ஹனோய்: நாட்டின் பாதுகாப்பு, ஐடி, இரட்டை வரி விதிப்பு, வெயிட் ஷிப்பிங் தகவல்கள் பிரிமாற்றம்ஸ மற்றும் மூலோபாயத்தில் பங்கீடு எனச் சுமார் 12 ஒப்பந்தங்களில் இந்தியா-வியட்நாம் நாடுகள் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்புந்தங்கள் அனைத்தும் இரு நாட்டு அதிகாரிகளும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வியட்நாம் பிரதமர் Nguyen Xuan Phuc முன்னிலையில் கையெழுத்திட்டனர்.
பாதுகாப்பு
வியட்நாம், இந்தியாவுடன் செய்த ஒப்பந்தங்களில் வான் மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த உற்பத்தி அதிகளவில் ஆர்வரம்காட்டியுள்ளது. வியட்நாம் கடல் ரோந்து பணிக்காக அதிகவேக கண்காணிப்பு படகுகளை எல்&டி நிறுவனம் தயாரிக்க உள்ளது.
வெயிட் ஷிப்பிங்
இந்திய கடற்படையும், வியட்நாம் கடற்படையும் வெயிட் ஷிப்பிங் தகவல்களைப் பரிமாற்றம் செய்துகொள்ளவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
12 ஒப்பந்தங்கள்
இதனுடன் வெளிமண்டல்தை ஆய்வு செய்யவும், அமைதிக்காகப் பயன்படுத்தவும், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் பின் இரட்டை வரிவிதிப்பு, சுகாதார ஒத்துழைப்பு, ஐடி ஒத்துழைப்பு, சைபர் செக்யூரிட்டி, கப்பல் கட்டுமானம் மற்றும் வடிவமைப்பு, தொழில்நுட்பம் பரிமாற்றம் குறித்த ஒப்பந்தங்களும் இரு நாடுகள் மத்தியில் கையெழுத்து செய்யப்பட்டுள்ளது.
ஐடி துறை
இந்தியா வியட்நாம் மத்தியிலான நட்புறவை கொண்டாடும் வகையில் இந்நாட்டிற்கு இந்தியா ஐடி இன்பரா மற்றும் பயிற்சியில் அதிகளவிலான உதவியைச் செய்ய முடிவு செய்துள்ளது.
இதற்காக முக்கிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
டிவீட்
இரு நாட்டுகள் மத்தியில் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் டிவீட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications