தேர்தல் தோல்வியை ஏற்று கொண்ட டிரம்ப்..!! வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவேன் என அறிவிப்பு..!!

அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் டிரம்பின் குடியரசுக் கட்சியை பின்னுக்கு தள்ளி எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது. இதன் மூலம் பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியின் கை தான் ஓங்கி இருக்க போகிறது. டிரம்புக்கு கிடைத்த மிகப்பெரிய பின்னடைவாக இது பார்க்கப்படுகிறது.

இடைக்கால தேர்தலில் ஆளுங்கட்சியான குடியரசுக் கட்சிக்கு ஏற்பட்டுள்ள கடுமையான பின்னடைவு குறித்து ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ள டிரம்ப், தேர்தல் தோல்வியை ஏற்று கொள்வதாக கூறியுள்ளார். ஈரான் போர் தான் குடியரசு கட்சியின் தேர்தல் தோல்விக்கு காரணம் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

தேர்தல் தோல்வியை ஏற்று கொண்ட டிரம்ப்..!! வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவேன் என அறிவிப்பு..!!

குடியரசுக் கட்சிக்கு கிடைத்த தோல்விக்கு ஈரான் போர் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது என டிரம்ப் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். ஈரான் மோதலால் ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வு , அதனால் வாக்காளர்கள் மத்தியில் உண்டான அதிருப்தி போன்றவையே கட்சியின் மோசமான செயல்பாட்டிற்கு வழிவகுத்தது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Also Read

ஈரான் போரின் தாக்கம் சிறுது காலம் தான் நீடிக்கும் இருந்தாலும் மக்களை அதனை ஏற்க தயாராக இல்லாமல் இப்படி வாக்களித்துள்ளனர் என கூறியுள்ளார். இருப்பினும், நாட்டின் நலனுக்காகவும் ஈரானை அணு ஆயுதம் பெற செய்யாமல் தடுப்பதற்காகவும் தான் எடுத்த அந்த முடிவில் தனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை என்றும், மீண்டும் அதே சூழ்நிலை வந்தால் அப்போதும் போரை தொடங்குவேன் என்றும் அவர் உறுதியாக கூறியுள்ளார்.

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினரின் தேர்தல் வியூகங்களை பாராட்டிய டிரம்ப், ஜனநாயக கட்சியினர் தேர்தலில் மிக சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்றார். தேர்தல் முடிவுகள் பாதகமாக அமைந்தாலும் தனது நிர்வாகத்திலோ அமைச்சரவையிலோ உடனடியாக எந்தவிதமான மாற்றங்களையும் செய்ய போவதில்லை என டிரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Recommended For You

இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றார்கள், எதற்காக வென்றார்கள், தோற்றவர்கள் எதற்காக தோற்றார்கள் என்பதை அலசி ஆராய்ந்து ஒரு அரசியல் விமர்சகராக கருத்துகளை வெளியிடுவேன் என்றும் டிரம்ப் பதில் அளித்துள்ளார். மேலும் தான் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் வரலாறு காணாத வெற்றி கிடைத்திருக்கும் என ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சியினர் தான் ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். டிரம்பின் உத்தரவுகள், சட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக இவர்கள் செயல்படுவார்கள். இந்நிலையில் பெரும்பான்மை பலம் எதிர்க்கட்சிகள் வசம் இருந்தாலும் அவர்களின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த தனது வீட்டோ (Veto) அதிகாரத்தை பயன்படுத்த போவதாக டிரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், முரண்பாடுகளை தாண்டி இரு கட்சிகளும் இணைந்து செயலாற்றுவதற்கான வழிகள் பிறக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+