உலகின் முன்னணி எலக்ட்ரிக் வாகன நிறுவனமான டெஸ்லாவின் முக்கிய நிர்வாகியும், தலைமை நிர்வாகி எலான் மஸ்க்கின் நெருங்கிய ஆலோசகருமான ஓமைத் அஃப்ஷார் (Omead Afshar) நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளார். எலான் மஸ்க், டிரம்ப்-க்கு ஆதரவு தெரிவித்த நாளில் இருந்து டெஸ்லா பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
டிரம்ப் ஆட்சியை பிடித்த பின்பும் டெஸ்லா நிறுவனத்திற்கு எவ்விதமான சாதகமான முடிவுகள் எடுக்கப்படவில்லை, மாறாக பல சலுகைகள் நிறுத்தப்பட்டது. இதனால் டெஸ்லா பங்குகள் பெரும் சரிவை எதிர்கொண்டது, இதற்கிடையில் எலான் மஸ்க் மற்றும் டிரம்ப்-க்கு மத்தியில் வாக்குவாதம் அதிகரித்து அரசு பணியை விட்டு வெளியேறி மீண்டும் மஸ்க் டெஸ்லா-வில் கவனத்தை செலுத்தினார்.

மஸ்க் அரசியலில் பிசியாக இருந்த காலக்கட்டத்தில் டெஸ்லாவின் உற்பத்தி, வர்த்தகம், நிர்வாகம் என அனைத்தும் தடுமாறியது. இத்தகைய சூழ்நிலையில் தற்போது இக்காலத்தில் நிர்வாகத்தை சரியாக கவனிக்காதவர்களை எலான் மஸ்க் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
இதோடு டெஸ்லா வர்த்தகத்தில் இழந்த இடத்தை மீண்டும் பிடிக்க அதிரடியாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள முடியாத பல மூத்த அதிகாரிகள் தற்போது அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். இதில் ஓமைத் அஃப்ஷார்-ம் (Omead Afshar) ஒருவர்.
வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் விற்பனை மற்றும் உற்பத்தியை மேற்பார்வையிட்ட அஃப்ஷாரின் வெளியேற்றம், டெஸ்லா-வின் உயர்மட்டத்தில் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஓமைத் அஃப்ஷார், 2017-ல் டெஸ்லாவில் இணைந்து, தலைமை நிர்வாகியின் அலுவலகத்தில் முக்கிய பொறுப்பு வகித்தார். கடந்த ஆண்டு, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் விற்பனை மற்றும் உற்பத்தி செயல்பாடுகளை மேற்பார்வையிடும் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.
இந்த சந்தையில் தான் தற்போது டெஸ்லாவிற்கு மிகப்பெரிய சவால்களாக உள்ளன. EV சந்தையில் போட்டி அதிகரிப்பு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் மஸ்க்கின் பங்கு காரணமாக மக்கள் மத்தியில் எலான் மஸ்க்-கிற்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளது.
அஃப்ஷாரின் வெளியேறுத்தை நிறுவனத்தின் உள் நிர்வாகத்தில் அவரது பெயர் நீக்கப்பட்டு மூலம் சில ஊழியர்கள் இந்த செய்தியை உறுதி செய்துள்ளனர்.
அஃப்ஷாரின் வெளியேறுதல், டெஸ்லாவில் சமீபத்திய இரண்டாவது முக்கிய நிர்வாக மாற்றமாகும். சில வாரங்களுக்கு முன்பு, நிறுவனத்தின் ஆப்டிமஸ் மனித ரோபோ திட்டத்தின் பொறியியல் தலைவர் மிலன் கோவாக், குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புவதாகக் கூறி பதவி விலகினார். இந்த தொடர் வெளியேறுதல்கள், டெஸ்லாவின் நிர்வாக நிலைத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன, குறிப்பாக இது முதலீட்டாளர் நம்பிக்கையை பாதிக்கலாம்.
டெஸ்லா, தற்போது எலக்ட்ரிக் வாகன சந்தையில் கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் விற்பனை குறைந்து, நிறுவனத்தின் பங்கு மதிப்பு சரிவை சந்தித்து வருகிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications