பெய்ஜிங், சீனா: ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை, சாமானியர்களுக்கு இணையம் என்பது படிப்பதற்கான விஷயம் என்று மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால் இன்று இணையம் தான் பொழுது போக்குகளின் உல்லாச புரி. யூடியூப், நெட் ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற வீடியோ பொழுது போக்குகள் தொடங்கி, சுவாரஸ்யமாக கருத்துச் சண்டை போடும் ஃபேஸ்புக் ட்விட்டர் எல்லாம் ஒரு ரகம்.
மறு பக்கம், டிக் டாக், ஸ்மியூல், மியூசிக்கலி போன்ற செயலிகளை டவுன்லோட் செய்பவர்கள் அனைவருமே பொழுது போக்கு வீடியோக்களை உருவாக்கும் ஆர்டிஸ்ட் ஆக்கிவிட்டார்கள். விளைவு இன்று ஒரு சின்ன திறமை உள்ளவர்கள் கூட தங்கள் திறமையை ஆன்லைனில் பதிவிட்டு லைக்ஸ், க்ளாப்ஸ், ரீச் என கலக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

அப்படி, டவுன்லோட் செய்பவர்கள் அனைவரையுமே பொழுது போக்காளர்களாக மாற்றிய அப்ளிகேஷன்களில் டிக் டாக்குக்கு என்று ஒரு தனி இடமே உண்டு. அப்படிப்பட்ட டிக் டாக் செயலியை இந்தியாவில் மட்டும் சுமார் 46.6 கோடி பேர் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்களாம்.
உலக அளவில் மொத்தம் 150 கோடி பேர் டிக் டாக்கை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்களாம். எப்படி கணக்கு போட்டுப் பார்த்தாலும், டிக் டாக்கை அதிகம் பயன்படுத்துபவர்கள் நம் இந்திய புள்ளிங்கோ தானாம். இதை சதவிகிதத்தில் குறிப்பிட வேண்டும் என்றால் டிக் டாக்கின் மொத்த டவுன்லோடில் 31 சதவிகிதம் இந்தியர்கள்.
2019-ம் ஆண்டில் மட்டுமே இந்தியாவில் 27.7 கோடி பேர் டிக் டாக்கை டவுன்லோட் செய்து இருக்கிறார்களாம். இதில் கவனிக்க வேண்டிய வேடிக்கையான விஷயமே... இந்த செயலியின் சொந்த நாடான சீனாவிலேயே 4.5 கோடி பேர் மட்டுமே டவுன் லோட் செய்து இருக்கிறார்களாம். மூன்றாவது இடத்தில் தான் அமெரிக்கா. 3.7 கோடி பேர் டவுன்லோட் செய்து இருக்கிறார்கள்.
ஒட்டு மொத்தமாக இந்த 2019-ல் மொத்தம் 61.4 கோடி பேர் டவுன்லோட் செய்து இருக்கிறார்களாம். உலகிலேயே 2019-ல் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட விளையாட்டு அல்லாத அப்ளிகேஷன் வரிசையில், வாட்ஸப் மற்றும் ஃபேஸ்புக் மெசஞ்சருக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது டிக் டாக்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications