பிரிட்டனின் மிகப் பெரிய கோடிஸ்வர்கள் இந்தியாவில் பிறந்த ஹிந்துஜா சகோதரர்கள் ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் ஆகியோர் என்று சண்டே டைம்ஸ் ரிச் 2017 பட்டியல் வெளியாகியுள்ளது. இதை கண்டு பிரிட்டன் மக்கள் அதிர்ச்சிக்குள் ஆகியுள்ளனர்.
134 பேர் கொண்ட பில்லியனர்கள் பட்டியலில் முதல் இடத்தை இந்தச் சகோதரர்கள் இடம்பிடித்துள்ளனர். இந்த இரண்டு சகோதரர்களிடமும் சென்ற ஆண்டை விட முறையே 16.2 பில்லியன் பவுண்டுகள் மற்றும் 3.2 பில்லியன் பவுண்டுகள் சொத்து அதிகரித்துள்ளது.
ரூபன் சகோதரர்கள்
ஈராக் யூத இனத்தைச் சேர்ந்த மும்பையில் பிறந்து வளர்ந்த டேவிட் மற்றும் சைமன் ரூபன் முதல் இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்குப் பின் தங்கியுள்ளனர். இவர்களுடைய சொத்து மதிப்பு 14 மில்லியன் பவுண்டுகள் ஆகும்.
லக்ஷ்மி மிட்டல்
ஸ்டீல் நிறுவனத்தின் தலைவரான லக்ஷ்மி மிட்டல் 13.2 பில்லியன் பவுண்டு சொத்து மதிப்புடன் 4 வது இடத்தைப் பிடித்துள்ளார். சென்ற ஒரு ஆண்டில் மட்டும் இவருடைய சொத்து மதிப்பு 6.1 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.
பிரிக்ஸிட் பூதம்
பிரிக்ஸிட் முன்பு இவர்கள் எப்படி இருந்தார்களோ அதைவிட அதிகக் கோடிஸ்வரர்களாக இவர்கள் மாறியுள்ளனர். மொத்த பில்லியனர்களின் சொத்து மதிப்பும் 658 பில்லியன் பவுண்டுகளைத் தாண்டும் என்று கூறப்படுகின்றது.
டாப் 10-ல் பிரிட்டனின் வெஸ்ட்மினிஸ்டரின் டியூக்
டா 5 இடத்தில் ஒரு பிரட்டன் கோடிஸ்வரர்கள் கூட இல்லை என்பது ஆச்சர்யத்தை அளிக்கின்றது. ஆனால் வெஸ்ட்மினிஸ்டரின் டியூக் 9.52 பில்லியன் சொத்து மதிப்புடன் 9 வது இடத்தைப் பிடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications