டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க வர்த்தகத்தை வாங்க ஆர்வமுள்ள நிறுவனங்களின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த வார இறுதியில், டிக்டாக் நிறுவனத்தை வாங்க ஒரு வாடிக்கையாளரைத் தேர்வு செய்ய டிக்டாக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பையிட்டான்ஸ்-க்கான காலக்கெடு நெருங்கி வருவதால் விரைவில் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இந்த நிலையில் டிக்டாக் நிறுவனத்தை வாங்க பலரும் போட்டிப்போட்டாலும் அமேசான் மற்றும் ஒன்லிஃபேன்ஸ் நிறுவனர் டிம் ஸ்டோக்லி தலைமையிலான ஒரு கூட்டமைப்பு இந்த ஏலத்தில் புதிதாக இணைந்துள்ளது மூலம் போட்டி பெரிய அளவில் சூடுப்பிடித்தது.

அமெரிக்க அரசின் உத்தரவின் படி ஏப்ரல் 5-ஆம் தேதிக்குள் சீனாவைச் சாராத ஒரு வாடிக்கையாளரை டிக்டாக் நிறுவனம் பெற வேண்டும். இல்லையெனில், அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் அபாயம் உள்ளது.
டிக்டாக் நிறுவனத்திற்கும் சீனாவிற்கும் உள்ள தொடர்புகள் குறித்து அமெரிக்க அரசும், நீதிபதிகளும் தகவல் பாதுகாப்பு கவலைகளை எழுப்பியுள்ளனர். இந்த குற்றச்சாட்டை டிக்டாக் மற்றும் அதன் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் முழுமையாக மறுத்துள்ளது, ஆயினும் அமெரிக்க அரசு தடை உத்தரவை நீக்கப்படவில்லை.
அமேசான் நிறுவனம் டிக்டாக்கை வாங்க விருப்பம் தெரிவித்து துணைத் அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செய்தி வெளியானதும் அமேசான் நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 2 சதவீதம் அதிகரித்தது.
அமேசான் நிறுவனம் சமூக ஊடக தளத்தை உருவாக்க நீண்ட காலமாக இலக்கு வைத்துள்ளது. 2014-ஆம் ஆண்டில் லைவ் ஸ்ட்ரீமிங் தளமான ட்விட்சை சுமார் 1 பில்லியன் டாலருக்கு வாங்கியது. மேலும் 2013-ஆம் ஆண்டில் புத்தக விமர்சன தளமான குட்ரீட்ஸையும் வாங்கியது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இப்பிரிவில் பெரிய அளவிலான வெற்றியை அடைய முடியவில்லை.
அமேசான் நிறுவனம் டிக்டாக் போன்று ஷாட் வீடியோ மற்றும் புகைப்பட தளமான Inspire உருவாக்கி சோதனை செய்து வந்த நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதை நிறுத்தியது.
இதற்கிடையில், அமெரிக்க வென்ச்சர் கேபிடல் நிறுவனமான ஆண்ட்ரீசன் ஹொரோவிட்ஸ், டிக்டாக் நிறுவனத்தின் சீன முதலீட்டாளர்களின் பங்குகளை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பைட் டான்ஸ் நிறுவனம் டிக்டாக்கை விற்காவிட்டால், அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் ஏப்ரல் 5-ஆம் தேதி சனிக்கிழமை வரை காலக்கெடு விதித்துள்ளது.


Click it and Unblock the Notifications