தொண்டு நிறுவனமென்றால் காசுக்கு கஷ்டப்படவேண்டுமா என்ன?

ஒரு தொண்டு நிறுவனம் அல்லது இலாப நோக்கற்ற நிறுவனம் என்பது தன்னுடைய உபரி வருவாயைச் சேமித்து அல்லது தன்னுடைய நோக்கங்களுக்காக முதலீடு செய்து வைப்பதைக் குறிக்கும்.

நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பதற்கு மாறாக, தொண்டு நிறுவனங்கள் வருமானம் ஈட்டுவதிலிருந்து விலக்கப்பட்டவை அல்ல. ஒரு தொண்டு நிறுவனம் அல்லது இலாப நோக்கற்ற நிறுவனம் என்பது தன்னுடைய உபரி வருவாயைச் சேமித்து அல்லது தன்னுடைய நோக்கங்களுக்காக முதலீடு செய்து வைப்பதைக் குறிக்கும்.

தொண்டு நிறுவனமென்றால் காசுக்கு கஷ்டப்படவேண்டுமா என்ன?

இதில் எந்தப் பங்குதாரரோ அல்லது நிறுவனர்களோ ஆதாயம் பெறமாட்டார்கள். அவர்கள் தங்கள் நோக்கங்கள் நிறைவேற பெரும் பணத்தைச் செலவழிக்கிறார்கள்.

சேவைகளின் தன்மை மற்றும் அவர்களின் நிர்வாகத் தேவைகளுக்கான வரவுசெலவு கணக்குகள் அடிப்படையில் உலகம் முழுதும் உள்ள நிறுவனங்கள் பல நூறு கோடி டாலர்களைத் தாண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நாங்கள் உங்களுக்காக இதுபோன்ற மிகவும் பணம் படைத்த தொண்டு நிறுவனங்களின் பட்டியலை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

5. தி சால்வேஷன் ஆர்மி

5. தி சால்வேஷன் ஆர்மி

அமைந்துள்ள நாடு : இங்கிலாந்து (யுனைட்டட் கிங்டம்)

வருமானம் : 388,84,85,000 டாலர்கள் (ஏறக்குறைய 25 ஆயிரம் கோடி ரூபாய்)

1865 ஆம் ஆண்டில் வில்லியம் மற்றும் கேத்ரீன் பூத் தம்பதியரால் இலண்டனில் துவங்கப்பட்ட சால்வேஷன் ஆர்மி நிறுவனம் உலகளாவிய கிருத்துவ சேவை நிறுவனமாகும். இது உலகின் 127 நாடுகளில் செயல்பட்டு வருவதுடன் 15 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இதன் மனித நேய தொண்டுகளின் ஒரு பகுதியாக என் எப் எல் எனப்படும் நேஷனல் புட்பால் லீக் அமைப்பிடம் இருந்து மூன்று லட்சம் டாலர்களை மாத்தியூ சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பெற்ற நிறுவனங்களில் இதுவும் ஒன்று.

இந்த சால்வேஷன் ஆர்மியின் அவசரக்கால நடவடிக்கைகள் ஹெய்டி மற்றும் பஹாமாஸ் நாடுகளை உள்ளடக்கிய கரீபியன் பகுதிகளில் வீடுகளை இழந்தவர்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, தண்ணீர் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதில் கவனம் செலுத்தியது. இந்த நிறுவனம் தன்னுடைய சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுடைய இணைய தளத்தில் நன்கொடை பிரச்சாரங்களையும் தொடங்கியுள்ளது.

 

4. யுனைடட் வே வேர்ல்டுவைட்

4. யுனைடட் வே வேர்ல்டுவைட்

அமைந்துள்ள நாடு : அமெரிக்கா

வருமானம் : $ 414,27,16,970 அமெரிக்க டாலர்கள் (27 ஆயிரம் கோடி ரூபாய்)

வர்ஜீனியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இது உலகெங்கிலும் ௪௦௦ நாடுகளிலும் 1800 பகுதிகளிலும் ஐந்து கோடி மக்களுக்கும் அதிகமானவர்கள் வாழ்வில் உறுதுணையாக இருந்துள்ளது. இதில் ஏறக்குறைய 30 இலட்சம் தன்னார்வலர்களும் ஒரு கோடி நன்கொடையாளர்களும் பங்கேற்றுள்ளனர். யுனைடெட் வே கல்வி, வருமானம் மற்றும் உடல் நலம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்குடன் செயல்பட்டு வருகிறது.

 

3. கேத்தலிக் சாரிடீஸ் யு.எஸ்.ஏ .

3. கேத்தலிக் சாரிடீஸ் யு.எஸ்.ஏ .

அமைந்துள்ள நாடு : அமெரிக்கா

வருமானம் $428,50,89,019 டாலர்கள் (ஏறக்குறைய 29 ஆயிரம் கோடி ரூபாய்)

1910 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் நன்கு வளர்ந்து இன்று 2014 ஆண்டுக் கணக்கின் படி உலகின் மாபெரும் தொண்டு நிறுவனங்களுள் ஒன்றாக சுமார் 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிதியைப் பெற்றிருக்கும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. வர்ஜீனியாவின் அலெக்ஸ்சாண்டிரியா பகுதியில் தலைமையிடத்தைக் கொண்ட இது 160 - க்கும் அதிகமான கேத்தலிக் தொண்டு நிறுவனங்களின் தேசிய அலுவலகமாகச் செயல்பட்டு பல இலட்சம் மக்களுக்கு இன, சமூக அல்லது பொருளாதார வேறுபாடுகளின்றி தொண்டுகள் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் சேவைகள் வீட்டு வசதி, மருத்துவம், உணவு, ஹெச் ஐ வி தடுப்பு நடவடிக்கைகள், பேரழிவு நிவாரணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதன் மிக முக்கிய குறிக்கோள் அமெரிக்கா முழுவதும் பல்வேறு சமூகங்களில் நிலவும் வறுமையை ஒழிப்பதாகும்.

 

2. குட்வில் இண்டஸ்ட்ரீஸ் இண்டெர்நேஷனல்

2. குட்வில் இண்டஸ்ட்ரீஸ் இண்டெர்நேஷனல்

அமைந்துள்ள நாடு : அமெரிக்கா

வருமானம்: $5,372,838,276 டாலர்கள் (ஏறக்குறைய 35 ஆயிரம் கோடி ரூபாய்)

குட்வில் இண்டஸ்ட்ரீஸ் இண்டெர்நேஷனல் ஒரு இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனம். இது கல்வி வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. குறிப்பாக வயது, உடல் குறைபாடுகள் மற்றும் குற்றப்பின்னணி உடையவர்களுக்குக் கல்வி வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதால் அதில் அதிக கவனம் செலுத்துகிறது. ரெவ் எட்கர் ஜெ ஹெல்ம்ஸ் என்பவரால் 1902 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இது ஏழை எளியோருக்கு வருமானத்திற்கும் வாழ்விற்கும் ஒரு வழி செய்ய வசதியானவர்களிடம் உபயோகப்படுத்திய வீட்டுப் பொருட்களை பெற்றுச் சரிசெய்து விற்று அதன் மூலம் வருமான ஈட்ட வழி செய்கிறது. இந்த நிறுவனம் 2014 ஆண்டு நிலவரப்படி உலகின் இரண்டாவது பெரிய தொண்டு நிறுவனமாக சுமார் ௩௫ ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடைகளுடன் விளங்குகிறது.

 

1. ஒய்.எம்.சி.ஏ

1. ஒய்.எம்.சி.ஏ

அமைந்துள்ள நாடு : சுவிஸர்லாந்து

வருமானம்: $6,608,818,000 டாலர்கள் (ஏறக்குறைய 43 ஆயிரம் கோடி ரூபாய்)

யங் மென்ஸ் கிறிஸ்டியன் அசோசியேஷன் (ஒய்எம்சிஏ எனப் பிரபலமான அழைக்கப்படும் அல்லது ஒய் என குறிப்பிடப்படும்) சுவிஸர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் அமைத்துள்ள ஒரு கிருத்துவ தொண்டு நிறுவனம். 1844 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பொதுவாக கிராமப்புற மக்களால் ஒய்எம்சிஏ பாடல் மூலம் நன்கு அறியப்பட்டுள்ள இது உலகெங்கிலும் உள்ள 199 நாடுகளில் சுமார் 5.8 கோடி மக்களின் வாழ்வில் இளைஞர்களின் மீது கவனத்தை வைத்து சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மாபெரும் தொண்டு நிறுவனமாக இது 43 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடைத் தொகையுடன் முதல் இடத்தில் இருக்கிறது.

பிரமிப்பா இருகுல்ல!

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+