் சார்ந்தே அமையப்பெற்றுள்ளது.
எனவே பெண் பிள்ளைகளை மட்டும் கொண்ட குடும்பத்தினர் ஒரு நல்ல ஆண் மகனை சட்டப்பூர்வமாக தத்தெடுக்க முற்படுகின்றனர்.
இந்த வழக்கம் இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற பிறகு கைவிடப்பட்டாலும் ஜப்பானில் அது கலாச்சாரம் சார்ந்து இன்றும் பின்பற்றப்படுகிறது. குடும்ப வணிகம் இதன் மூலம் நல்ல செழிப்பைப் பெறுவதினால் இந்தச் திட்டம் நல்ல பலனை எப்பொழுதும் கொடுக்கிறது.
ஒசாமு சுசூகி
‘சுசூகி' நிறுவனம் 1909 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்று முதல் பத்து கார் உற்பத்தியாளர் மத்தியல் சிறந்த இடத்தை பிடித்துள்ளது. அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ‘ஒசாமு சுசூகி' அந்த நிறுவனத்தில் நான்காவதாக தத்தெடுக்கப்பட்டவர் ஆவார்.
மிச்சியோ மட்சூய்
‘மட்சூயி செக்யுரிட்டிஸ் ' என்ற ஜப்பானிய வர்த்தக நிறுவனம் 1931 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் நான்காவது தலைமையை ஏற்றுள்ள ‘மிச்சியோ மட்சூய்' என்ற தொழில்அதிபர் மட்சூய் குடும்பத்தின் தத்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆவார்.
குடும்ப 'வியாபாரம்'
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications