அம்பானி குடும்பத்திற்கு தனி அந்தஸ்து.. உலகின் டாப் 10 பணக்கார குடும்பங்களில் புது இடம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புளும்பொ்க் மில்லியனரி இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள உலகின் முதல் பத்துப் பணக்கார வணிகக் குடும்பங்களைப் பற்றிய தகவல்களை இங்குப் பார்க்கவிருக்கிறோம். முதல் தலைமுறையைச் சேர்ந்த வணிகக் குடும்பங்கள் இப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. ஆசியாவைச் சேர்ந்த குடும்பங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. ஆனால், சீனாவிலிருந்து யாரும் இடம்பெறவில்லை.

 

10. போஹ்ரின்கர், வோன் பாம்பாச் (Boehringer, Von baumbach) குடும்பம் (42.2 பில்லியன் டாலர்) :

10. போஹ்ரின்கர், வோன் பாம்பாச் (Boehringer, Von baumbach) குடும்பம் (42.2 பில்லியன் டாலர்) :

ஜெர்மனியைச் சேர்ந்த இக்குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் போஹ்ரின்கர் இங்கெல்ஹிம் (Ingelheim) என்னும் மருந்து தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்குத் தேவையான மருந்துகளைத் தயாரிக்கிறது. இந்நிறுவனம் 1885 ஆம் ஆண்டுத் தோற்றுவிக்கப்பட்டது.

 

 

9. கார்கில் (Cargill) குடும்பம் (42.3 பில்லியன் டாலர்) :

9. கார்கில் (Cargill) குடும்பம் (42.3 பில்லியன் டாலர்) :

அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் கார்கில் என்பவரால் தொடங்கப்பட்டது கார்கில் (Cargill) நிறுவனம். ஒரே ஒரு தானியச் சேமிப்பு மையத்தோடு இந்நிறுவனம் 1865 ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்டது. தற்போது இந்நிறுவனம் உணவு மற்றும் வேளாண்மைத் துறையில் மிகப்பெறும் நிறுவனமாகத் திகழ்கிறது.

 8. க்வான்ட்(Quant) குடும்பம் (42.7 பில்லியன் டாலர்) :
 

8. க்வான்ட்(Quant) குடும்பம் (42.7 பில்லியன் டாலர்) :

ஜொ்மனியை மையமாகக் கொண்டு இயங்கும் BMW நிறுவனத்தை இக்குடும்பம் நிர்வகிக்கிறது. இந்நிறுவனத்தை நிறுவியவர் கார்ல் ராப் என்பவர். இந்நிறுவனம் நொடிப்பு நிலையில் இருந்த பொழுது அதனைக் கரம் கொடுத்துத் தூக்கி நிறுத்தியவர் ஹெர்பர்ட் க்வான்ட். இவருடைய மகன் ஸ்டெஃபான் க்வான்ட், மகள் சுசான் கிளாட்டன் ஆகிய இருவரும் தற்போது இந்நிறுவனத்தைக் கவனித்துக் கொள்கின்றனர்.

7. அம்பானி குடும்பம் (43.4 பில்லியன்) :

7. அம்பானி குடும்பம் (43.4 பில்லியன்) :

இந்தியாவைச் சேர்ந்த திருபாய் அம்பானியால் 1957 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் என்னும் வணிகச் சாம்ராஜ்யத்திற்கான விதை ஊன்றப்பட்டது. 1977 ஆம் ஆண்டு இது பொது வெளியில் பங்குகளை வெளியிட்டு (IPO) பெரும் நிறுவனமாக உருவெடுத்தது. தற்போது இந்நிறுவனம் முகேஷ் அம்பானியால் நிர்வகிக்கப்படுகிறது. தொடக்கத்தில் டெக்ஸ்டைல் துறையில் கவனம் செலுத்திய இந்நிறுவனம், பிறகு, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, ரீடெய்ல் வணிகம் மற்றும் தொலைத் தொடர்பு ஆகிய துறைகளில் கால்பதித்து வெற்றிகரமான நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது.

 6. வெர்தெய்மர் குடும்பம் (45.6 பில்லியன் டாலர்) :

6. வெர்தெய்மர் குடும்பம் (45.6 பில்லியன் டாலர்) :

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இக்குடும்பம் வாசனைத் திரவியத் தயாரிப்பில் கொடிகட்டிப் பறக்கிறது. பியரி வெர்த்தெய்மர் Coco Chanel நிறுவனத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் தன்னிடம் வைத்துள்ளார்.

5. டூமாஸ் குடும்பத்தினர் (49 பில்லியன் டாலர்) :

5. டூமாஸ் குடும்பத்தினர் (49 பில்லியன் டாலர்) :

பிரான்ஸ் நாட்டைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் Hermes நிறுவனம் டூமாஸ் குடும்பத்திற்குச் சொந்தமானது. இந்நிறுவனம் ஃபேஷன் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. தெய்ரி ஹெர்ம்ஸ் என்பவரால் 1837 ஆம் ஆண்டு இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தை உலக அளவிலான வணிக நிறுவனமாக மாற்றியவர் லான் லூயிஸ் டூமாஸ் என்பவர். பியரி அலெக்ஸிஸ், அலெக்ஸ் டூமாஸ் ஆகியோர் தற்போது இந்நிறுவனத்தை வழி நடத்தி வருகின்றனர்.

4. வான் டேம், டி மெவிஸ், டி ஸ்போயெல்பெர்ச் குடும்பம். (54.1 பில்லியன் டாலர்.

4. வான் டேம், டி மெவிஸ், டி ஸ்போயெல்பெர்ச் குடும்பம். (54.1 பில்லியன் டாலர்.

பெல்ஜியம் மற்றும் பிரேசில் நாட்டைச் சேர்ந்த இக்குடும்பத்தினர் மது பானத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பெல்ஜியத்தைச் சேர்ந்த மூன்று குடும்பங்களின் வணிக உறவில் தோன்றியது இந்நிறுவனம். உலகின் மிகப்பெரும் மதுபானத் தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்கிறது. Stella Artois, Budweiser மற்றும் Corona ஆகியவை இந்நிறுவனத்தின் புகழ்ப்பெற்ற தயாரிப்புகள் ஆகும்.

3. மார்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மார்ஸ் குடும்பம் – (89.7 பில்லியன் டாலர்) :

3. மார்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மார்ஸ் குடும்பம் – (89.7 பில்லியன் டாலர்) :

ஃபிராங்க்ளின் சார்லஸ் மார்ஸ் என்பவரால் 1911 ஆம் ஆண்டு இந்நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களின் தயாரிப்பில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. M&Ms, Milky Way மற்றும் Mars Bars ஆகியவை இந்நிறுவனத்தின் புகழ்ப்பெற்ற தயாரிப்புகள். இந்நிறுவனத்திற்கு 35 பில்லியன் டாலர் அளவுக்கான வருமானம் இது போன்ற தயாரிப்புகளின் மூலமே வருகின்றது. இது அல்லாமல் பாதி வருமானம் பிற பொருட்களின் தயாரிப்புகளின் மூலம் கிடைக்கின்றது.

2. கோ சகோதரர்கள், கோச் தொழிற்சாலைகள் (Koch brothers, Koch Industries) (98.7 பில்லியன் டாலர்கள்) :

2. கோ சகோதரர்கள், கோச் தொழிற்சாலைகள் (Koch brothers, Koch Industries) (98.7 பில்லியன் டாலர்கள்) :

இக்குடும்பமும் அமெரிக்காவைச் சேர்ந்த குடும்பம். ஃபிரடெரிக், சார்லஸ், டேவிட் மற்றும் வில்லியம் ஆகிய நான்கு சகோதரர்கள் தங்களுடைய குடும்பத் தொழிலான எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிலை நடத்தி வருகின்றனர். 1980 ஆம் ஆண்டு ஏற்பட்ட குடும்பப் பகையின் காரணமாக இரண்டு சகோதரர்கள் பிரிந்துவிட்டனர். தற்போது இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 100 பில்லியன் டாலர்.

1.வால்டன் குடும்பம், வால்மார்ட். (151.5 பில்லியன் டாலர்) :

1.வால்டன் குடும்பம், வால்மார்ட். (151.5 பில்லியன் டாலர்) :

அமெரிக்காவில் உள்ள வால்மார்ட் நிறுவனம் இக்குடும்பத்திற்குச் சொந்தமானது. உலகின் மிகப்பெரும் ரீடெய்லர் வணிக நிறுவனத்தின் பங்குகளின் பெரும்பகுதி இக்குடும்பத்திடமே உள்ளது. உலகம் முழுவதும் 12,000 இடங்களில் கிளைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனம் 500 பில்லியன் டாலர் அளவுக்கு விற்பனை வருமானத்தைக் கொண்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 10 richest business families in the world 2018

Top 10 richest business families in the world 2018
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X