இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்துத் தொழில்களிலும் தகவல் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் என்பது தவிர்க முடியாத ஒன்றாக உள்ளது. பலரதரப்பட்ட துறை மற்றும் வணிகங்கள் எல்லாம் ஐடி சேவையினைப் புகுத்தி தங்களது வர்த்தகத்தினை அதிகரித்து வருகின்றன.
அதே நேரம் பல ஐடி நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்ப சேவையினை வழங்கியும் வருகின்றன. அதில் இந்திய நிறுவனங்களுக்கு முக்கியப் பங்குகள் உண்டு. எனவே உலக நாடுகளில் உள்ள டாப் 10 ஐடி நிறுவனங்களில் இந்திய நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த டாப் 10 ஐடி நிறுவன பட்டியல் என்பது இரு நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபத்தினை வைத்துக் கணக்கிட்டுள்ளனர்.
எனவே இந்த டாப் 10 ஐடி நிறுவன பட்டியல்களில் இடம்பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் எவை மற்றும் அவற்றின் வருவாய் மாற்றும் லாபம் எவ்வளவு என்ற விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
10. இன்ஃபோசிஸ்
இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம் உலகின் டாப் 10 ஐடி நிறுவனங்கள் பட்டியலில் 10 வது இடத்தினைப் பிடித்துள்ளது. நாராயண மூர்த்தி மற்றும் 6 பொறியாளர்கள் சேர்ந்து புனேவில் 205 டாலர் முதலீட்டுடன் துவங்கிய நிறுவனமானது உலகின் மிகப் பெரிய ஐடி நிறுவனமாக வளர்ந்துள்ளது.
இந்தியாவின் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2016-ம் ஆண்டு முதன் முறையாக 10 பில்லியன் டாலர் வருவாய் பெறும் நிறுவனமாக உயர்ந்துள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனம் பயன்பாட்டு அவுட்சோர்ஸிங் சேவைகள், அப்லிகேஷன் மேம்பாடு மற்றும் பராமரிப்பு, இன்ஃபோசிஸ் சரிபார்ப்புத் தீர்வுகள், கிளவுட், உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு போன்ற செவைகளை வழங்கி வருகிறது. தவிர, இன்ஃபோசிஸ் தகவல் தளம், எட்ஜ்வேர், இன்ஃபோசிஸ் பினான்ஸ், பானயா மற்றும் ஸ்கவவா போன்ற மென்பொருள்களையும் இன்ஃபோசிஸ் உருவாக்கியுள்ளது.
வருவாய்: 9501 மில்லியன் டாலர்
லாபம்: 3551 மில்லியன் டாலர்
9. கேப்ஜெமினி
ஐப்ரோப்பிய ஐடி கன்சல்டன்சி நிறுவனமான கேப்ஜெமினி பாரிஸ் மற்றும் பிரான்ஸ் நாடுகளைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கேப்ஜெமினி நிறுவனம் 2967-ம் ஆண்டுச் செர்ஜ் காம்ப்ஃப் என்பவரால் துவங்கப்பட்டது ஆகும்.
உலகளவில் மிகப் பெரிய ஐட் சேவை வழங்கும் ஐடி நிறுவனமாக வளர்ந்துள்ள கேஜெமினியில் 2 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அதிலும் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள் ஆவார்கள். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கேப்ஜெமினி நிறுவனம் 25 சிறு மற்றும் பெறு நிறுவனங்களை வாங்கியுள்ளது மிகப் பெரிய வளர்ச்சியாகும்.
வருவாய்: 13312 மில்லியன் டாலர்
லாபம்: 977 மில்லியன் டாலர்
8. காக்னிசென்ட்
குமார் மகாதேவா என்பவரால் சென்னை தலைமையிடமாகக் கொண்டு டன் அண்ட் பிராட்ஸ்ட்ரீட் 1996 இன் தொழில்நுட்ப பிரிவாக 1996-ம் ஆண்டுக் கானிசெண்ட் நிறுவனம் துவங்கப்பட்டது.
பின்னர் இந்த நிறுவனத்தின் தலைமையிடம் அமெரிக்காவின் நியூ ஜெர்சிக்கு மாற்றப்பட்டது. 2000-ம் ஆண்டு முதல் காக்னிசென்ட் நிறுவனம் மிக வேகமாக வளர்ச்சியினைத் தொட்டது மட்டும் இல்லாமல் 2011-ம் ஆண்டுப் பார்ச்யூன் 500 நிறுவன பட்டியலில் இடம்பெற்றது. தற்போது உலகின் மிகப் பெரிய ஐடி நிறுவனமாகவும் வளர்ந்துள்ளது.
காக்னிசென்ட் நிறுவனம் முக்கியமாகத் தகவல் தொழில்நுட்பம், தகவல் பாதுகாப்பு, ஆலோசனை, ஐடிஓ மற்றும் பிபிஓ சேவைகள், வாணிகம் & தொழில்நுட்ப ஆலோசனை, அமைப்புகள் ஒருங்கிணைப்பு, பயன்பாட்டு அபிவிருத்தி மற்றும் பராமரிப்பு, ஐடி உள்கட்டமைப்புச் சேவைகள், பகுப்பாய்வு போன்ற சேவையினை வழங்கி வருகிறது. அதிகப்படியான அமெரிக்க வாடிக்கையாளர்களுடன் காக்னிசென்ட் நிறுவனம் மிகப் பெரிய வளர்ச்சியினைப் பெற்று வருகிறது. தற்போது காக்னிசென்ட் நிறுவனத்தில் 1.5 லட்சம் ஊழியர்கள் உலகம் முழுவதும் பணிபுரிந்து வருகின்றனர்.
வருவாய்: 13489 மில்லியன் டாலர்
லாபம்: 1553 மில்லியன் டாலர்
7. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா கன்சல்டின்ஸி நிறுவனம் இந்தியாவின் முதல் மிகப் பெரிய ஐடி நிறுவனமாகும். 1968-ம் ஆண்டு ஜே ஆர் டி டாடா மற்றும் எப் சி கோலி என்பவர்களால் மும்பையினைத் தலைமையிடமாகக் கோண்டு இந்த நிறுவனம் துவங்கப்பட்டது. தற்போது 46 நாடுகளில் மிகப் பெஇய வாடிக்காயளர்களுடன் தனது ஐடி சேவையினை டிசிஎஸ் வழங்கி வருகிறது.
இந்தியாவில் இ-கவர்னஸ், வங்கி மற்றும் நிதி சேவைகள், தொலைத்தொடர்பு, கல்வி மற்றும் சுகாதாரத் துறை போன்றவற்றில் டிசிஸ் நிறுவனம் தனது ஆதிக்கத்தினைச் செலுத்தியுள்ளது. உலகளவில் பையோமெட்ரிக் தகவல்கள் ப்ண்றவற்றுடன் மருத்துவத் துறைக்கு ஐடி சேவை அளித்த நிறுவனம் டிசிஎஸ் என்ற பெருமையும் உண்டு.
வருவாய்: 17330 மில்லியன் டாலர்
லாபம்: 4003 மில்லியன் டாலர்
6. எஸ்ஏபி
சேப் எனப்படும் எஸ்ஏபி நிறுவனம் உலகின் மிகப் பெரிய நிறுவன வள திட்டமிடல் (ஈஆர்பி) மென்பொருளை உருவாக்கிய நிறுவனமாகும். தரவு செயலாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் எஸ்ஏபி ஒரு ஜெர்மன் பன்னாட்டு நிறுவனம் ஆகும்.
1972-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் 180 நாடுகளி 3 லட்சம் வாடிக்கையாளர்களுடன் தனது மென்பொருள் சேவையினை வழங்கி வருகிறது.
வருவாய்: 22062 மில்லியன் டாலர்
லாபம்: 3634 மில்லியன் டாலர்
5. அக்சன்சர்
1989-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் அமெரிக்கா அல்லாத ஐர்லாந்துவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஒரு ஐடி நிறுவனமாகும். 120 நாடுகளில் இருந்து இயங்கி வரும் அக்சன்சர் நிறுவனத்திலும் அதிகமாக இந்தியகள் தான் ஊழியர்களாக உள்ளனர்.
வருவாய்: 32883 மில்லியன் டாலர்
லாபம்: 4350 மில்லியன் டாலர்
4. ஆரக்கிள்
மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்க அடுத்து மிகப் பெரிய மென் பொருள் தாரிப்பு நிறுவனம் என்றால் அது ஆரக்கிள் தான். டேட்டாபேஸ் மென்பொருள், ஈஆர்பி மென்பொருள் போன்றவற்றை முதன்மையாகக் கொண்டு மென்பொருள் சேவையினை ஆரக்கிள் வழங்கி வருகிறது.
வருவாய்: 37047 மில்லியன் டாலர்
லாபம்: 8901 மில்லியன் டாலர்
3. எச்பி எண்டெபிரைசஸ்
எச்பி நிறுவனம் 50123 மில்லியன் டாலர் வருவாய் மற்றும் 5161 மில்லியன் டாலர் லாபத்துடன் மூன்றாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமாக உள்ளது.
சர்வர்கள், நெட்வொர்க்கிங், மென்பொருள் சேவைகள் போன்றவற்றுக்குப் பேர் போன நிறுவனமாக எச்பி உள்ளது. எச்பி நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 280000 சர்வர்களும், 60 நாடுகளில் 2000 வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
2. மைக்ரோசாப்ட்
மைக்ரோசாட் குறித்து இந்தியர்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. இந்தியாவில் இயங்கி வரும் 80 சதவீத கணினிகள் இந்த நிறுவனத்தின் இயங்குதளத்தில் தான் இயங்கி வருகின்றன. அதுமட்டும் இல்லாமல் எம் எஸ் ஆப்பிஸ், எம் எஸ் டைனமிக்ஸ் ஈஆர்பி, என இந்த நிறுவனத்தின் மென்பொருள்களைப் பயன்படுத்தாத நாடுகளே இருக்காது. உலகின் டாப் 10 ஐடி நிறுவன பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ள இந்த நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 51529 மில்லியன் டாலர், லாபம் 16000 மில்லியன் டாலர் ஆகும்.
1. ஐபிஎம்
உலகின் மிகப் பெரிய ஐடி நிறுவன என்ற பெயரை பெற்றுள்ள ஐபிஎம் நிறுவனத்தில் 400000 ஊழியர்கள் உலகம் முழுவதிலும் இருந்தும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் தலைமையிடம் அமெரிக்காவின், நியூயார்க்கில் உள்ளது.
1911-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட ஐபிஎம் நிறுவனம் 175 நாடுகளில் கிளைகளை அமைத்துள்ளது. 5 முறை நோபல் பரிசினை பெற்றுள்ளது.மென்பொருள் மட்டும் இல்லாமல் வன் பொருள் தாரிப்பிலும் ஐபிஎம் நிறுவனம் பேர் போன நிறுவனமாகும்.
வருவாய்: 79919 மில்லியன் டாலர்
லாபம்: 11872 மில்லியன் டாலர்
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications