ஒசாகா, ஜப்பான்: "அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போரால் (Trade War) உலக பொருளாதாரமே மந்த நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது" என ஜி20 மாநாடு தொடங்கும் போது ஐரோப்பிய கமிஷனின் தலைவர் ஜேன் க்ளாட் ஜங்கர் (Jean Claude Junker)சொன்னார்.
அதற்கு பதில் கொடுக்கும் விதமாக "அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான பேச்சு வார்த்தைகளில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்றால் விளைவுகள் மோசமாக இருக்கும்" என்றார் ட்ரம்ப்.
அதோடு "தற்போது குறிப்பிட்ட பொருட்கள் மீது விதித்திருக்கும் 25 சதவிகித இறக்குமதி வரியை, சீனாவின் எல்லா இறக்குமதி பொருட்கள் மீதும் விதிப்போம். அமெரிக்க பொருளாதார சீர்த்திருத்தங்களில், சீனா உடனான பேச்சு பயனளிப்பதாக இருக்க வேண்டும்" எனச் சொல்லி திகில் கிளப்பினார் ட்ரம்ப்.
சீன தரப்பு
இன்று (ஜூன் 29, 2019) காலையிலேயே சீன அதிபர் ஜி ஜின்பிங், அடிப்படைப் பிரச்னைகள் குறித்து தன் கருத்தை ட்ரம்புடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாகச் சொன்னார். அதோடு இருநாடுகளுக்கு இடையில் மோதல் போக்கை கடைபிடிப்பதற்கு பதிலாக இரு நாடுகளுக்கு இடையில் பேச்சு வார்த்தை அவசியம் எனவும் அழுத்தமாகச் சொல்லி இருந்தார் சீன அதிபர்.
இனி நோ வரி
ஆக இன்று காலை அமெரிக்காவும், சீனாவும் உட்கார்ந்து பேசி ஒரு சமாதானத்துக்கு வந்திருக்கிறார்கள். மீண்டும் வர்த்தகம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த இரு நாடுகளும் ஒருமனதோடு முன் வந்திருக்கிறார்கள். அதோடு அமெரிக்காவும், இனி சீன பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படாது, என சீன அரசுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறது. இதை சீனாவின் அதிகார பூர்வ செய்தி அமைப்பான ஜின்ஹுவா (Xinhua) நிறுவனமே செய்தியாக வெளியிட்டிருக்கிறது.
அமெரிக்க தரப்பு
"சீனா உடனான பேச்சு வார்த்தை மிகச் சிறப்பாக இருந்தது. மீண்டும் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகப் பேச்சு வார்த்தைகள் பழைய படி சரியான பாதைக்கு வந்திருக்கிறது. நிறைய பேசினோம், என்ன நடக்கப் போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்" என ட்ரம்பே சீனாவுக்கு வெள்ளைக் கொடியை உயரப் பறக்க விட்டிருக்கிறார். இதெல்லாம் போக இரு நாட்டு பேச்சு வார்த்தைகளில் சீனாவின் ஹிவாய் (Huawei) குறித்து பேசி இருக்கிறார்கள்.
ஹிவாய் (Huawei)
ஏற்கனவே பற்றி எரியும் அமெரிக்க சீன வர்த்தகப் போரில், ஹிவாய் (Huawei) பிரச்னை மேலும் எண்ணெய் ஊற்றி நெருப்பை வளர்த்தது. இதனால் இன்னும் உலகப் பொருளாதாரத்தில் பெரிய பாதிப்புகள் ஏற்படுமோ எனவும் பயந்து கொண்டிருந்தார்கள். சீன தரப்போ ஹிவாய் (Huawei) நிறுவனம் மீதான அமெரிக்க தடைகள் நீக்கப் பட வேண்டும். ஹிவாய் (Huawei) மூலமாக எந்த பாதுகாப்புப் பிரச்னையும் இல்லை எனச் சொன்னார்கள். அதற்கு ஓகே சொல்லும் விதத்தில், அமெரிக்க தரப்பிலும், ஹிவாய் (Huawei) மீதான தடைகளை தளர்த்துவதும் இந்த வர்த்தகப் பேச்சில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications