உலக கோடீஸ்வரர்களின் பாதுகாப்பு செலவு எவ்வளவு தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த உலகில் பணம் சம்பாதிப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஒரு வேலை கஷ்டப்பட்டுப் பணத்தினைச் சம்பாதித்துவிட்டாலும் அதன் பிறகு மேலும் பல நெருக்கடிகள் வரும். அதில் முக்கியமான ஒன்று சம்பாதித்த பணத்தினைப் பாதுகாப்பாகச் சேமிப்பது மற்றும் உயிரை காப்பாற்றிக்கொள்வது.

 

நாம் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அதற்கு ஏற்றவாறு நம்முடைய செலவுகளை நாம் எப்படி அதிகரித்துக்கொள்கிறோமோ அதே போன்று கோடி கணக்கில் பணத்தினைச் சம்பாதித்து விட்டு அதனைப் பாதுகாக்கா மேலும் செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.

உலகில் பல முக்கியப் பில்லியனர்கள் தங்கள் பாதுகாக்காகக் கோடி கணக்கில் செலவுகளைச் செய்கின்றனர். அப்படி ஜெப் பிசோஸ் முதல் அம்பானி வரை உலகக் கோடீஸ்வரர்கள் தங்களது பாதுகாப்பிற்கு எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்ற விவரங்களை இங்குப் பார்ப்போம்.

வாரன் பஃபெட்

வாரன் பஃபெட்

பெர்க்ஷயர் ஹாத்வே லிமிட்டட் நிறுவன தலைவரான வாரன் பஃபெட் 2016--ம் ஆண்டு 2.60 கோடி ரூபாயினைத் தனது பாதுகாப்பிற்காகச் செலவு செய்துள்ளார். இவரது பாதுகாப்புச் செலவுகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில் தற்போது அது கிட்டத்தட்ட 3 கோடி ரூபாயாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஜெஃ பிசோஸ்

ஜெஃ பிசோஸ்

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வாரர் மற்றும் அமேசான் நிறுவனரான ஜெப் பிசோஸ் 2016-ம் ஆண்டு 10.75 கோடி ரூபாயினைத் தனது பாதுகாப்பிற்காகச் செலவு செய்துள்ளார். தற்போது அது 12 கோடி ரூபாயினைத் தாண்டும் என்று கூறுகின்றனர்.

மார்க் ஜூக்கெர் பெர்க்
 

மார்க் ஜூக்கெர் பெர்க்

உலகின் மிகப் பேரிய சமுக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூக்கெர்பெர்க் ஒரு நாளுக்கு 13.50 லட்சம் ரூபாய் எனச் சென்ற ஆண்டு மட்டும் 49 கோடி ரூபாயினைத் தனது பாதுகாப்பிற்காகச் செலவு செய்துள்ளார்.

 டிம் குக்

டிம் குக்

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக் ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாயினைத் தனது பாதுகாப்பு காரணங்களுக்காகச் செலவு செய்கிறார்.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி 2014-ம் ஆண்டு 14 லட்சம் ரூபாயினைத் தனது பாதுகாப்புக் காரணங்களுக்குச் செலவு செய்துள்ளார். அதன் பிறகு எவ்வளவு செய்துள்ளார் என்ற விவரங்கள் கிடைக்கவில்லை என்றாலும் இந்த 4 வருடத்தில் அது கண்டிப்பாக அதிகரித்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

These Top Businessmen Spend A Huge Amount On Security

These Top Businessmen Spend A Huge Amount On Security
Story first published: Thursday, October 11, 2018, 16:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X