இந்த நாடுகளில் எல்லாம் ஆண், பெண் இருவருக்கும் ஒரே சம்பளம் தான்..!

பாலினம், பாலியல் தன்மை அல்லது இனம் ஆகியவற்றின் அடிப்படையில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது என்று நிறுவனங்களுக்கு ஆணையிட்ட உலகின் முதல் நாடு ஐஸ்லாந்து ஆகும். இதில் வடக்கு அட்லாண்டிக் தீவு முன்னோடியாகத் திகழ்ந்தது. இந்நிலையில் பாலின சமநிலையோடு சம்பளம் அளிப்பதில் அதிக விகிதத்தைக் கொண்ட மற்ற நாடுகளைக் குறித்துக் கீழே காண்போம்.

நார்வே

நார்வே

இந்த ஸ்காண்டிநேவிய நாடு, கடந்த 1978 ஆம் ஆண்டுப் பார்லிமெண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாலின சமத்துவச் சட்டத்தின் கீழ் அதிகளவிலான பாலின சமநிலையைக் காண முடிகிறது. இது தவிர, பாலின நெறிப்படுத்தும் பாகுபாட்டிற்கு எதிரான சட்டத்தை (பாலின நெறிப்படுத்துதல், பாலின அடையாளம் மற்றும் பாலினம் வெளியிடுதல் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாட்டைத் தடுக்கும் சட்டம்) அவர்கள் அறிமுகப்படுத்தினர். மேலும் 1993 ஆம் ஆண்டுத் தந்தையாகும் ஆண்களுக்குக் கூடப் பெற்றோர் விடுப்பு அறிமுகம் செய்யப்பட்டு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருத்தமும் செய்யப்பட்டது.

ஸ்வீடன்

ஸ்வீடன்

உலகின் பல நாட்டு பார்லிமெண்ட்களிலும் அதிகளவிலான பெண்களின் எண்ணிக்கையைக் காண கிடைப்பது ஒரு அரிய காட்சியாகும். ஆனால் ஸ்வீடனில் நிலைமையே தலைகீழ். இது, உலகிலேயே அதிகளவிலான பெண்களை (44.7 சதவீதம்) பார்லிமெண்டில் கொண்ட நாடாகும். இந்த விஷயத்தில், மற்ற நோர்டிக் நாடுகளும் பெரும்பாலும் சிறப்பாகவே செயல்படுகின்றன. ஸ்வீடனைப் பொறுத்த வரை, அதன் துவக்கத்தில் இருந்தே சர்வதேச அளவிலான பாலின இடைவெளி இல்லாத அறிக்கையில் முதல் ஐந்து இடத்தில் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ருவாண்டா

ருவாண்டா

ருவாண்டா நாடு, பாலின சமநிலை பட்டியலில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவை எப்படிப் பின்னுக்குத் தள்ளியது என்பதை எண்ணி பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். ஆனால் கடந்த 1994 ஆம் ஆண்டு இங்கு நடைபெற்ற இனப்படுகொலைக்குப் பிறகு, ருவாண்டாவில் ஆண், பெண் என்ற இரு பாலருக்கும் சம உரிமை வழங்குவது கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தப் பாலின சமநிலையை அரசியல் மற்றும் பொருளாதாரப் பகுதிகளில் அதிகளவில் காண முடிகிறது. பார்லிமெண்ட்களில் அதிகப் பெண் அரசியல்வாதிகளைக் கொண்ட நாடுகளின் சர்வதேச அளவிலான பட்டியலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ருவாண்டா நாடு முதல் இடத்தில் உள்ளது.

பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ்

நாம் ஆசியா நாடுகளின் நிலையைப் பார்த்தால், சுகாதாரம் மற்றும் கல்வி துறைகளில் பாலின இடைவெளியை நீக்கிய சில நாடுகளில் ஒன்றாகப் பிலிப்பைன்ஸும் காணப்படுகிறது. மேலும் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் மேலாளர்களாக உள்ள பட்டியலிலும் பெண்களின் கல்வியறிவு விகிதத்திலும், இந்த நாடு உயர்ந்த நிலையில் காணப்படுகிறது. கடந்த 1986 ஆம் ஆண்டு இந்நாட்டின் முதல் பெண் அதிபராகக் கோராசன் அக்யூனோ இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

ஆசியாவில் உள்ள இந்தச் சிறிய நாட்டில், ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்குச் சம்பளத்தை உயர்த்தி அளிக்கப்படுவதால், மேற்கண்ட பட்டியலில் இந்த நாடும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நாட்டின் முதல் பெண் அதிபராக ஹாலிமா யாகோபு கடந்த ஆண்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பிறப்பு அடையாளம் காட்டியில், மிகப் பின்தங்கிய பாலின விகிதத்தைப் பெற்ற நாடுகளில் இதுவும் ஒன்றாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+