சீனாவின் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு அப்படி என்ன பாசமோ தெரியவில்லை. ஏனெனில் எது எடுத்தாலும் பிரச்சனையாகவே அமைந்து வருகிறது.
Recommended Video
ஆரம்பத்தில் சீனாவின் பிரபலமான வீடியோ செயலியான டிக் டாக்கினை இந்தியா நாட்டின் பாதுகாப்பு கருதி தடை செய்தது.
முதன் முதலாக இந்தியா தடை செய்திருந்தாலும் கூட, இதன் பின்னர் தடை செய்ய போவதாக அமெரிக்கா அறிவித்தது.
டிக் டாக் செயலிக்கு தடை
பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக் டாக் செயலி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதனால் அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க டிரம்ப் முடிவு செய்ததாக கூறப்பட்டது.
மீண்டும் புதிய உத்தரவு
அதன்படி அவர் தொடர்ந்து டிக் டாக் நிறுவனத்துக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த வாரம் அமெரிக்காவில் டிக் டாக் செயலியின் பரிவர்த்தனைக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் Donald Trump கையெழுத்திட்டார். இந்த நிலையில் தான் தற்போது அவர் டிக்-டாக் நிறுவனத்துக்கு எதிராக புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
90 நாட்கள் கெடு
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் வெளிநாட்டு முதலீட்டுக்கான குழுவின் நிபந்தனைகளின் பேரில் பைட்டான்ஸ், அதன் துணை நிறுவனங்கள் மற்றும் சீன பங்குதாரர்கள் அமெரிக்காவில் செய்துள்ள முதலீடுகள் உள்ளிட்ட அசையா சொத்துகள் மற்றும் அனைத்து வகையான அசையும் சொத்துகள் என எல்லாவற்றையும் 90 நாட்களுக்குள் விலக்கிக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தை நாட திட்டம்
அமெரிக்காவில் தடை செய்யப்போவதாக கூறப்பட்டு வரும் டிக்டாக் நிறுவனம், அமெரிக்கா டொனால்டு டிரம்பிற்கு எதிராக நீதிமன்றத்தினை நாட முடிவு செய்திகள் வெளியாகியுள்ளது. எனினும் எந்த நீதிமன்றத்தினை நாட உள்ளது என கூறப்படவில்லை. ஏறக்குறைய வருடத்திற்கு மேலாக அமெரிக்காவின் கவலைகளை தீர்க்க முயற்சித்து வருவதாக டிக் டாக் தரப்பில் கூறப்படுகிறது.
டிக்டாக்கினை வாங்க ஆர்வம்
அசாதாரண மற்றும் அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், 1977 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ், ஒரு உத்தரவினை பிறப்பித்தார். இது பரிவர்த்தனைகளைத் தடுக்கவும், சொத்துக்களைக் கைப்பற்றவும் அனுமதித்தது. இதற்கிடையில் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வணிகத்தினை வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் மட்டும் அல்ல, ஆரக்கிள் மற்றும் டிவிட்டர் நிறுவனமும் ஆர்வம் தெரிவித்துள்ளன.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை
டிக்டாக் நிறுவனம் சீன அரசால் கட்டுப்படுத்தப்படுவதாகவும், அது பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை சீன அரசுடன் பகிர்ந்து கொள்வதாகவும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு, அந்த நிறுவனம் மறுப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் நீதிமன்றத்தினை நாட போவதாக டிக் டாக் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எனினும் இது குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications