உங்களை ஆச்சிரியத்தில் மூழ்கடித்த 'அடேங்கப்பா' டீல் இது..!

பொதுவாக உலகம் வர்த்தக சந்தையில் சுழற்சிக்கு ஏற்ற வகையில் தான் சுற்றி வருகிறது, இதை ஒப்புக்கொள்ள மறுத்தாலும் உண்மை அதுதான்.இந்த வகையில் வர்த்தக சந்தையில் செய்யப்பட்ட சில டீல் உங்களை ஆச்சிரியப்படுத்தும்

சர்வதேச வர்த்தக உலகில் ஒரு சகாப்தமே முடிவுக்கு வந்ததாகக் கருதப்படுவது, 2016ஆம் ஆண்டில் அமெரிக்க மாபெரும் தொலைத்தொடர்பு நிறுவனமான வெரிசோன், இணையதள முன்னோடியான யாஹுவை கையகப்படுத்தியது தான்.

ஒரு முறை மைக்ரோசாப்ட் 49 பில்லியன் டாலரைத் தர முன் வந்தபோது அதை உதறி தள்ளிவிட்ட யாஹூ, தன் சந்தை மதிப்பு $125 பில்லியன் டாலர் என மார் தட்டியது.

ஆனால் இப்போது வெறும் $4.83 பில்லியன் டாலருக்கு வெரிசோன் இந்நிறுவனத்தைக் கையகப்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக நடந்து வந்த இந்தக் கையகப்படுத்துதல் பேச்சு வார்த்தை தான் 2016ஆம் ஆண்டின் 2வது மிகப்பெரிய தொழிநுட்ப ஒப்பந்தமாகும்.

அப்படிப்பட்ட சில நிறுவன கையகப்படுத்தல்களைப் பற்றித் தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்:

2016: லிங்க்ட்இன்- மைக்ரோசாப்ட்

2016: லிங்க்ட்இன்- மைக்ரோசாப்ட்

லிங்க்ட்இன் நிறுவனத்தை $26.2 பில்லியன் டாலருக்கு வாங்கியது மைக்ரோசாப்ட்

இந்த வருட ஜுனில், லிங்க்ட்இன் என்ற தொழிநுட்ப பிணையச் சேவையை $26.2 பில்லியனுக்குக் கையகப்படுத்தியதை மைக்ரோசாப்ட் அறிவித்தது. 2016ஆம் ஆண்டின் மிகப்பெரிய பெரிய ஒப்பந்தமாகக் கருதப்படுகிறது.

 

2015: அவகோ டெக்னாலஜிஸ் - பிராட்காம் கார்ப்

2015: அவகோ டெக்னாலஜிஸ் - பிராட்காம் கார்ப்

அவகோ டெக்னாலஜிஸ் பிராட்காம் கார்ப் என்ற நிறுவனத்தை $37 பில்லியனுக்கு வாங்கியது

வளர்ந்து வரும் வயர்லெஸ் சந்தையைக் குறித்து வைத்து, செமி-கண்டக்டர் தொழிலில் நடந்த மிகப்பெரிய ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்று.

 

2015: டெல் - ஈ.எம்.சி.

2015: டெல் - ஈ.எம்.சி.

ஈ.எம்.சி. கார்ப்பரேஷன் நிறுவனத்தை $67 பில்லியனுக்கு வாங்கியது டெல்

தரவு சேமிப்பு மற்றும் தகவல் பாதுகாப்பு நிறுவனத்தை டெல் வாங்கியது தொழில்நுட்ப துறையில் மிகப்பெரியவற்றில் ஒன்றாகும்.

 

2015: NXP - ஃப்ரீஸ்கேல்

2015: NXP - ஃப்ரீஸ்கேல்

ஃப்ரீஸ்கேல் செமிகண்டக்டர் நிறுவனத்தை $11.8 பில்லியனுக்கு NXP வாங்கியது

சிப் தயாரிப்பாளர்களான NXP செமிகண்டக்டர்ஸ் NV, சிறிய சிப் தயாரிப்பு நிறுவனமான ஃப்ரீஸ்கேல் செமிகண்டக்டர்-ஐ $11.8 பில்லியனுக்கு வாங்கியது. இந்த ஒப்பந்தத்தால் ஒன்றுபட்ட நிறுவனத்தின் மதிப்பு $40 பில்லியன் ஆனது.

 

2014: லெனோவா - மோட்டோரோலா

2014: லெனோவா - மோட்டோரோலா

கூகிள் நிறுவனத்திடம் இருந்து மோட்டோரோலாவை $2.9 பில்லியனுக்கு வாங்கியது லெனோவா

இரண்டு வருடங்களில் $2 பில்லியனுக்கும் அதிகமாக இழந்ததால், மோட்டோரோலாவின் ஸ்மார்ட்ஃபோன் வணிகத்தை $2.9 பில்லியனுக்கு லெனோவாவிடம் கூகிள் விற்றது. இருப்பினும் காப்புரிமைகளைத் தன் வசம் வைத்துக் கொண்டது.

 

2014: பேஸ்புக் - வாட்ஸ்அப்

2014: பேஸ்புக் - வாட்ஸ்அப்

2014ஆம் ஆண்டில் $21.8 பில்லியனுக்கு வாட்ஸ்அப்பை வாங்கியது ஃபேஸ்புக்

சமூக ஊடக பெரு நிறுவனமான பேஸ்ஃபுக், வாட்ஸ்அப்பை வாங்கியதன் மூலம் மெசேஜ் அனுப்பும் ஆப்பில் தன் சேவையை விரிவாக்கம் செய்தது.

 

 2012: மோட்டோரோலா - கூகிள்

2012: மோட்டோரோலா - கூகிள்

மோட்டோரோலா மொபிலிட்டியை $12.4 பில்லியனுக்குக் கூகிள் வாங்கியது

தேடுதல் ஜெயண்ட்டான கூகிள் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் மோட்டோரோலாவை வாங்கியது. அதனுடைய 17,000 கைப்பேசி காப்புரிமைகளுக்காகவே அதனைக் கூகிள் கையகப்படுத்தியதற்கான முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

 

2011: ஹெச்பி- அட்டானமி

2011: ஹெச்பி- அட்டானமி

அட்டானமியை கிட்டத்தட்ட $10 பில்லியனுக்கு வாங்கியது ஹயூலெட்-பேக்கர்ட்

கணினி தயாரிப்பாளரான HP தன் மென்பொருள் மற்றும் சேவைகளை வலிமைப்படுத்த இந்தக் கையகப்படுத்தலை மேற்கொண்டது. ஆனால் வெகு விரைவில் இந்த ஒப்பந்தம் முறிந்தது. அதற்குக் காரணம் தன் விற்பனை பற்றி HP-யிடம் தவறான தகவலை அட்டானமி அளித்துள்ளது.

தான் கட்டிய தொகை அளவிற்கான மதிப்புடையது அல்லது அட்டானமி என்பதால் $8.8 பில்லியனை வாங்கியது.

 

2011: மைக்ரோசாப்ட்- ஸ்கைப்

2011: மைக்ரோசாப்ட்- ஸ்கைப்

ஸ்கைப்பை $8.5 பில்லியனுக்கு வாங்கியது மைக்ரோசாப்ட்

மென்பொருள் ஜெயண்ட் மைக்ரோசாப்ட் தன் ஆன்லைன் வீடியோ அழைப்பு சேவைகளை வலுப்படுத்த ஸ்கைப்பை வாங்கியது.

 

2010: ஆரக்கிள் - சன் மைக்ரோசிஸ்டம்ஸ்

2010: ஆரக்கிள் - சன் மைக்ரோசிஸ்டம்ஸ்

சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தை $7.4 பில்லியனுக்கு வாங்கியது ஆரக்கிள்

இந்தக் கையகப்படுத்தல் ஆரக்கிள் நிறுவனத்திற்கு ஜாவா ப்ரோக்ராமிங் மொழியின் மீது உரிமையை ஏற்படுத்தியது. மேலும் வன்பொருள் வணிகத்திலும் இந்த நிறுவனத்தை நுழைய வைத்தது.

சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஆரக்கிள் வாங்கிய தொகை ஈர்க்கக்கூடிய வகையில் இல்லை என ஆய்வாளர்கள் கருத்து கூறினர்.

 

2008: ஹெச்பி- ஈடிஎஸ்

2008: ஹெச்பி- ஈடிஎஸ்

எலெக்ட்ரானிக் டேட்டா சிஸ்டம்ஸ் நிறுவனத்தை $13 பில்லியனுக்கு வாங்கியது ஹயூலெட்-பேக்கர்ட்

தன்னுடைய தொழில்நுட்ப கன்சல்டிங் சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் HP இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டது. ஆனால் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்வதில் HP-க்குப் பிரச்சனை ஏற்பட்டது.

HP-யின் 2015 பிரிவுக்குப் பின், HP என்டர்ப்ரைசஸ்-ன் ஒரு அங்கமானது EDS

கடந்த மாதம், கம்ப்யூட்டர் சயின்சஸ் கார்பொரேஷன் நிறுவனத்திடம் தன் வணிகச் சேவை பிரிவை விற்பதன் மூலம், $8.5 பில்லியன் ஒப்பந்தத்தின் ஒரு அங்கமான முன்னாள் EDS செயற்பாடுகளை மூடப் போகிறது.

 

2005: சிமாண்டெக் - வெரிடாஸ்

2005: சிமாண்டெக் - வெரிடாஸ்

வெரிடாஸ் நிறுவனத்தை $13.5 பில்லியனுக்கு வாங்கியது சிமாண்டெக்

பாதுகாப்பு மென்பொருள் நிறுவனம் இந்தக் கொள்முதல் மூலமாகத் தன் சேமிப்பு மென்பொருள் திறன்களை விரிவாக்கம் செய்தது.

இந்த ஒப்பந்தமும் மற்றொரு பொருத்தமின்மையாக மாறியது. கடந்த வருடம் வெரிடாஸ் நிறுவனத்தைக் கார்லிலே குரூப் அண்ட் சிங்கப்பூர்'ஸ் சாவரீன் வெல்த் ஃபண்ட், ஜி.ஐ.சி.-யிடம் $8 பில்லியனுக்கு விற்றது மூலமாக இது தெரிய வந்துள்ளது.

 

2005: ஆரக்கிள் - பீப்பிள் சாஃப்ட்

2005: ஆரக்கிள் - பீப்பிள் சாஃப்ட்

பீப்பிள்சாஃப்ட் நிறுவனத்தை $11.1 பில்லியனுக்கு வாங்கியது ஆரக்கிள்

மனிதவள மேம்பாடு மென்பொருளை வாங்கியதன் மூலம், வணிக மேம்பாடு பிரயோகங்கள் தொடர்பாக, SAP-க்கு வல்லமைமிக்க எதிராளியானது ஆரக்கிள்.

சமீப காலங்களில், பீப்பிள்சாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனரான டேவிட் டுஃபீல்டு அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஆன்லைன் பணியாளர்கள் சேவைகளின் வல்லுனரான ஒர்க்டே, ஆரக்கிள் நிறுவனத்திற்குப் புதிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

 

2002: ஹெச்பி - காம்பாக்

2002: ஹெச்பி - காம்பாக்

காம்பாக் நிறுவனத்தை $19 பில்லியனுக்கு வாங்கியது ஹயூலெட்-பேக்கர்ட்

இந்த ஒப்பந்தத்தை முடித்தவர் HP-யின் முன்னாள் சி.ஈ.ஓ.-வான கார்லி பியோரினா. இதனால் ஐ.பி.எம். நிறுவனத்திற்கு இவர்கள் பெரிய போட்டியாளர் ஆயினர். ஆனாலும் HP-யின் நிறுவனங்களின் சட்டப்பூர்வ வாரிசுகள் உட்பட அதன் சில முக்கியப் பங்குதாரர்கள் மூலமாக நிறுவனம் தீவிர எதிர்ப்பைச் சந்தித்தது.

இந்தக் கையகப்படுத்தல் HP நிறுவனத்தை மிகப்பெரிய பர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பாளராக நிலைநிறுத்த உதவியது. ஸ்மார்ட்ஃபோன் மற்றும் டேப்லெட்களின் வளர்ந்து வந்த புகழால் டெஸ்கடாப் மற்றும் லேப்டாப்களின் விற்பனை சரிவடைந்ததால், இந்த ஒப்பந்தம் அதன் ஒளிர்வை இழந்துள்ளது.

கடந்த வருடம், HP இரண்டு நிறுவனங்களாகப் பிரிந்தது. ஒன்று சேவை வணிகங்களின் மீது கவனம் செலுத்தியது. மற்றொன்று கணினி மற்றும் பிரிண்டர் விற்பனைகளில் கவனம் செலுத்தியது.

 

2002: வெரிஸைன்- நெட்ஒர்க் சொல்யூஷன்ஸ்

2002: வெரிஸைன்- நெட்ஒர்க் சொல்யூஷன்ஸ்

நெட்ஒர்க் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தை $21 பில்லியனுக்கு வாணியது வெரிஸைன்

பாதுகாப்பு மென்பொருள் தயாரிப்பாளரான வெரிசைன், இணையதளம்-பெயர் பதிவாளர் பிணையத் தீர்வு அளிக்கும் நிறுவனத்தை $21 பில்லியனுக்கு வாங்கியது.

 

2000: AOL - டைம் வார்னர்

2000: AOL - டைம் வார்னர்

டைம் வார்னர் நிறுவனத்தை $181.6 பில்லியனுக்கு வாங்கியது AOL

இணையதளத் தொழில் வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய ஒன்றாகப் பார்க்கப்பட்டது. ஜனவரி 2000-ல், $181.6 பில்லியனுக்கு டைம் வார்னரை வாங்கியது AOL

இருப்பினும், டாட்காம் வீழ்ச்சி வந்த போது, இந்த ஒப்பந்தமும் வீழ்ச்சி அடைந்தது. 2009-ல் AOL மீண்டும் டைம் வார்னரை $3 பில்லியனுக்குத் தனிப்பட்ட நிறுவனமாகப் பிரித்தது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+