கிரிப்டோகரன்சி முதலீடு பற்றிய விழிப்புணர்வு, இந்தியாவில் இன்று வரையில் பெரியளவில் இருந்தபாடாக இல்லை. ஆனால் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட ஏற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளன.
முன்னதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் கிரிப்டோகரன்சிகளுக்கு பெரும் ஆதரவு கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது ஆப்பிள் இன்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், தனிப்பட்ட முறையில் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கிரிப்டோவில் ஆர்வம்
மேலும் தனது பன்முகப்படுத்தப்பட்ட ஒரு முதலீட்டு போர்ட்போலியோவில், கிரிப்டோவினை வைத்திருப்பது நியாயமானது என நினைக்கிறேன். எனினும் நான் யாருக்கும் முதலீட்டு ஆலோசனையை வழங்கவில்லை என நியூயார்க் டைம்ஸ்-ஸ் டீல்புக் மாநாட்டில் கூறியுள்ளார். கிரிப்டோகரன்சி முதலீட்டில் ஆர்வமாக இருப்பதாகவும், சிறிது காலமாக இது குறித்து ஆராய்ச்சி செய்து வருவதாகவும் குக் தெரிவித்துள்ளார். எனினும் டிம் குக் எந்த கிரிப்டோவில் முதலீடு செய்தார் என்பது போன்ற மற்ற விவரங்களை தெரிவிக்கவில்லை.
ஆப்பிளின் திட்டம் என்ன?
மேலும் ஆப்பிள் பேவில் கிரிப்டோவை ஏற்றுக் கொள்வது பற்றியான திட்டங்கள் உடனடியாக இல்லை. எனினும் நாங்கள் அதனை பார்த்துக் கொண்டிருக்கிறோம். எனினும் ஆப்பிளின் சொத்தினை கிரிப்டோவில் முதலீடு செய்ய ஆர்வமில்லை என்றும் டிம் குக் கூறியுள்ளார்.
அதெல்லாம் சரி, இன்றைய கிரிப்டோக்களின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
பிட்காயின் நிலவரம்
பிட்காயின் மதிப்பானது 2% குறைந்து, 66,737.88 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 68,262.32 டாலர்களாகும். இதே இதன் குறைந்தபட்ச விலை 66,273.14 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 130.22% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.
எத்திரியம் மதிப்பு
இதே எத்தரியத்தின் மதிப்பானது தற்போது 2% குறைந்து, 4,719.44 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 4,833.17 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 4,679.70 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 540.63% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.
கார்டானோ நிலவரம்
கார்டானோ மதிப்பானது 2% குறைந்து, 2.23 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 2.38 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 2.19 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெரியளவில் மாற்றம் காணவில்லை. இதன் புதிய வரலாற்று உச்சம் 3.10 டாலர்களாகும்.
எக்ஸ்ஆர்பி நிலவரம்
எக்ஸ்ஆர்பி-யின் மதிப்பானது 1.86% குறைந்து, 1.24 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 1.27 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 1.22 டாலராகும். இதன் வரலாற்று உச்ச விலை 3.40 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 461.92% ஏற்றம் கண்டுள்ளது.
ஸ்டெல்லர் மதிப்பு
ஸ்டெல்லர் மதிப்பானது 3.40% அதிகரித்து, 0.399778 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.42 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.38 டாலராகும். இதன் வரலாற்று உச்ச விலை 0.797482 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 214.37% ஏற்றம் கண்டுள்ளது.
டோஜ்காயின் தற்போதைய நிலவரம்
டோஜ்காயின் மதிப்பானது 3.07% குறைந்து, 0.272127 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.28 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.27 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 5.651.83% சரிவினைக் கண்டுள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 0.740796 டாலராகும்.
யுனிஸ்வாப் மதிப்பு
யுனிஸ்வாப் மதிப்பானது 0.26% குறைந்து, 26.62 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 27.81 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 25.98 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 541.15% லாபத்தில் தான் உள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 45.01 டாலராகும்.
போல்கடோட் நிலவரம்
போல்கடோட் மதிப்பானது தற்போது 2.63% குறைந்து, 51.39 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 53.01 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 50.09 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 605.19% லாபத்தில் தான் உள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 55.11 டாலராகும்.
லைட்காயின் நிலவரம்
லைட்காயின் மதிப்பானது தற்போது 7.35% அதிகரித்து, 265.57 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 274.40 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 246.55 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 115.37% லாபத்தில் தான் உள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 413.47 டாலராகும்.
ஷிபா இனு நிலவரம்
ஷிபா இனு மதிப்பானது தற்போது 5.65% சரிந்து, 0.000054 டாலராக காணப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 69.78% சரிவில் தான் உள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 0.000089 டாலராகும்.
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!



Click it and Unblock the Notifications