பெர்ன்: உலகில் விலையுயர்ந்த வாழ்க்கை முறையைக் கொண்டுள்ள நாடுகளில் சுவிட்சர்லாந்து முக்கியமானவை. வங்கி சேவை மற்றும் நிதி பரிமாற்றத்தை முக்கிய வர்த்தகமாகக் கொண்டுள்ள இந்நாட்டு.
அரசு மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சில சலுகைகளை விலகிவிட்டு ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஒவ்வொரு மாதமும் நிபந்தனையற்ற அடிப்படை ஊதியம் என்ற வகையில் சுமார் 2,500 சுவிஸ் பிராங்களை வழங்க இந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
2,500 சுவிஸ் பிராங் என்றால் இந்திய ரூபாய் மதிப்பில் 1,70,866 ரூபாய். அமெரிக்க டாலர் மதிப்பில் 2525 டாலர்..!
சுவிஸ் அரசு திட்டமிட்டுள்ள படி, இந்நாட்டில் வருமையை ஒழிக்கும் விதமாகக் குடிமக்களுக்கு, அரசு அளிக்கும் சில சலுகைகள் அளிப்பதை நிறுத்திவிட்டு மாதம்தோறும் 2,500 சுவிஸ் பிராங், குழந்தைகளுக்கு 625 சுவிஸ் பிராங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட 1 லட்சம் கையெழுத்து வேண்டும் என்பதால் பொது வாக்கெடுப்புக்குச் செல்ல முடிவு செய்துள்ளது. இதன் முடிவுகள் வருகிற ஜூன் 5ஆம் தேதி வாக்கெடுப்பின் முடிவில் தான் தெரியும். தற்போது சுவிஸ் அறிவித்துள்ள படி மாதம் 2500 பிராங் என்ற முறையில் வருடம் 30,000 பிராங் அளிக்க முடிவு செய்துள்ளது. ஆனால் அது சுவிஸ் நாட்டில் 2014ஆம் ஆண்டுச் செய்யப்பட்ட வறுமைக் கோட்டின் அளவான 29,501 பிராங்களுக்குச் சற்றே அதிகமாகும். உலகச் சந்தையில் சுவிட்சர்லாந்து ஒரு பணக்கார நாடாக இருந்தாலும், இங்கு 8 பேரில் 1 ஒருவர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது பிரான்ஸ், டென்மார்க் மற்றும் நார்வே நாடுகளை விடவும் அதிகமாகும். இத்தகைய முறையை இந்தியா, கனடா போன்ற நாடுகளிலும் கொண்டு வரத் தத்தம் அரசுகள் ஆலோசனையும் ஆய்வுகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மாதமாதம் 1,70,866 ரூபாய்
வாக்கெடுப்பு
வறுமைக் கோடு 2014
சுவிஸ்
இந்தியாவிலும் இதே முறை..
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications