உலகிலேயே காஸ்ட்லியான சரக்கு இதுதான்.. ஒரு பாட்டில் விலை எவ்வளவு தெரியுமா..?

Posted By:
Subscribe to GoodReturns Tamil

தண்ணீர், காபி, தேநீர் மற்றும் பால் ஆகியவற்றுக்கு அடுத்ததாக உலகிலேயே அதிகம் நுகரப்படுவது மதுபானம் தான். கடந்த 8,000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பானங்கள் மனித வாழ்வின் ஒரு பகுதியாக விளங்கி வருகிறது. வரலாறு முழுவதும், மது அருந்துவது சமூக வாழ்வின் ஒரு பகுதியாக இருந்தது. மதுபானம் எல்லாக் கூட்டத்திலும் ஒரு பாகமாக இருந்தது மட்டும் அல்லாமல் இதனை "கடவுள்களின் பரிசு" (கிரேக்க புராணங்கள் டினோனிஸஸ் போன்றவை) எனக் கருதப்படுகிறது. எனவே, சில பானங்கள் ஏன் மற்றவற்றை விட அதிக விலையுள்ளவை?

ஆல்கஹால்-இன் விலை பிற பொருட்களைப் போல், உற்பத்தி செலவு, வரி, மார்க்கெட்டிங் செலவு, அதே போல் முதிர்வு காலம் போன்ற பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது.

இப்படி உலகின் மிக விலையுயர்ந்த மதுபானங்களைத் தேடிய போது பல மதுபானங்கள், மகிழ்ச்சிக்காகக் குடிப்பதை விடவும் தகுதிக்காக வைத்திருப்பதே பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட சில மதுபானங்களின் விலை மற்றும் விபரங்கள் உங்களுக்காக.

10. 1811 சாட்டௌ டி யாகெம்

வகை - வெள்ளை ஒயின்

விலை - $117 000

இந்த 200 வயதான பாட்டில் அதன் மதிப்பை நிறுவுவதில் பல சோதனைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. பன்ட் மற்றும் வண்ணம் 19 ஆம் நூற்றாண்டிலிருந்து முன்பு பார்த்த உதாரணங்கள் போலவே இருந்தன என்பதை ஒரு ஆய்வு உறுதிப்படுத்தியது. எனவே, இந்த அரிய மதுபான உரிமையாளரான நீங்கள் $ 117,000 மதிப்புள்ள பாட்டிலை கைதவற கட்டாயம் விரும்பமாட்டீர்கள்.

 

9. 1907 ஹெயட்சீக்

வகை - ஷாம்பெய்ன்

விலை - $275 000

இது உலகின் மிகவும் விலை உயர்ந்த ஷாம்பெய்ன் ஆகும். இந்த ஷாம்பெய்ன் வரலாறு - ஒரு ஜெர்மன் படகு மதுபானம் நிரம்பிய ஒரு ஸ்வீடிஷ் சரக்குக் கப்பலை மூழ்கி மூழ்கடித்தது. மதுபானம் 80 ஆண்டுகளுக்குக் கடலின் கீழ் 6௦ மீட்டரில் இருந்தது - ஒரு ஷாம்பெய்னுக்கு உகந்த சூழ்நிலை, பாட்டில் உள் உள்ள அதே அழுத்தம் மற்றும் குளிர் வெப்பநிலை.. ஒரு பாட்டில் $ 275,000 விலையில், மிக அற்புதமான ஒன்றாந்தால், முயற்சி செய்ய வாய்ப்பு கிடைத்தால், எந்தச் சந்தேகமும் இன்றி அருந்தலாம்

 

8. 1947 சாட்டௌ செவல் பிளாங்க்

வகை - சிவப்பு ஒயின்

விலை - $ 304 375

இதுவரை தயாரிக்கப்பட்ட மிகச்சிறந்த ஒயின்களில் ஒயின் காதலர்கள் சுவைக்க விரும்பும் ஒன்றாகும் இந்த ஒயின் கண்டுபிடிப்பே ஒரு விபத்து தான் , ஏனெனில் வானிலை நிலைமை 1947 இல் மிகவும் நன்றாக இருந்தது, இதற்கு ருசியான திராட்சை முக்கியக் காரணி. கின்னஸ் புத்தக உலகச் சாதனை பதிவில் இந்த ஒயின் இடம்பிடிக்கத் தகுதியுடையது ஏனெனில் ஒரு ஒயின் சேகரிப்பாளர் ஒரு பாட்டிலுக்கு $ 304, 375 செலவு செய்தார்

 

7. தி மெக்கல்லன் 1946

வகை - ஸ்காட்ச்

விலை - $460 000

ஏறத்தாழ அரை மில்லியன் டாலர்களுக்கு ஒற்றைப் பாட்டில் ஸ்காட்ச் விற்பனை செய்யப்பட்டது. எனினும், அந்தப் பணம் ஒரு தொண்டு நிறுவனத்திற்குச் சென்றது, எனவே இது ஒரு புதிய உலகச் சாதனையை அமைப்பதற்கான நல்ல வழி.

ஏன் இந்த ஸ்காட்ச் மிகவும் சிறப்பு வாய்ந்தது, அது எப்படி இவ்வளவு பணத்தை ஈட்டுகிறது? நிலக்கரி மிக அதிக அளவு விற்பனை ஆனா சமயத்தில் இந்த ஸ்காட்ச், நிலக்கரியினால் புகையிடப்பட்ட மால்ட்டினால் உருவானது

 

6. ஸ்க்ரீமிங் ஈகிள்

வகை - சிவப்பு ஒயின்

விலை - $500 000

இந்த ஒயின் 6 லிட்டர் பாட்டில் நம்பமுடியாத அரை மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டது என்பதால், அனைத்து ஒயின்களை விட மிகச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 1992 ஐ சார்ந்த இந்த விண்டேஜ் பாட்டில் மது ரசிகர் மட்டுமல்லாமல் மது அருந்தி ருசிக்க நினைக்கும் ஒவ்வொருவரும் முயற்சி செய்யவேண்டிய ஒயின் இது

 

5. மென்டிஸ் கோகோனட் பிராந்தி

வகை - பிராந்தி

விலை - $1,000,000

மென்டிஸ் இந்தச் சிறப்பு வகைக் கலவை உருவாக்கியவரின் பெயர், இது தேங்காயிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஒரு 100% தெளிவான பிராந்தியாகும் மற்றும் வடித்தல் பணியில் தேங்காய் சாறு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

இதைச் செய்தபின், ஒவ்வொரு பிராந்தியும் விற்பனைக்கு முன் குறைந்தது இரண்டு வருடம் சேகரம் செய்து வைக்கப்படும். நீங்கள் ஒரு மில்லியன் டாலர் மதுபானத்தின் மீது செலவு பண்ண தயார் என்றால் இந்தப் பிராந்தியை கருத்தில் கொள்ளுங்கள்.

 

4. ஸ்காட்டிஷ் ஓட்கா திவா

வகை - ஓட்கா

விலை - $1,600,000

மீண்டும், இந்த மதுவிற்கான விலை ஏன் மிக அதிகம் என்றால், வடித்தல் பணிமுரையில் தயாராகிறது. இங்கே ஆல்கஹால் மூன்று சுத்திகரிக்கப்பட்டது, கூடுதலாக, இது விலைமதிப்பற்ற கற்கள் பொருத்தப்பட்ட ஒரு பாட்டிலில் ஊற்றப்படுகிறது. இந்த ஸ்காட்டிஷ் ஓட்கா பல ஆயிரம் டாலர்கள் முதல் , 1.6 மில்லியன் டாலர்கள் வரை விலை போகும்.

இது இதுவரையிலான மிக உயர்ந்த விலையாகும், நீங்கள் மதுவில் அதிகம் செலவழிக்க விரும்பவில்லை எனில் இருந்தால், நீங்கள் சுமார் $ 4000 க்கு மூன்று முறை காய்ச்சி வடிகட்டிய ஓட்கா பாட்டில் வாங்கலாம், ஆனால் விலைமதிப்பற்ற கற்கள் இல்லாமல்.

 

3. ஹென்றி IV டுடோக்னான் ஹெரிடேஜ்

வகை - காக்னக்

விலை - $ 2 000 000

நாம் அருந்துவது காக்னக் என்றால் அதனை ஆடம்பரம் என்று சொல்வது நியாயமானது, அதிலும் குறிப்பாக ஹென்றி IV டுடோக்னான் ஹெரிடேஜ். இது 1776 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டு, நூறு ஆண்டுகளுக்கு மேல் பீப்பாய்களில் சேமிக்கப்பட்டவை. பாட்டில் 24K தங்கம் மற்றும் பல ஆயிரம் வைர துண்டுகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

காக்னாக் 41% ஆல்கஹாலுக்கு விலை 1.6 மில்லியன், (100 சிஎல் மட்டுமே) , இது உலகின் மிக விலை உயர்ந்த காக்னாக் ஆகும்

 

2. பேஷன் அஸ்டெகா டேக்யுலா லா

வகை - டெக்யுலா

விலை - $ 3,500,000

ஹென்றி IV டுடோக்னான் ஹெரிடேஜ் பாட்டில் செய்த அதே நிறுவனம், இதை உருவாக்குவதிலும் பங்கு வகிக்கிறது. உலகின் மிக விலையுயர்ந்த டெக்யுலாவான இது 3.5 மில்லியன் டாலர் விலையுடன் உலகின் மிக விலையுயர்ந்த மதுபானங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

1,375 லிட்டர் பாட்டில், 415 காரட் மதிப்புள்ள 6000 வைரங்கள் கொண்டது. நமது தரவரிசையில் முதலிடம் வகிக்கும் மதுபானம் என்ன என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

 

1. டி’அமல்ஃபி லிமன்செல்லோ சுப்ரீம்

வகை - லிக்கர்

விலை - $ 44,361,000

இது முந்தைய மதுவை விட 12 மடங்கு விலை அதிகமானது, மற்றும் அது எலுமிச்சை தோல் உடன் உட்செலுத்தப்பட்ட ஒரு ஆல்கஹால். இதற்கு ஒரு தெளிவான சுவை மற்றும் சிறந்த மணம் உண்டு. ஒரு நிமிடம் மதுபானம் பற்றி மறந்து விடுவோம், இந்தப் பாட்டிலில் 13 காரட் மதிப்புள்ள மூன்று வைரங்கள் உள்ளன.

கண்ணாடி மூலம் மதுபானம் மஞ்சள் நிறமாகவும் பச்சை நிற பிரதிபலிப்புகளாகவும் இருப்பதைக் காணலாம், (எலுமிச்சைத் துண்டுகள் உள்ளதால்). ஒரு சந்தேகமும் இல்லாமல், $ 44 மில்லியனுக்கும் மேலாக விலையுள்ள இதுதான் உலகின் மிக விலையுயர்ந்த மதுபானமாகும்

 

மது என்றால் என்ன?

மது மற்றும் ஸ்பிரிட் ஒரு ஆல்கஹாலிக் பானம் ஆகும். அவை சில வகைச் சர்க்கரை (பழங்கள் அல்லது தானியங்கள்) ஆகியவற்றை நோதிக்கவைத்து எத்தனால் மற்றும் CO2 பிரிக்கப்படுகிறது.

ஆல்கஹால் நச்சுத்தன்மையுள்ளதாக ஆகும் முன்பு ஈஸ்ட் அதை நொதிக்க வைக்கும், அதனால் ஆல்கஹால் உள்ளடக்கம் அதிகம் ஆவதற்கு , வடிகட்டுதல் செயல்முறை (நீரை பிரிப்பது) அவசியம்.

 

தேசிய பொருளாதாரம்

ஆல்கஹால் தொழில்துறை ஒவ்வொரு தேசிய பொருளாதாரத்திற்கும் பெரும் பங்களிப்பாளராக இருக்கிறது. DISCUS (தேசிய வர்த்தகச் சங்கம் காய்ச்சி வடிகட்டிய மது தயாரிப்பாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது) படி, இந்தத் தொழில் 2014 இல் அமெரிக்கப் பொருளாதாரத்தில் 475 பில்லியன் டாலருக்கும் அதிகமான பங்களித்தது.

டிஸ்டில்ட் மதுபானங்கள் 150 பில்லியன் டாலர் அல்லது மதுபானங்களின் மொத்த பொருளாதார நடவடிக்கைகளில் சுமார் 30% ஆகும். இந்தப் பெரிய எண்கள் மக்கள் மதுவை அனுபவித்து அருந்துகிறார்கள் என்பதைத் தான் குறிக்கிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The World Expensive Liquor is just cost 44 million a bottle

The World Expensive Liquor is just cost 44 million a bottle
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns