அதிக கடனில் தத்தளிக்கும் 10 நாடுகள்.. இந்தியாவிற்கு என்ன இடம் தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  உலகின் வளமான நாடுகளில் வரலாறு காணாத அளவில் கடன் மீது மிகக் குறைந்த வட்டி விகிதங்கள் இருந்து கொண்டிருக்கின்றன. சில நாடுகளில் வட்டி விகிதம் மைனசாகக் கூடக் குறைத்துள்ளன.

  குறைந்த வட்டி விகிதங்களால் கடன் எளிய முறையில் திருப்பிச் செலுத்தப்படுகின்றன , இது அரசாங்கங்கள், பெருநிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்குத் தங்கள் கடன்களை வாங்குவதற்கும் அதனைத் திருப்பிச் செலுத்துவதற்கும் எளிமையாக உள்ளன .

  தேசிய கடன் என்றால் என்ன?

  ஒரு நாட்டின் தேசிய கடன் என்பது , மத்திய அரசு கடன் வாங்கிய மொத்த தொகை மற்றும் அதனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகையைக் குறிப்பதாகும். இருப்பினும், ஒரு நாட்டின் தேசிய கடன் என்பது வாடிக்கையாளர்கள் , கடன் அட்டைகள் அல்லது வங்கிகள் மூலமாக எடுத்துக் கொள்ளும் கடனிலிருந்து வேறுபட்டதாகும். அரசாங்க கடன் என்பது ஒரு நாட்டின் மத்திய அரசாங்கம் கடன் வாங்கிய பணத்தின் கணக்காகும், அந்த நாட்டில் சேகரிக்கப்பட்ட வரிகள் மூலம் பணம் திருப்பிச் செலுத்தப்படாத கடனை அது குறிக்கும். செலவினத்தை மறைக்கப் போதுமான வருவாய் மற்றும் வரிகளைச் சேகரிக்கத் தவறியபோது ஒரு அரசாங்கம் கடன் வாங்கும் நிலை உண்டாகிறது. இந்தப் பணப் பற்றாக்குறையும் தேசிய கடனில் தான் சேர்கிறது.

  அதிகத் தேசிய கடன் உள்ள நாடுகள்

  டாலர் மதிப்பின் மூலம் மிக அதிகமான தேசிய கடன்களைக் கொண்டுள்ள நாடுகளை நீங்கள் பட்டியலிட்டால், அமெரிக்கா $ 19.86 டிரில்லியனுடன் இந்தப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. சீனாவின் மொத்த தேசிய கடன் அளவு 10.17 டிரில்லியன் அமெரிக்க டாலர்களையும், ஜப்பான் 9.08 டிரில்லியன் அமெரிக்க டாலர்களையும் பெற்றுள்ளது. இந்த இரண்டு நாடுகளும் அதிகக் கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் , முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கின்றன.

  டாலர் மதிப்பின் மூலம், மிகப்பெரிய தேசிய கடன் கொண்ட நாடுகளைப் பட்டியலிடுவதற்குப் பதிலாக, நாடுகள் எவ்வாறு தங்கள் மொத்த அரசாங்க கடன், ஜிடிபியின் விகிதத்தை அடிப்படையாக்க முதலிடத்தைப் பிடிக்கின்றன என்ற ஆராய்ச்சி மிகுந்த அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. 2017ம் ஆண்டு, அரசாங்க கடன் மற்றும் ஜிடிபி விகிதம் மூலம் முதல் 10 இடங்களைப் பற்றிய நாடுகளின் பட்டியலை இப்போது பார்க்கலாம். ஜிடிபி என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பதாகும்.

   

  ஜப்பான்

  தேசிய கடன் : ¥1,028 trillion ($9.087 trillion USD)
  தனி நபர் கடன் : $71,421 (USD)
  கடனுக்கான ஜிடிபி விகிதம் : 220.82%
  மக்கள் தொகை : 127.2 million
  நாணயம் : ஜப்பானிய யென் (Japanese Yen (¥))

  ஜப்பான் அரசாங்க கடன் டாலர்கள் அடிப்படையில் அமெரிக்காவை விடப் பாதிக்கும் குறைவாக உள்ளது. இருப்பினும் , ஜிடிபி அடிப்படையில் பார்க்கும்போது ஜப்பான் நாட்டின் தேசிய கடன் ஜிடிபியை விட இரண்டு மடங்கு அதிகமானதாக உள்ளது அவர்களின் நிதி நிலைமை மிகவும் கடினமாக இருப்பதைக் காட்டுகிறது. பல ஆண்டுகளாகப் பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்ததை விட நாட்டின் பொருளாதாரம் மிகவும் மெதுவாக வளர்ச்சியடைந்து வருகிறது, இதன் விளைவாக அதன் மத்திய வங்கி பொருளாதாரத்தைத் தூண்டிவிடும் முயற்சியில் எதிர்மறையான வட்டி விகிதங்களை முடுக்கிவிட்டது. ஜப்பான் தற்போதைய கடனுக்கான ஜிடிபி விகிதம் அதிர்ச்சி தரும் அதே வேளையில், 2016 ஆம் ஆண்டில் இது 250.4% உயர்ந்து இருந்தது

   

  கிரீஸ்

  தேசிய கடன் : €332.6 billion ($379 billion US)
  தனி நபர் கடன் : $35,120 (USD)
  கடனுக்கான ஜிடிபி விகிதம் : 179%
  மக்கள் தொகை : 10.8 million
  நாணயம் : யூரோ (Euro (€))

  மேலோட்டமாகப் பார்க்கும்போது , கிரேக்கத்தின் தேசிய கடன் 379 பில்லியன் அமெரிக்க டாலர் மிகக் குறைவாகவே உள்ளது. ஆனால் அதன் உயர்ந்த கடனுக்கான ஜிடிபி விகிதம் , நாடெங்கிலும் அதிக வேலையின்மை அளவுகள் மற்றும் ஏற்கனவே இருக்கும் கடனை திருப்பிச் செலுத்த தொடர்ச்சியான போராட்டம் போன்றவை சிக்கலானவையாகப் பார்க்கப்படுகின்றன. 2010 ல் கடன் நெருக்கடி தொடங்கியதில் இருந்து சர்வதேச கடன் வழங்குவோர், நாட்டைப் பல முறை காப்பாற்றியுள்ளனர் , மற்றும் அரசாங்க செலவினங்கள் கடன் அளவுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான ஒரு கண்டிப்பான முயற்சியில் அந்த அரசாங்கம் உறுதியாக உள்ளது.

   

  போர்சுகல்

  தேசிய கடன்: €232 billion ($264 billion US)
  தனி நபர் கடன்: $25,538 (USD)
  கடனுக்கான ஜிடிபி விகிதம்: 138.08%
  மக்கள் தொகை: 10.37 million
  நாணயம் : யூரோ (Euro (€))

  2010ம் ஆண்டு முதல் கடுமையான நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது போர்ச்சுகல் . பல சர்வதேச கடன் வழங்கும் நிறுவனங்கள் இந்த நாட்டிற்குக் கடன் கொடுத்துள்ளனர்.

  போர்சுகீசின் நிதி நிலைமை ஓரளவிற்குச் சீராக இருக்கும்போதும், அந்த நாட்டின் கடன் மதிப்பு ஜிடிபியை விட அதிகமாக இருப்பதால் அந்த நிதி நெருக்கடி இன்னும் ஆபத்தான நிலையைக் கடக்கவில்லை என்பதை உணர்த்துகிறது. 2016ம் ஆண்டின் இறுதியில் போர்ச்சுகீசிய அரசாங்கத்தின் கடனுக்கான ஜிடிபி விகிதம் 130.4% இருந்தது. 2017ம் ஆண்டின் மத்தியில் இந்த அளவு 138.88% என்று அதிகரித்துள்ளது. போர்ச்சுகலின் நலிவடைந்த பொருளாதாரம், மற்றும் 2016ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டின் மிகக் குறைவான வளர்ச்சி போன்றவை இந்த நாட்டின் கடன் மதிப்பு வருங்காலத்தில் மேலும் சரியக்கூடும் என்ற பயத்தை விதைத்துள்ளது.

   

  இத்தாலி

  தேசிய கடன்: €2.17 trillion ($2.48 trillion US)
  தனி நபர் கடன்: $40,787 (USD)
  கடனுக்கான ஜிடிபி விகிதம்: 137.81%
  மக்கள் தொகை : 60.8 million
  நாணயம் : யூரோ (Euro (€))

  இத்தாலி, 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு, மூன்று மடங்கு மந்தநிலை தொடர்ந்து, நாட்டின் மெதுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் உயர் வேலையின்மை அளவுகளால் இன்னமும் போராடி வருகிறது. 2017 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இத்தாலியின் € 17b வங்கி நெருக்கடி, பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தலைதூக்கியது.

   

  பூட்டான்

  தேசிய கடன் : $2.33 billion (USD)
  தனி நபர் கடன்: $2,993 (USD)
  கடனுக்கான ஜிடிபி விகிதம்: 118.6%
  மக்கள் தொகை : 774,830
  நாணயம்: பூட்டான்ஸ் நகுல்ரம் (Bhutanese Ngultrum)

  பூட்டான் இந்தியாவுடன் நெருக்கமான பொருளாதார உறவு கொண்ட ஒரு சிறிய ஆசிய நாடு. நிதி உதவிகளுக்கு இந்தியாவைப் பெருமளவில் நம்பும் ஒரு நாடாகப் பூட்டான் உள்ளது மேலும் அதன் உள்கட்டமைப்பை ஆதரிக்கும் பல வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கிடைக்கும் தன்மையையும் சார்ந்து உள்ளது. 2016 ஆம் ஆண்டின் இறுதியில், பூட்டான் அரசு கடனுக்கான ஜிடிபி விகிதம் 118.6% ஆகப் பதிவு செய்திருந்தது, முந்தைய ஆண்டின் இறுதியில் 98.9% என்று இருந்த அதன் விகிதத்திலிருந்து 19.92% அதிகரித்தது.

   

  சைப்ரஸ்

  தேசிய கடன் : €18.95 billion ($21.64 billion USD)
  தனி நபர் கடன் : $25,551
  கடனுக்கான ஜிடிபி விகிதம் : 115.47%
  மக்கள் தொகை: 847,008
  நாணயம் : யூரோ (Euro (€))

  கிரேக்கத்திற்குச் சைப்ரஸின் வெளிப்பாடு நாட்டினுள் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. அதிகக் கடன் பெற்ற முதலீட்டு நிறுவனங்களுடன் இணைத்துச் செயல்பட்ட சைப்ரஸ் வங்கிகள், அந்த நாட்டின் மிகப்பெரிய நிதி நெருக்கடிக்குக் காரணமாக இருந்தன. இந்த நாட்டின் நிதி நெருக்கடி கிரேக்க நிதி நெருக்கடியை ஒத்து இருந்தது. 2013 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியின் தோல்விக்குப்பின் இந்த நாட்டிற்கு 10 பில்லியன் யூரோக்கள் ($ 11.4 பில்லியன் டாலர்)
  சர்வதேச நிதி உதவி கிடைத்தது. அதன் பின்னர், அதன் தேசிய கடனுக்கான ஜிடிபி விகிதம் மெதுவாக 2013 ல் 102.2% லிருந்து 2017 ஆம் ஆண்டின் மத்தியில் 115.47% ஆக உயர்ந்துள்ளது.

   

  பெல்ஜியம்

  தேசிய கடன் : €399.5 billion ($456.18 billion USD)
  தனி நபர் கடன் : $30,518 USD
  கடனுக்கான ஜிடிபி விகிதம்: 114.78%
  மக்கள் தொகை : 11.25 million
  நாணயம் : யூரோ (Euro (€))

  யூரோ பகுதி அரசாங்கத்தின் வளமான நாடாகப் பெல்ஜியம் உள்ளது. ஆனாலும் இந்த நாடு அதிகமான கடன் சுமையில் சிக்கி உள்ளது. பெல்ஜியம் சில இயற்கை வளங்களைக் கொண்டிருக்கிறது மற்றும் கணிசமான அளவு மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதில் நம்பகமானதாக இருக்கிறது. நாட்டின் தேசிய கடனுக்கான ஜிடிபி விகிதம் 2013 முதல் 105% என்ற நிலையிலேயே உள்ளது .

   

  அமெரிக்கா

  தேசிய கடன்: $19.23 trillion (USD)
  தனி நபர் கடன் : $61,231 (USD)
  கடனுக்கான ஜிடிபி விகிதம்: 106.1%
  மக்கள் தொகை : 324.35 million
  நாணயம் : யு.எஸ்.டாலர் (US Dollar)

  உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் அமெரிக்காவுடையது, ஆனாலும் அதிக அளவு தேசிய கடன் உள்ள நாடும் அமெரிக்கா தான். அதன் தேசிய கடன் அளவு 2017 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபியை விட அதிகமானாலும், 2007 ல் அமெரிக்கக் கடனுக்கான ஜிடிபி 62.5% மட்டுமே இருந்தது. யு.எஸ். அரசாங்கத்தின் வருடாந்திர வரவு செலவு திட்டத்தில் 6% அதன் கடன் மீதான வட்டி செலுத்துகைகளைத் திருப்பிச் செலுத்துகிறது, இது மற்ற திட்டங்களுக்குக் கொடுக்க வேண்டிய தொகையைக் கணிசமாகக் குறைக்கிறது. இத்தகைய பெரிய கடனை திருப்பிச் செலுத்துவதற்காக, அரசாங்கம் செலவினங்களைக் குறைக்க முயற்சிப்பதால் , இது பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கிறது அல்லது வருவாயை அதிகரிக்க வரிகளை அதிகரிக்கும் முடிவை நோக்கிப் பயணிக்கிறது.

   

  ஸ்பெயின்

  தேசிய கடன் : €1.09 trillion ($1.24 USD)
  தனி நபர் கடன் : $26,724 (USD)
  கடனுக்கான ஜிடிபி விகிதம் : 105.76%
  மக்கள் தொகை : 46.7 million
  நாணயம் : யூரோ (Euro (€))

  ஸ்பெயினின் பொருளாதாரத் துயரங்கள் சமீபத்திய ஆண்டுகளில் நன்கு அறியப்பட்டிருக்கின்றன, இருப்பினும் நிபுணர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2017 முழுவதும் வலுவாக இருக்கும் என்று கணிக்கின்றனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தேசிய கடன் அளவு கடந்த இரண்டு ஆண்டுகளில் மெதுவாகக் குறைந்து வருகிறது, ஆனால் இன்னும் பொருளாதார வல்லுநர்களுக்கு இது ஒரு கவலையாக உள்ளது.

   

  சிங்கப்பூர்

  தேசிய கடன் : $350 billion ($254 billion US)
  தனி நபர் கடன் : $45,915 (USD)
  கடனுக்கான ஜிடிபி விகிதம் : 104.7%
  மக்கள் தொகை : 5.54 million
  நாணயம் : சிங்கப்பூர் டாலர் (Singapore Dollar)

  சிங்கப்பூர் உலகின் மிக அதிகச் செல்வங்கள் படைத்த நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது, ஆனால் கடனுக்கான ஜிடிபி விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2016 ஆம் ஆண்டில் 0.6% ஆகக் குறைந்துள்ளது, இது 2008 இன் உலகளாவிய நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் மிகக் குறைந்த அளவாகும். 2017 ஆம் ஆண்டு முதல் இரண்டு காலாண்டுகளில், சிங்கப்பூர் பொருளாதார வளர்ச்சி விகிதம் மேலும் மந்தமடைந்து வருவதாகப் பரவலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

   

  இந்தியா

  தேசிய கடன்: 495.7 பில்லியன் டாலர்
  கடனுக்கான ஜிடிபி விகிதம் : 69.50%

  இந்தியாவின் இறக்குமதியானது ஏற்றுமதியுடன் ஒத்துப்போகவில்லை, இது மிகப்பரியப் பாதிப்பினை இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் கடன் அளவு குறையும் என்றும் ரீயூட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

   

  தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

  English summary

  Top 10 Countries with Largest National Debt to GDP in 2018

  Top 10 Countries with Largest National Debt to GDP in 2018
  Company Search
  Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
  Thousands of Goodreturn readers receive our evening newsletter.
  Have you subscribed?

  Find IFSC

  Get Latest News alerts from Tamil Goodreturns

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more