அட ஒப்பந்தம் ஒரு பக்கம் இருக்கட்டும் பாஸ்.. அமெரிக்காவுக்காக இந்தியா என்ன செய்யப் போகிறது.. !

நியூயார்க்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப தனது இரண்டு நாள் பயணமாக இந்தியா வரவிருக்கும் நிலையில், அவர் இந்தியாவுக்கு வருகை தரும்பொழுது இந்தியா இழந்த ஜிஎஸ்பி சலுகைகள் பற்றி பேசப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்திய - அமெரிக்க இடையிலான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு வாய்ப்பு இல்லை என்று கருதுவதாக அமெரிக்க வர்த்தக துறையின் மூத்த அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் முக்கிய ஒப்பந்தம் தவிர, மற்ற சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று அதிகாரிகள் கூறப்படுகிறது.

இந்தியா வருகை

இந்தியா வருகை

இந்த நிலையில் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வருகையின் போது, வர்த்தக ஒப்பந்த பேச்சு வார்த்தகர்களை இயக்கும் அமெரிக்கா வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர் வரவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ் டிரம்புடன் வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

என்ன ஒப்பந்தம் போடப்படலாம்

என்ன ஒப்பந்தம் போடப்படலாம்

இந்த வருகையின் போது பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி முன்னணி தொடர்பான சில ஒப்பந்தங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அதிகாரிகள் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் அறிவுசார் சொத்து பாதுகாப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் இந்த இரண்டு நாள் பயணத்தின் போது கையெழுத்திடப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் அந்த ஒப்பந்தம் பற்றிய விவரங்கள் தனக்கு தெரியவில்லை என்று கூறப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியா மீது குற்றம் சாடல்

இந்தியா மீது குற்றம் சாடல்

மேலும் இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்தியா அமெரிக்காவுக்காக என்ன செய்யத் தயாராக இருக்கிறது என்பதை பொறுத்து தான் இருக்கும். இந்தியா மேல் தான் தவறு இருக்கிறது. இந்தியா அதை மாற்றிக் கொண்டால் வர்த்தக ஒப்பந்தம் போடபலாம் என்று முழுக்க முழுக்க இந்தியாவையே அந்த அதிகாரிகள் குற்றம் சாட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.

பிரச்சனையை மோசமாக்குகிறது

பிரச்சனையை மோசமாக்குகிறது

அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் 2020ல் சில இறக்குமதி பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகரித்துள்ளது இந்தியா. இது இந்த இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனையை இன்னும் மோசமாக்குகிறது. கடந்த பல வாரங்களில் இந்தியாவில் இருந்து பல அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அவை விவாதங்களை சற்று கடினமாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வர்த்தக வாய்ப்பு

வர்த்தக வாய்ப்பு

பொதுவாக்கப்பட்ட முன்னுரிமைகள் பட்டியல் நாடுகளின் வரிசையில் இருந்து இந்தியாவை அமெரிக்கா சமீபத்தில் விலக்கி வைத்தது. இதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. இந்த காரணங்களில் மிகவும் முக்கியமானது அமெரிக்காவுக்கு சமமான வர்த்தக வாய்ப்புகளை இந்தியா வழங்கவில்லை என்பது தான்.

ஜிஎஸ்பி சலுகை

ஜிஎஸ்பி சலுகை

மேலும் இந்தியாவின் இந்த முக்கிய முடிவுக்கு நியாயமான காரணங்களைக் கூறவும் இந்தியாவால் இயலவில்லை .அதனால் தான் ஜிஎஸ்பி முன்னுரிமைகள் பட்டியல் நாடுகளின் வரிசையில் இருந்து இந்தியாவை அமெரிக்கா நீக்கியது .இப்பொழுதும் அதே நிலை தான் நீடிக்கிறது. அமெரிக்காவிற்கு எதிராக இந்தியா பல தடைகளை உருவாக்கி வைத்துள்ளது. இந்த தடைகளை ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளனர். ஆனால் இதுவரை இந்த இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டதாக தெரியவில்லை.

இந்தியாவுக்கு டிரம்ப் வருகை

இந்தியாவுக்கு டிரம்ப் வருகை

இப்படி ஒரு நிலையில் தான் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், அமெரிக்க உயர் அதிகாரிகளும் நாளையும் நாளை மறுநாளும் இந்தியாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். அப்பொழுது அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் .அப்பொழுதும் இந்தியா தன்னுடைய வர்த்தகத் தடைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தும் என அமெரிக்க வர்த்தக துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்து வேறுபாடு

கருத்து வேறுபாடு

மேலும் இ- காமர்ஸ், டிஜிட்டல் வர்த்தகம் ஆகியவற்றில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் குறையவில்லை. இன்னும் சொல்லப்போனால் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் போகிறது. அது மட்டுமன்றி இந்தியாவுடன் வர்த்தக சமநிலை இல்லை என்றும் கூறப்படுகிறது.

வர்த்தக பற்றாக்குறை

வர்த்தக பற்றாக்குறை

நாளுக்கு நாள் இந்தியாவில் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்து வருவதாக டொனால்டு டிரம்ப் அடிக்கடி கூறி வருகிறார். மேலும் பண்ணை பொருட்கள், பால் பொருட்கள், மருத்துவ உபகரணங்களை இந்தியாவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்ய அமெரிக்கா விரும்புகிறது. இதற்கான சந்தை வாய்ப்புகளை இந்தியா உருவாக்கித்தர வேண்டும் என்று அந்த நாடு எதிர்பார்க்கிறது.

அமெரிக்கா ஆர்வம்

அமெரிக்கா ஆர்வம்

ஆனால் இதே நேரம் அமெரிக்கா உருக்கு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான வரியை குறைப்பதுடன், வர்த்தக முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்றும் இந்தியா எதிர்பார்க்கிறது. ஆனால் அமெரிக்கா இதுவரை இன்று வரை அசைந்து கொடுப்பதாக இல்லை. சொல்லப்போனால் இந்தியாவுடனான வர்த்தகத்தை டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வருவதால் இந்தப் பயணத்தின்போது, பெரிய அளவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எதையும் அமெரிக்கா செய்து கொள்ளாது என்றே பேசப்படுகிறது.

சம நிலையை உறுதிப்படுத்த விருப்பம்

சம நிலையை உறுதிப்படுத்த விருப்பம்

இந்த நிலையில் இந்த இரு நாட்டு அதிகாரிகளும் ஒருவருக்கொருவர் சந்தைகளை அணுகுவதன் முக்கியத்துவத்தை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலு இந்தியாவுடனான வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவு அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமானது. மேலும் அமெரிக்கா சந்தைக்கான அணுகல் இந்திய அரசாங்கத்திற்கு முக்கியமானது என்று நினைக்கிறேன். ஆக இந்த சமநிலையை நாங்கள் சரியாகப் பெறுகிறோம் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+