இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு என்பது எப்போதும் பிரச்சனையாகவே உள்ளது. பெட்ரோல் மீது மத்திய மற்றும் மாநில அரசுகள் என இரு தரப்பும் வரிகளை அதிகளவில் விதித்து இருப்பது தான் காரணம் என்று கூறுவதும், மத்திய அரசு கலால் வரியைக் குறைத்துள்ளது, தற்போது மாநில அரசுகள் அதனைக் குறைத்தால் தான் பெட்ரோல் விலை குறையும் என்று கூறுவது ஒரு பாக்கம் இருந்தாலும் பெட்ரோலை ஜிஎஸ்டி-கீழ் ஏன் கொண்டு வரவில்லை என்றும் மக்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.
அதே நேரம் சில நாடுகளில் சாக்லேட்டினை விடப் பெட்ரோல் விலை குறைவாக உள்ளதைக் கேள்விப்படும் போது ஆச்சர்யமாகவும் உள்ளது. எனவே எந்த நாடுகளில் எல்லாம் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது என்று இங்குப் பார்க்கலாம்.
10. ஓமன்
பெட்ரோல் விலை குறைவாக உள்ள 10 நாடுகள் பட்டியலில் கடைசி இடத்தினைப் பிடித்துள்ள ஓமனில் ஒரு லிட்டர் பெட்ரோல் 0.20 ஓமன் ரியாலுக்கு விற்கப்படுகிறது. 0.20 ஓமன் ரியால் என்பது இந்திய மதிப்பில் 33.87 ரூபாயாகும்.
9. கத்தார்
கத்தாரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.95 ரியால் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 3.58 ரூபாய் ஆகும்.
8. துர்க்மெனிஸ்தான்
துர்க்மெனிஸ்தானில் பெட்ரோல் டாலர் கணக்கில் தான் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 0.53 டாலர் என்பதால் இந்திய மதிப்பின் படி 34.55 ரூபாய் ஆகும்.
7. பஹ்ரைன்
பெட்ரோல் ஏற்றுமதி செய்யப்படும் நாடான பஹ்ரைனில் ஒரு லிட்டர் 0.14 பஹ்ரைன் தினார் என்று விற்கப்படுகிறது. இது இந்திய மதிப்பில் 24.21 ரூபாய் ஆகும்.
6. குவைத்
பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் உறுப்பினராக உள்ள குவைத் உலகளவில் இந்திய உட்படப் பல நாடுகளுக்குப் பெட்ரோல் ஏற்றுமதியை சேய்கிறது. குவைத்தில் ஒரு லிட்டர் 0.35 டாலர் என விற்கப்படுகிறது, இந்திய மதிப்பில் 22.83 ரூபாய் ஆகும்.
5. அல்ஜீரியா
ஆப்ரிக்கா நாடான அல்ஜீரியாவில் பெட்ரோல் 0.37 டாலராக விற்கப்படுகிறது. இது இந்திய விலையில் 24.14 ரூபாய் ஆகும்.
4. எகிப்த்
நான்காம் இடம் பிடித்துள்ள எகிப்த்தில் பெட்ரோல் விலை மிகக் குறைவாக லிட்டர் 0.27 டாலர் விற்பனை செய்யப்படுகிறது. இது இந்திய மதிப்பில் 18.05 ரூபாய் ஆகும்.
3.லிபியா
மூன்றாம் இடம் பிடித்துள்ள லிபியாவில் பெட்ரோல் விலை டாலர் மதிப்பில் விற்கப்படுகிறது. லிபியாவில் ஒரு லிட்டல் பெட்ரோல் 0.14 டாலர் என இந்திய மதிப்பின் படி 9.13 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
2.சவுதி அரேபியா
உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து வரும் சவுதி அரேபியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 2.04 சவுதி ரியால் என இந்திய மதிப்பின் படி 35.48 ரூபாய் ஆகும்.
1.வெனிசுலா
உலகளவில் பெட்ரோல் விலை மிகக் குறைவான விலைக்கு விற்கப்படும் நாடு வெனிசுலா. இங்குக் கடந்த 20 வருடமாகப் பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 0.1 டாலர் என இந்திய மதிப்பில் 6.52 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது அனைவருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக இருக்கிறது.
More From GoodReturns

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications