திண்ண திண்ண திகட்டாது.. அப்படியே சாப்பிடலாம்..!

உலகம் முழுவதும் மிகவும் விரும்பப்படும் பண்டங்களுள் ஒன்று சாக்லேட் ஆகும். உங்கள் வயது, ஊர் எதுவாயினும், சின்னஞ்சிறிய சிறுவன் முதல் வயது முதிர்ந்த மூதாட்டி வரை சாக்லேட் மீதான விருப்பமானது வற்றுவதற்கான சாத்தியமே இன்றி என்றென்றும் நிலைபெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.

சாக்லேட், அதன் அற்புதமான சுவை மற்றும் சொக்க வைக்கும் மணம் ஆகியவற்றிற்காக மட்டுமே விரும்பப்படுவதில்லை. ஆரோக்கியமும், போஷாக்கும் நிறைந்திருப்பதாகக் கருதப்படுவதாலேயே பெரிதும் விரும்பப்படுகிறது. சாக்லேட்கள் வாலண்டைன்ஸ் டே, புத்தாண்டு, பண்டிகைகள் மற்றும் பிறந்தநாள் போன்ற பல்வேறு விசேஷ நிகழ்வுகளின் போது அன்பளிப்பாகவும் வழங்கப்படுகின்றன.

மனம் மயக்கும் மணம், பல்வேறு சுவைகள் மற்றும் பலதரப்பட்ட விலை போன்ற எக்கச்சக்க விதங்களில் உலகெங்கும் ஏராளமான சாக்லேட் பிராண்ட்கள் பிரபலமாக உள்ளன. எனவே, உலகின் 10 சிறந்த மற்றும் பிரபலமான சாக்லேட் பிராண்ட்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

10. கொடிவா

10. கொடிவா

பிரபலமான சாக்லேட் பிராண்டுகளுள் ஒன்றான கொடிவா உலகெங்கும் பல்லாயிரக்கணக்கானோரின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. கொடிவா பிராண்ட் 1926 ஆம் ஆண்டில் பெல்ஜியம் நாட்டில் உள்ள ப்ரஸ்ஸல்ஸைச் சேர்ந்த ஜோசஃப் ட்ராப்ஸ் என்பவரால் நிறுவப்பட்டது. கொடிவா நிறுவனம், மில்க் சாக்லேட், அஸ்ஸார்டட் சாக்லேட், டார்க் சாக்லேட் மற்றும் வொயிட் சாக்லேட் போன்ற பல வகைகளைத் தயாரித்து வழங்குகிறது.

நட்ஸ், கேரமல் மற்றும் ப்ரலைன் போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் கொடிவா சாக்லேட்கள் அவற்றின் செழுமைக்காகவும், மிருதுத்தன்மைக்காகவும் உலகெங்கும் பிரபலமாக அறியப்படுகின்றன. சுமார் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொடிவா சாக்லேட்கள் கிடைக்கின்றன. இந்தப் பிரபலமான சாக்லேட் பிராண்ட் உலகம் முழுவதிலும் சுமார் 450-க்கும் மேற்பட்ட கடைகளை இயக்கி வருகின்றது.

 

9. டோப்லெரோன்

9. டோப்லெரோன்

சுவிஸ் சாக்லேட் பார் பிராண்டான இது தியோடர் டோப்லெர் என்பவரால் சுவிட்ஸர்லாந்தில் 1908 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, தற்போது அமெரிக்கத் தின்பண்ட நிறுவனமான மோண்டலெஸ் இண்டர்நேஷனலின் வசம் உள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் உலகெங்கிலுமிருந்து கொண்டு வரப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்படும் தரமான மூலப்பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.

கோக்கோ, நௌகட், முட்டை வெள்ளைக்கரு, சோய், பாதாம் மற்றும் தேன் ஆகிய உட்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் டோப்லெரோன் சாக்லேட்கள் அவற்றின் பிரத்யேகமான முக்கோண வடிவத்துக்குப் பெயர் பெற்றவை.

 

8. கேலக்ஸி

8. கேலக்ஸி

மிருதுவான மில்க் சாக்லேட், க்ரீமி கேலக்ஸி, கேலக்ஸி சால்டெட் கேரமல், கேலக்ஸி மின்ஸ்ட்ரெல், ஃப்ரூட் & நட் வகையறாக்கள் மற்றும் கேலக்ஸி க்ரிஸ்பி போன்ற பல்வேறு சுவைகளில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி சாக்லேட்கள் மற்றுமொரு பிரபலமான சாக்லேட் பிராண்ட் ஆகும்.

இந்நிறுவனத் தயாரிப்புகளின் உருவாக்கத்தையும், விற்பனையையும் மார்ஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. டோவ் என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்படும் இப்பொருட்கள் டோவ் என்ற பெயரிலேயே பல்வேறு நாடுகளிலும் விற்கப்பட்டு வருகின்றன. கேட்பரி டெய்ரி மில்க் சாக்லேட்டிற்கு அடுத்ததாக யு.கே.-வில் அதிக அளவில் விற்பது கேலக்ஸி சாக்லேட்டுகள் தாம்.

 

7. மார்ஸ்

7. மார்ஸ்

ப்ரிட்டிஷ் சாக்லேட் பிராண்டான இது 1932 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. மார்ஸ் சாக்லேட் உலகின் அதிக அளவில் விற்பனையாகும் சாக்லேட் பிராண்டுகளுள் ஒன்றாக விளங்குகிறது. இந்நிறுவனம் 21 நாடுகளில் சுமார் 16,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணியமர்த்தியுள்ளது. ஸ்னிக்கர்ஸ், 5 ஸ்டார், கேலக்ஸி, மில்கி வே, எம்&எம்'ஸ் மற்றும் ட்விக்ஸ் கேண்டி உள்ளிட்ட 29 பிராண்டுகளைக் கொண்டு தனிச்சிறப்புடன் திகழ்கிறது.

மார்ஸ் சாக்லேட்கள் அனைத்தும் உயர்தரப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இவை இனிப்பான தேன், கேரமல், நௌகட் மற்றும் பாதாம் போன்றவற்றை உட்பொருட்களாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு வருகின்றன.

 

6. கிட் கேட்

6. கிட் கேட்

சாக்லேட்டினால் முழுவதுமாக மூடப்பட்டு, விரல் போன்ற வடிவில் தயாரிக்கப்படும் வேஃப்ர் பாரான கிட் கேட், ரௌன்ட்ரீ'ஸ் என்னும் ஆங்கிலேய தின்பண்ட நிறுவனத்தின் கண்டுபிடிப்பாகும். தற்போது, ரௌன்ட்ரீ'ஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்திய நெஸ்லே நிறுவனத்தினால் இவ்வகைச் சாக்லேட்கள் உலகெங்கும் விற்கப்பட்டு வருகின்றன.

இது கிட் கேட் வொயிட், கிட் கேட் குக்கீஸ், கிட் கேட் மிண்ட் மற்றும் க்ரீம் பாக்கெட்ஸ் என்ற பெயரில் 2 அல்லது 4 சாக்லேட் பட்டைகள் அடங்கிய பாக்கெட்டுகள் போன்ற வெவ்வேறு சுவைகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

 

 5.லிண்ட் & ஸ்ப்ரங்லி

5.லிண்ட் & ஸ்ப்ரங்லி

லிண்ட் & ஸ்ப்ரங்லி உலகின் மிகப் பிரபலமான சாக்லேட் பிராண்டுகளுள் ஒன்றாகும். இது கண்டுபிடிக்கப்பட்ட வருடமான 1836 -இல் இருந்து தற்போது வரை அதன் பரவலான மற்றும் நவீனமான, உள்ளூர் மற்றும் உலகளாவிய வகையிலான உயர்தரச் சாக்லேட்களின் மூலம் சாக்லேட் உலகில் கோலோச்சி கொண்டிருக்கும் இந்தப் பிரபலமான சாக்லேட் பிராண்ட் உலகளவில் சுமார் 120 நாடுகளில் தன் சாக்லேட்களை விற்று வருகின்றது.

லிண்ட் சாக்லேட்கள் அவற்றின் ஈடு இணையற்ற, தனித்துவமான சுவை மற்றும் வாயில் போட்டவுடன் கரையும் தன்மை போன்றவற்றிற்காக உலகெங்கும் பிரசித்தி பெற்றவை. லிண்டர், கோல்டு பண்ணி மற்றும் ஸ்னொமென் போன்ற இந்நிறுவன தயாரிப்புகள் உலகெங்கும் பல்லாயிரக்கணக்கானோரால் மிகவும் விரும்பி உண்ணப்படுகின்றன.

 

4. கைலியன்

4. கைலியன்

பெல்ஜிய சாக்லேட் உற்பத்தி நிறுவனமான இது 1958 ஆம் வருடம் கைய் ஃபௌபெர்ட் என்பவரால் நிறுவப்பட்டது. பெட்டிகளில் அடைத்து விற்கப்படும் சாக்லேட் பிராண்ட்களுள் அதிகமாக விற்பனையாகும் முதல் பத்து பிராண்டுகளுள் கைலியன் பிராண்டும் ஒன்றாகும். அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களில் உள்ள சுமார் 120 நாடுகளில் இந்நிறுவனம் அதன் சாக்லேட்களை விற்று வருகிறது.

உலகெங்கிலும் அமைந்துள்ள ஹைப்பர் மார்க்கெட்டுகள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் பிரத்யேக உணவுக்கான கடைகள் முதலிய பல விற்பனை மையங்களில் இந்நிறுவனத் தயாரிப்புகள் கிடைக்கின்றன. கலைத்திறன், விலை மற்றும் உயர்தரத் தயாரிப்புகள் ஆகியவற்றின் தனித்துவமான கலவையுடன் கூடிய கைலியன் சாக்லேட் பிராண்ட் உலகின் சிறந்த மற்றும் பிரபலமான சாக்லேட் பிராண்டுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளதில் வியப்பேதுமில்லை.

 

3. கேட்பரி

3. கேட்பரி

பிரிட்டிஷ் தின்பண்ட நிறுவனமான கேட்பரி 2010 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க நிறுவனமான மாண்டலெஸ் இண்டர்நேஷனலின் வசம் உள்ளது. இந்நிறுவனத்தின் சர்வதேச தலைமையகம் மேற்கு லண்டனில் உள்ள அக்ஸ்ப்ரிட்ஜ் என்ற இடத்தில் உள்ளது. உலகின் இரண்டாவது பெரிய தின்பண்ட பிராண்டாகத் திகழும் கேட்பரி, உலகளவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

கேட்பரி அதன் தயாரிப்புகளான டெய்ரி மில்க் சாக்லேட் மற்றும் இதர தின்பண்ட வகைகளான க்ரீம் எக் மற்றும் ரோஸஸ் செலக்ஷன் பாக்ஸ் போன்றவற்றிற்கு மிகவும் பிரசித்தி பெற்றது. கேட்பரியின் அனைத்து தயாரிப்புகளும் உயர்தரப் பால், தேன், கோக்கோ மற்றும் சுத்தமான இதர உட்பொருட்களைக் கொண்டு செய்யப்படுவதால், இது உலகின் சிறந்த சாக்லேட் பிராண்டுகளுள் ஒன்றாகத் திகழ்கிறது.

 

2. கிரார்டெல்லி

2. கிரார்டெல்லி

தற்போது அமெரிக்கச் சாக்லேட் கம்பெனியாக விளங்கும் கிரார்டெல்லி, இத்தாலிய சாக்லேட்டியரான டொமெனிகோ கிரார்டெல்லி என்பவரால் நிறுவப்பட்டதாகும். கிரார்டெல்லி சுவிஸ் சாக்லேட் நிறுவனமான லிண்ட் & ஸ்ப்ரங்லி நிறுவனத்தின் ஒரு பிரிவாகும். யுனைட்டெட் ஸ்டேட்ஸ் மாகாணத்தில் சாக்லேட் தயாரிப்பைப் பொறுத்தவரை கோக்கோ பீனில் ஆரம்பித்துப் பல்வேறு தயாரிப்புகளாக முழுமை பெறும் வரையிலான ஒவ்வொரு நடைமுறையையும் முழுக்க முழுக்கத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய மிகச்சில அமெரிக்க நிறுவனங்களுள் ஒன்றாக இது இன்றும் தொடர்கிறது.

கிரார்டெல்லி மில்க் சாக்லேட், டார்க் சாக்லேட், சாக்லேட் வித் கேரமல், சாக்லேட் வித் நட்ஸ் மற்றும் சாக்லேட் வித் ஃப்ரூட்ஸ் முதலிய பலவிதமான சுவைகளில் சாக்லேட்களைத் தயரித்து விற்று வருகிறது. இது மட்டுமின்றி, இந்நிறுவனம் அமெரிக்காவின் சிறந்த பேக்கிங் நிறுவனங்களுள் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

 

1.ஃபெர்ரெரோ ரோஷெர்

1.ஃபெர்ரெரோ ரோஷெர்

இத்தாலிய சாக்லேட் பிராண்டான ஃபெர்ரெரோ ரோஷெர் உலகின் மிகப் பிரபலமான சாக்லேட் பிராண்டாகப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகிலேயே அதிக அளவில் விற்கப்படும் சாக்லேட் பிராண்டுகளுள் ஒன்றாகவும் இது விளங்குகிறது. இந்நிறுவனம் வட்ட வடிவிலான உயர் ரகச் சாக்லேட்டை அழகான பொன்னிறக் காகிதத்தில் சுருட்டி இவ்வகைச் சாக்லேட்களாய் தயாரித்து வருகிறது. மேலும் இது பலவித ஃப்ளேவர்களிலும் ஃபெர்ரெரோ ரோஷெர் சாக்லேட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

சமீபத்தில் இந்நிறுவனம் டார்க் சாக்லேட், பிஸ்டாச்சியோ, ஸ்ட்ராபெர்ரி, கோகோனட் மற்றும் லெமன் போன்ற இதர பல ஃப்ளேவர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபெர்ரெரோ ரோஷெர் ஒவ்வொரு வருடமும் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 3.6 பில்லியன் வரை விற்பனையாகிறது. அதனால் நமது உலகின் 10 சிறந்த மற்றும் பிரபலமான சாக்லேட் பிராண்டுகளின் பட்டியலில் ஃபெர்ரெரோ ரோஷெர் சாக்லேட் பிராண்ட் தான் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+